மஹிந்திரா தார் காரை 'ஈ' போல் மொய்க்கும் பிரபலங்கள்... தாமாக முன்வந்து வீடியோ வெளியிட்ட இளவரசர்...

அண்மையில் அறிமுகமான மஹிந்திரா தார் காருக்காக உதய்பூர் இளவரசர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

மஹிந்திரா தார் காரை 'ஈ' போல் மொய்க்கும் பிரபலங்கள்... இறங்கி வந்து வீடியோ வெளியிட்ட இளவரசர்...

மஹிந்திரா நிறுவனத்தின் புதுமுக அறிமுகமாக தார் எஸ்யூவி இருக்கின்றது. பெருத்த எதிர்பார்ப்பு மற்றும் ஆவல்களுக்கு மத்தியில் இக்கார் கடந்த 2ம் தேதி அன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அட்டகாசமான ஸ்டைல் மற்றும் அனைவரும் நுகரக்கூடிய விலையில் இக்கார் களமிறக்கப்பட்டிருப்பது மேலும் கவர்ச்சியான தகவலாக அமைந்துள்ளது. இக்காரின் விலைப் பட்டியலைக் கீழே காணலாம்.

மஹிந்திரா தார் காரை 'ஈ' போல் மொய்க்கும் பிரபலங்கள்... இறங்கி வந்து வீடியோ வெளியிட்ட இளவரசர்...

விலைப் பட்டியல்:

Variant AX AX OPT LX
Petrol Diesel Petrol Diesel Petrol Diesel
Std 6-Seater Soft Top ₹9.80 Lakh
6-Seater Soft Top ₹10.65 Lakh ₹10.85 Lakh
4-Seater Convertible Top ₹11.90 Lakh ₹12.10 Lakh ₹12.49 Lakh ₹12.85 Lakh
4-Seater Hard Top ₹12.20 Lakh ₹12.95 Lakh
மஹிந்திரா தார் காரை 'ஈ' போல் மொய்க்கும் பிரபலங்கள்... இறங்கி வந்து வீடியோ வெளியிட்ட இளவரசர்...

இந்த கார் ஆஃப்-ரோடு பயண பிரியர்களை மட்டுமின்றி குடும்பம், தினசரி பயணம் என அனைத்து வகையிலான பயண பிரியர்களையும் கவர்ந்து வருகின்றது. பழைய தலைமுறை மஹிந்திரா தாரைப் போன்று அல்லாமல் எண்ணற்ற வசதிகளையும், அம்சங்களையும் புதிய தலைமுறை தார் பெற்றிருப்பதே இதற்கு முக்கிய காரணம் ஆகும். மேலும், பாதுகாப்பு வசதிகளுக்கும் குறைச்சலின்றி இக்கார் காணப்படுகின்றது.

மஹிந்திரா தார் காரை 'ஈ' போல் மொய்க்கும் பிரபலங்கள்... இறங்கி வந்து வீடியோ வெளியிட்ட இளவரசர்...

எனவேதான் இக்காருக்கு அநேகர் ரசிகர்களாக மாறியிருக்கின்றனர். அந்தவகையில், உதய்பூர் இளவரசரும் இக்கார் மீது தீராத மோகம் கொண்டிருந்ததாகக் கூறப்படுகின்றது. மஹிந்திரா தார் மீது நிலவி வந்த அதீத ஆர்வத்தைத் தொடர்ந்து அவருக்கு, சமீபத்தில் அக்காரை இயக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அப்போது அவருக்கு தார் எஸ்யூவி காரில் என்ன மாதிரியான அனுபவம் கிடைத்தது என்பதை விளக்கும் வகையில் ஒன்றை வீடியோவை அவரே வெளியிட்டுள்ளார். அதுகுறித்த தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

மஹிந்திரா தார் காரை 'ஈ' போல் மொய்க்கும் பிரபலங்கள்... இறங்கி வந்து வீடியோ வெளியிட்ட இளவரசர்...

லக்ஷ்யராஜ் சிங் மேவாரின் அதிகாரப்பூர்வ சேனலிலேயே அந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அவர் "மஹிந்திரா தார் காரை அதிகம் நேசிப்பதாகவும், இந்தியாவில் இந்த புதிய தலைமுறை தார் காரை விற்பனைக்குக் கொண்டு வந்ததற்காக மஹிந்திரா குழுவிற்கு வாழ்த்துக்களையும்" கூறியிருக்கின்றார். மேலும், புதிய தார் காரை பழைய தலைமுரையுடன் ஒப்பிட மாட்டேன் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

மஹிந்திரா தார் காரை 'ஈ' போல் மொய்க்கும் பிரபலங்கள்... இறங்கி வந்து வீடியோ வெளியிட்ட இளவரசர்...

