பிரதமர்னா இப்படி இருக்கணும்... 6 லட்ச ரூபாயை அள்ளி கொடுக்கும் இங்கிலாந்து அரசு... எதற்காக தெரியுமா?

இங்கிலாந்து அரசு 6 லட்ச ரூபாயை ஊக்க தொகையாக வழங்க திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிரதமர்னா இப்படி இருக்கணும்... 6 லட்ச ரூபாயை அள்ளி கொடுக்கும் இங்கிலாந்து அரசு... எதற்காக தெரியுமா?

பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களால் உலகம் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது. காற்று மாசுபாடு பிரச்னைக்கு பெட்ரோல், டீசல் வாகனங்கள்தான், முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றன. எனவே பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு முடிவுரை எழுத உலகின் பல்வேறு நாடுகளின் அரசுகளும் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன.

பிரதமர்னா இப்படி இருக்கணும்... 6 லட்ச ரூபாயை அள்ளி கொடுக்கும் இங்கிலாந்து அரசு... எதற்காக தெரியுமா?

பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாடு குறைந்தால், கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக செலவிடும் தொகையும் குறையும். இதனால் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உலகின் பல்வேறு நாடுகளின் அரசுகளும் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன.

பிரதமர்னா இப்படி இருக்கணும்... 6 லட்ச ரூபாயை அள்ளி கொடுக்கும் இங்கிலாந்து அரசு... எதற்காக தெரியுமா?

குறிப்பாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில், ஐரோப்பிய நாடுகள் மிகவும் தீவிரமாக உள்ளன. ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை மிகவும் அதிகமாக இருப்பதால், அவற்றை வாங்க மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். எனவே எலெக்ட்ரிக் வாகனங்களின் விலையை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை பல்வேறு நாடுகளின் அரசுகள் எடுத்து வருகின்றன.

பிரதமர்னா இப்படி இருக்கணும்... 6 லட்ச ரூபாயை அள்ளி கொடுக்கும் இங்கிலாந்து அரசு... எதற்காக தெரியுமா?

அத்துடன் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க வேண்டும் என்ற ஆர்வத்தை, மக்களிடம் தூண்டும் வகையில் பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க முன்வருவோருக்கு இங்கிலாந்து அரசாங்கம், இந்திய மதிப்பில் சுமார் 5.70 லட்ச ரூபாயை மானியமாக வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர்னா இப்படி இருக்கணும்... 6 லட்ச ரூபாயை அள்ளி கொடுக்கும் இங்கிலாந்து அரசு... எதற்காக தெரியுமா?

இங்கிலாந்து அரசாங்கம் புதிய கார் ஸ்கிராப்பேஜ் திட்டத்தை விரைவில் அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி தங்களது பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை எக்ஸ்சேஞ்ச் செய்து விட்டு, எலெக்ட்ரிக் கார்களை வாங்குபவர்களுக்கு பெரும் ஊக்க தொகையை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரதமர்னா இப்படி இருக்கணும்... 6 லட்ச ரூபாயை அள்ளி கொடுக்கும் இங்கிலாந்து அரசு... எதற்காக தெரியுமா?

பெட்ரோல், டீசல் கார்களை வழங்கி விட்டு எலெக்ட்ரிக் கார்களை வாங்க முன் வருபவர்களுக்கு, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், 6,000 பவுண்டுகள் வரை வழங்குவதற்கு பரிசீலனை செய்து வருவதாக இந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் பார்த்தால், இது சுமார் 5.70 லட்ச ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர்னா இப்படி இருக்கணும்... 6 லட்ச ரூபாயை அள்ளி கொடுக்கும் இங்கிலாந்து அரசு... எதற்காக தெரியுமா?

இங்கிலாந்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த புதிய கார் ஸ்கிராப்பேஜ் பாலிசி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வரும் ஜூலை 6ம் தேதி வெளியிடலாம் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் யோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அன்றைய தினம் புதிய ஸ்கிராப்பேஜ் கொள்கை வெளியிடப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

பிரதமர்னா இப்படி இருக்கணும்... 6 லட்ச ரூபாயை அள்ளி கொடுக்கும் இங்கிலாந்து அரசு... எதற்காக தெரியுமா?

இந்த புதிய கார் ஸ்கிராப்பேஜ் பாலிசி மூலமாக நலிவடைந்து கிடக்கும் ஆட்டோமொபைல் துறையை மீட்டு எடுக்க முடியும் எனவும் இங்கிலாந்து அரசு நம்புகிறது. கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக, உலகின் பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு கொண்டு வரப்பட்டது. இதன் காரணமாக வாகன விற்பனை கடுமையாக சரிவடைந்துள்ளது.

பிரதமர்னா இப்படி இருக்கணும்... 6 லட்ச ரூபாயை அள்ளி கொடுக்கும் இங்கிலாந்து அரசு... எதற்காக தெரியுமா?

இந்த பாதிப்பில் இருந்து மீண்டு வர அரசுகளின் உதவிகளை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றன. ஆட்டோமொபைல் துறை பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. ஆனால் விரைவில் வெளியாகவுள்ள ஸ்கிராப்பேஜ் பாலிசி மூலம் இங்கிலாந்தில் வாகன விற்பனை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

பிரதமர்னா இப்படி இருக்கணும்... 6 லட்ச ரூபாயை அள்ளி கொடுக்கும் இங்கிலாந்து அரசு... எதற்காக தெரியுமா?

ஊக்க தொகை கிடைப்பதால், பலர் தங்கள் பழைய பெட்ரோல், டீசல் கார்களை கொடுத்து விட்டு எலெக்ட்ரிக் கார்களை வாங்க முன்வரலாம். இதன் மூலம் வாகன விற்பனை அதிகரிக்கும் என்பதுடன், சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டையும் அதிகரிக்க முடியும். ஆக மொத்தத்தில், சரியான ஒரு நேரத்தில்தான் இப்படி ஒரு திட்டத்தை இங்கிலாந்து அரசு முன்னெடுக்கிறது.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

English summary
UK Govt To Introduce New Car Scrappage Scheme To Boost Electric Vehicle Sales. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X