டிரைவரின் செயலால் உறைந்துபோன இளம் பெண்... மன்னிப்பு கோரிய ஊபர்.. என்ன நடந்தது..?
இளம்பெண்ணை பிக்-அப் செய்த ஊபர் டிரைவரின் செயல் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

பொது போக்குவரத்தில் அரசு வாகனங்களைக் காட்டிலும் தனியார் வாடகை வாகனங்களே அதிகளவில் பயன்பாட்டில் இருக்கின்றன. அதிலும், குறிப்பாக கால் டாக்ஸி சேவையில் ஓலா மற்றும் ஊபர் ஆகிய நிறுவனங்களின் வாடகை வாகனங்களின் ஆதிக்கமே இந்தியாவில் கோளோச்சி காணப்படுகின்றது.

இந்நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் வாடகை வாகனங்களைப் பார்க்க முடியாத சாலைகளே இந்தியாவில் இருக்காது என்ற அளவிற்கு ஓலா மற்றும் ஊபரின் ஆகிய நிறுவனங்களின் வாடகை வாகனங்கள் நாடு முழுவதும் பரவி காணப்படுகின்றது.

அதிலும், அண்மைக் காலங்களாக மாநிலங்களின் இரண்டாம் நிலை நகரங்கள் என்றழைக்கப்படும் கோவை, மதுரை போன்ற பகுதிகளிலும் இந்நிறுவனங்களின் வாடகை வாகனங்களின் ஆதிக்கம் அதிகரிக்கத்துக் காணப்படுகின்றது.

முன்னதாக சென்னை, பெங்களூரு, புனே, மும்பை, டெல்லி, ஹைதரபாத் உள்ளிட்ட இதுபோன்ற நகரங்களில் அதிகம் பயன்பாட்டில் இருந்தது. ஆனால், நாளுக்கு நாள் இரண்டாம் நிலை நகரங்கள், மூன்றாம் நிலை நகரங்கள் என வாடகை வாகனங்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் விரிவடைந்துக் கொண்டே செல்கின்றது.

இவ்வாறு, என்னதான் இந்நிறுவனங்களின் வாடகை வாகனங்களுக்கான வரவேற்பு ஒருபக்கம் அதிகரித்துக் கொண்டே சென்றாலும், மறுபக்கம் சில முரண்பட்ட கருத்துகளும் உலா வந்தபடி இருக்கின்றது.
அந்தவகையில், ஊபர் டிரைவர் பற்றிய முரண்பட்ட கருத்து ஒன்று தற்போது இணையத்தில் வலம் வந்தபடி இருக்கின்றது. இதுகுறித்த தகவலைதான் இந்த பதிவில் நாம் காணவிருக்கின்றோம்.

மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்தவர் தேஜஸ்வானி நார்க். 28 வயதான இந்த இளம்பெண் செல்போன் ஆன்லைன் ஆப் மூலம் ஊபரின் இன்டர்சிட்டி பயண சேவைக்காக கார் ஒன்றை புக்கிங் செய்துள்ளார். அவர் புனேவில் இருந்து மும்பைக்கு செல்வதற்காக இந்த புக்கிங்கைச் செய்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, ஊபர் தரப்பில் இருந்து தேஜஸ்வானியை பிக்-அப் செய்வதற்கு கார் வந்தது. வழக்கமாக, புனேவில் இருந்து மும்பைச் செல்ல 3 மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளும். ஆகையால், பின்னிருக்கையில் அமர்ந்து சற்று ஓய்வெடுக்கலாம் என நினைத்தார். ஆனால், கார் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஓட்டுநர் தூங்கி வழிந்தததை உணர்ந்தார்.

அவர், தூக்கத்தில் ஸ்டியரிங் வீல் மீது திடீர் தீடீரென சாய்ந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தேஜஸ்வானி உடனடியாக ஓட்டுநர் எழுப்பி, தூங்காமல் காரை ஓட்டும்படி அறிவுறுத்தினார். ஆனால், அதிக உடல் கலைப்பைக் கொண்ட ஓட்டுநர் மீண்டும் தூங்கி வழிந்துள்ளார்.
இதனால், ஆபத்து ஏதேனும் ஏற்பட்டுவிடுமோ என்று அதிர்ச்சியில் உரைந்த தேஜஸ்வானி, காரை நிறுத்தும் கூறினார். பின்னர், ஓட்டுநரை தன்னை காரை இயக்க அனுமதிக்குமாறு கூறினார்.

நீண்ட சமாதானத்திற்கு பின்னர் ஊபர் ஓட்டுநர் காரை ஓட்ட அனுமதித்தார். தொடர்ந்து, ஓட்டுநருக்கு அருகில் இருக்கும் இருக்கையில் ஓட்டுநரை தூங்கவைத்துவிட்டு தேஜஸ்வானி காரை இயக்க ஆரம்பித்தார்.

பின்னர், அவர் வீடு சென்றடையும் அந்த ஓட்டுநர் அதே இருக்கையில் அமர்ந்தவாறு தூங்கியே வந்துள்ளார். இவ்வாறு, தூக்க கலக்கத்துடன் வாகனத்தை இயக்குவது மிகுந்த ஆபத்தான ஒன்று. அதிலும், இந்தியா போன்ற நாடுகளின் ஆபத்து நிறைந்த சாலைகளில் கவனத்துடன் செல்லும்போது பல்வேறு விபத்துகள் அரங்கேறுகின்றன.
இதில், தூங்கி வழிந்தவாறு சென்றோமேயானால் அது பேராபத்தை ஏற்படுத்தும். இதனாலயே, பின்விளைவுகள் ஏற்படுவதற்கு முன்னரே தேஜஸ்வானி தான களத்தில் இறங்கி காரை இயக்கி, வீடு சேர்ந்தார். தொடர்ந்து, ஊபருக்கு இதுவரை திறந்தநிலை வாடிக்கையாளர் சேவை இல்லாத காரணத்தால் டுவிட்டரின் வாயிலாக இந்த ஆபத்து நிறைந்த பயண அனுபவம்குறித்த ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.