இளவரசர் லக்ஷ்யராஜ் மிகுந்த கார் பிரியர் என்பதால், அவரின் உதய்ப்பூர் அரண்மனை கராஜில் எக்கச்சக்க கார்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. அதில், பெரும்பாலான கார்கள் விண்டேஜ் மற்றும் மாடர்ன் ரக வாகனங்கள் ஆகும். ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் முதல் பல விலையுயர்ந்த கார்களும் அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன.

மஹிந்திரா தார் காரை 'ஈ' போல் மொய்க்கும் பிரபலங்கள்... இறங்கி வந்து வீடியோ வெளியிட்ட இளவரசர்...

இம்மாதிரியான சூழ்நிலையிலேயே அவர் புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி காரை இயக்கிப் பார்த்து அதுகுறித்த தகவலை வீடியோவாக வெளியிட்டிருக்கின்றார். இதில், தார் மீது அளவுகடந்த பிரியத்தை இளவரசர் வைத்திருக்கின்றார் என்பது தெரியவந்துள்ளது. இந்த அதீத ஆர்வத்திற்கு தாரின் முரட்டுத் தனமான கவர்ச்சியான தோற்றமும் ஓர் காரணமாக அமைந்திருக்கின்றது.

இதேபோன்று இக்காரில் அதிக திறனை வெளிப்படுத்தக்கூடிய எஞ்ஜின்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒட்டுமொத்தமாக மஹிந்திரா தார் இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளுடன் விற்பனைக்குக் கிடைக்கிறது. இதில், 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் ஆகிய எஞ்ஜின் தேர்வில் கிடைக்கின்றது. இதில், பெட்ரோல் எஞ்ஜின் அதிகபட்சமாக 152 எச்பி மற்றும் 320 என்எம் டார்க் திறனையும் வெளியேற்றும். அதே நேரத்தில் டீசல் எஞ்ஜின் அதிகபட்சமாக 132 எச்பி பவர் மற்றும் 300 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது. இவ்விரு எஞ்ஜின்களுமே 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் விற்பனைக்கு கிடைக்கிறது.

இதுபோன்ற அட்டகாசமான அம்சங்களை இக்கார் பெற்றிருக்கின்ற காரணத்தினாலயே தாருக்கு இந்தியர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பு கிடைக்க ஆரம்பித்துள்ளது. இதனை மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த ஒரு வாரத்திற்குள்ளாகவே 9 ஆயிரம் யூனிட்டுகளுக்கான முன் பதிவு செய்யப்பட்டது. இந்த டிமாண்டானது, 2 நிமிடங்களுக்கு 3 யூனிட் மஹிந்திரா தார் விற்பனையாவதற்கு சமம் ஆகும். இத்தகைய வரவேற்பை மஹிந்திரா நிறுவனத்தின் எந்த காரும் இதற்கு முன் பெறவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

மஹிந்திரா தார் காரை 'ஈ' போல் மொய்க்கும் பிரபலங்கள்... இறங்கி வந்து வீடியோ வெளியிட்ட இளவரசர்...

இம்மாதிரியான சூழ்நிலையிலேயே உதய்பூர் இளவரசர் லக்ஷ்யராஜ் சிங் மேவார், அக்கார்குறித்த பாசிட்டிவான பதிலை வெளியிட்டிருக்கின்றார். இது அக்காருக்கு மேலும் வரவேற்பை ஏற்படுத்திக் கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவருக்கும், தார் காருக்கும் இடையே ஏற்கனவே ஓர் தொடர்பு இருக்கின்றது. ஆம், கடந்த ஆண்டு, ஆனந்த் மஹிந்திரா ஒரு புதிய தார் 700 இன் சாவியை இளவரசருக்கு வழங்கியிருந்தார். இதில் இருந்தே தாருக்கும், இளவரசருக்கும் இடையே பந்தம் ஏற்பட ஆரம்பித்திருக்கின்றது. இது தற்போதும் நீடிக்க ஆரம்பித்துள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Udaipur Prince Lakshyaraj Singh Mewar Talks About 2020 Mahindra Thar. Read In Tamil.
Story first published: Saturday, October 10, 2020, 7:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X