காரை பார்க் செய்யும்போது கவனம் தேவை... இல்லனா இப்படிதான் நடக்கும்! போர்ஷே காருக்கு நேர்ந்த சோகம்!

பார்க்கிங் செய்யும்போது லேசாக கவனம் சிதறியதால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போர்ஷே கார் விபத்தில் சிக்கியது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

காரை பார்க் செய்யும்போது கவனம் தேவை... இல்லனா இப்படிதான் நடக்கும்! போர்ஷே காருக்கு நேர்ந்த சோகம்!

விபத்து எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் அரங்கேறலாம் என்பதற்கு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவே சான்று. பார்க்கிங் செய்த நேரத்தில் அரங்கேறிய சிறிய பிழையால் விலையுயர்ந்த கார் சேதமடைந்திருக்கின்றது. இது போர்ஷே நிறுவனத்தின் டேகான் கார் ஆகும்.

காரை பார்க் செய்யும்போது கவனம் தேவை... இல்லனா இப்படிதான் நடக்கும்! போர்ஷே காருக்கு நேர்ந்த சோகம்!

இக்காரே விபத்துக்குள்ளாகியிருக்கின்றது. இத்துடன் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு எஸ்யூவி காரையும் அது கடுமையாகச் சேதப்படுத்தியது. இவ்வாறு இரு கார்களை ஒற்றை போர்ஷே டேகான் கார் மிகக் கடுமையாகச் சேதப்படுத்தியுள்ளது.

காரை பார்க் செய்யும்போது கவனம் தேவை... இல்லனா இப்படிதான் நடக்கும்! போர்ஷே காருக்கு நேர்ந்த சோகம்!

இந்த சம்பவம் இங்கிலாந்து நாட்டின், எசெக்ஸ் கடற்கரை நகரத்தில் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நகரத்தின் பெரும்பாலான பகுதிகள் நம் ஊட்டி, கொடக்கானலைப் போல் மேடான பகுதிகளிலாகவே காட்சியளிக்கும். அந்தவகையில் மேடான பகுதியில் அமைந்திருக்கும் வீட்டிற்கு செல்லும் நோக்கில் போர்ஷே டேகான் காரின் ஓட்டுநர் செல்கின்றனர்.

காரை பார்க் செய்யும்போது கவனம் தேவை... இல்லனா இப்படிதான் நடக்கும்! போர்ஷே காருக்கு நேர்ந்த சோகம்!

ஆரம்பத்தில் மிகப் பொறுமையாக சென்ற அவர், ரிவர்ஸ் எடுத்துவிட்டு மீண்டும் முன்னோக்கி செல்லும் நோக்கில் ஆக்ஸலரேட்டரை அழுத்தியபோதே தவறு ஏற்பட்டது. சற்று அதிக வேகத்துடன் ஆக்ஸலரேஷனை அவர் அழுத்தியன் காரணத்தினால் கார் அதிக வேகத்தில் சீறிப் பாய்ந்தது.

காரை பார்க் செய்யும்போது கவனம் தேவை... இல்லனா இப்படிதான் நடக்கும்! போர்ஷே காருக்கு நேர்ந்த சோகம்!

இதனால், முன்னதாக வீட்டுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் பின் பகுதியில் போர்ஷே டேகான் மோதியது. இதையடுத்து, சாலையோரத்தில் சுமார் 5 அடி பள்ளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு எஸ்யூவி காரின் மேற்பகுதியில் அக்கார் விழுந்தது. இந்த எதிர்பாராத அசம்பாவிதத்தால் மூன்று கார்களும் அதிகளவில் சேதமடைந்தன.

காரை பார்க் செய்யும்போது கவனம் தேவை... இல்லனா இப்படிதான் நடக்கும்! போர்ஷே காருக்கு நேர்ந்த சோகம்!

குறிப்பாக, விலையுயர்ந்த சொகுசு காரான போர்ஷே டேகான் அடைந்த சேதம் சற்று கூடுதல் என்றே கூறலாம். காரின் முன்பகுதி மற்றும் பக்கவாட்டு என குறிப்பிட்ட சில இடங்களில் சேதம் சற்று அதிகமாகவே ஏற்பட்டுள்ளது. நண்பரைச் சந்திப்பதற்காக வந்த இடத்திலேயே இந்த கசப்பான நிகழ்வு அரங்கேறியிருக்கின்றது.

காரை பார்க் செய்யும்போது கவனம் தேவை... இல்லனா இப்படிதான் நடக்கும்! போர்ஷே காருக்கு நேர்ந்த சோகம்!

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. குறிப்பாக, போர்ஷே டேகான் காரை ஓட்டி வந்தவருக்கு சிறு காயம்கூட ஏற்படவில்லை என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். அதேசமயம், இந்த விபத்தினால் போர்ஷே டேகான் காருக்கு சுமார் 61 லட்சம் ரூபாய் மதிப்பிலான சேதமடைந்திருக்கின்றது.

மேலும், கிடைத்த தகவலின்படி இந்த விலையுயர்ந்த கார் கடந்த 5 நாட்களுக்கு முன்னரே வாங்கப்பட்ட புத்தம் புதிய கார் என்றும் கூறப்படுகின்றது. இம்மாதிரியான சூழ்நிலையிலேயே நண்பரின் வீட்டிற்கு வந்தபோது துரதிர்ஷ்டவசமான சம்பவம் அரங்கேறியிருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
UK Porsche Taycan Parking Fail Video. Read In Tamil.
Story first published: Monday, November 23, 2020, 18:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X