பெரும்பாலான வாடகை வாகன ஓட்டுநர்கள் இன்செட்டிவ் பணத்திற்காக நீண்ட வேலை செய்தல் என்ற கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதிலேயே சொற்ப வருமானம் கிடைப்பதால் வாடகை கார் ஓட்டுநர்கள் பல இன்னல்களையும் தாண்டி ஓவர் டைம் வேலையில் ஈடுபடுகின்றனர்.
ஆனால், இது அவருக்கு மட்டுமின்றி அவரை நம்பி காரில் ஏறும் வாடிக்கையாளருக்கும் பேராபத்தை விளைவிக்கும் என்பதை உணராமல் இருக்கின்றனர்.

பலர் இதையறிந்து குடும்ப சூழ்நிலை காரணமாக கடின உழைப்பை வழங்கி வருகின்றனர். இதில் டிரைவர்களுக்கு கிடைப்பது என்னோ சொற்ப வருமானம்தான். ஆனால், அவர்களை வைத்து எந்தவொரு முதலீடும் இன்றி பெரு நிறுவனங்களான ஊபர் மற்றும் ஓலா பெருமளவில் சம்பாதித்து வருகின்றன.
இந்த சம்பவத்தில், சமூக வலைதளம் வாயிலாக மன்னிப்பு கோரிய ஊபர், சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது காவல்துறையில் புகார் அளிக்கும் அறிவுறுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் ஓட்டுநர் மீது மட்டுமின்றி தகுதியற்ற ஓட்டுநரை பணியமர்த்திய ஊபர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக வலதள வாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக, வாடகை வாகன நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் சேவையை முறையாக வழங்காத காரணத்தினாலயே இத்தகைய சூழல் நிலவுவதாகவும் அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுபோன்ற, முரண்பாடான செயலால் வாடிக்கையாளர்களுக்கு ஆபத்தான சூழலே நிலவுகின்றது. மேலும், பாதுகாப்பும் கேள்விக்குறியாகின்றது. இதுமட்டுமின்றி, பயணிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான சூழலும் ஏற்படுகின்றது.

இத்தகைய சூழ்நிலையை தவிர்ப்பது எப்படி..?
பெரும்பாலான ஓட்டுநர்கள் இரவு பகல் பாராமல் பணியை மேற்கொள்வதால் இதுபோன்ற செயல்கள் இந்தியாவில் மிகவும் சர்வசாதரணமான ஒன்றாக மாறிவிட்டது. குறிப்பாக, அதிகாலை அல்லது இரவு நேர பயணங்களின்போதே இத்தகைய சூழல் நிலவுகின்றது. அப்போது, அவர்கள் அதிக சோர்வுடனயே காணப்படுகின்றனர். இதனால், அவர்களால் முழுமையாக சாலையில் கவனத்தைச் செலுத்த முடியாது. மேலும், வந்த வாடிக்கையாளரை குறிப்பிட்ட நேரத்திற்குள் இலக்கிள் சேர்க்க வேண்டும் என்ற அழத்தமும் அவர்களுக்கு இருக்கும்.

இதுபோன்ற சூழ்நிலையில் சில நிமிடங்கள் ஒதுக்கி ஓட்டுநரை முகம் கழுவ அல்லது சூடாக தேநீர் அறுந்த அனுமதிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன்மூலம் அவரது தூக்க கலக்கத்தைச் சற்றே கலைக்க முடியும். தொடர்ந்து, ஓட்டுநரிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டு வந்தால், அவர் தூங்குவதை மறந்து உங்களிடம் பேசுவதில் அதிகம் ஆர்வத்தைக் காட்ட ஆரம்பிப்பார். குறிப்பாக, உங்கள் பேச்சுக்கு அவருக்கு தூக்கத்தை வரவழைத்துவிட இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஏனெனில், பலரின் பேச்சு வெறுப்பையும், தூக்கத்தை அதிகரிக்கும் ஒன்றாகவே இருக்கின்றது. ஆகையால், மிகவும் சுவாரஷ்யமான தகவலை அதுபோன்ற நேரத்தில் பரிமாறிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் உங்களின் இந்த முயற்சி வேலை செய்யும். ஒரு சில நேரங்களில் அதிகப்படியான உடல் கலைப்பு காரணமாக இதுபோன்ற அனைத்து தந்திரங்களும் தோல்வியிலேயே முடியும் இதுபோன்ற நேரங்களில் உங்களது பயணத்தை வேறொரு ஓட்டுநருடன் தொடர்வதே சிறந்தது. இல்லையெனில் இது பேராபத்தை விளைவிக்கலாம்.

இந்தநிலையிலேயே ஆபத்தான சூழ்நிலையை உணர்ந்த தேஜஸ்வானி ஓட்டுநரை காரை நிறுத்தச் சொல்லிவிட்டு அவரே காரை இயக்கி இலக்கை அடைந்துள்ளார். இதுபோன்ற, சூழ்நிலை இக்கட்டாக இருக்கும் நாமே களமிறங்குவதில் எந்தவொரு தவறுமில்லை. இது நமக்கு ஆபத்தை ஏற்படுத்தாமல் இருக்கும்.


Click it and Unblock the Notifications








