Just In
- 1 hr ago
முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா?
- 8 hrs ago
பாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா?
- 9 hrs ago
இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி!! டெல்லியில் மீண்டும் சோதனை
- 11 hrs ago
பிரேக் பிடிக்காததால் லாரியை 3 கிலோ மீட்டர் தூரம் ரிவர்ஸ் கியரில் ஓட்டிய டிரைவர்... கடைசில என்ன ஆச்சு தெரியுமா?
Don't Miss!
- News
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.சாந்தா 93 காலமானார்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 19.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது…
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Movies
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விற்பனையாகாத பிஎஸ்4 கார்கள்... ரூ.125 கோடியை நஷ்ட கணக்கில் எழுதிய மாருதி சுஸுகி!
விற்பனையாகாத பிஎஸ்-4 கார்களின் மதிப்பை நஷ்ட கணக்கில் எழுதி உள்ளது மாருதி சுஸுகி நிறுவனம். இதன் மதிப்பு ரூ.125 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 1ந் தேதி முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த சூழலில், கொரோனா நெருக்கடி காரணமாக, காலக்கெடு நெருங்கியபோது பிஎஸ்4 கார்களை விற்க முடியாத நிலை தயாரிப்பாளர்களுக்கும், டீலர்களுக்கும் ஏற்பட்டது.

இதுதொடர்பாக, வாகன உற்பத்தியாளர் கூட்டமைப்பான சியாம் உச்சநீதிமன்றத்தை அணுகியது. இருப்பில் தேங்கிய பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால், டீலர்களும், தயாரிப்பாளர்களுக்கும் பெரிய நஷ்டம் ஏற்படும் என்றும் தெரிவித்தது.

இதனை பரிசீலித்த உச்சநீதிமன்றம், ஏற்கனவே போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதை மீண்டும் சுட்டிக் காட்டியது. மேலும், லாக் டவுன் முடிந்த பின்னர் 10 நாட்களில் இருப்பில் இருக்கும் 10 சதவீத பிஎஸ்4 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்யலாம் என்று அனுமதித்தது.

இந்த நிலையில், கொரோனா பிரச்னை அதிகரித்ததால், லாக் டவுன் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. வரும் 31ந் தேதி வரை லாக் டவுன் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், தற்போது கொரோனா பாதிப்பு குறைவான பகுதிகளில் டீலர்கள் திறக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது.

இந்த சூழலில், வரும் 31ந் தேதிக்கு பின்னர் லாக் டவுன் நீக்கப்பட்டால், இருப்பில் தேங்கி இருக்கும் பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். ஆனால், அது சந்தேகத்திற்கு இடமானதாகவே இருக்கிறது.

இந்த நிலையில், நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி தனது ஆலைகளில் உள்ள யார்டுகளிலும், டீலர்களிலும் இருப்பில் தேங்கி இருக்கும் பிஎஸ்4 வாகனங்களை நஷ்ட கணக்கில் எழுதி உள்ளது. இதன் மதிப்பு ரூ.125 கோடியாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே, பிஎஸ்4 வாகனங்களை டீலர்கள் தங்களது பெயரில் பதிவு செய்து பயன்படுத்தப்பட்ட வாகனங்களாக விற்பனை செய்யலாம் என்று யோசனை வழங்கி இருந்தது. அத்துடன், தயாரிப்பு நிறுவனம் திரும்பப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பும் டீலர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், வேறு வழி இல்லை எனில், அரசு விதிகளின்படி அழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகளுக்கு இணையான எஞ்சினுடன் கார்களை அறிமுகம் செய்வதில் மாருதி முன்னோடியாக மாறியது. கடந்த ஆண்டு முதலே பிஎஸ்6 கார்களை அறிமுகம் செய்தது. மேலும், கடந்த ஆண்டு இறுதியுடன் பிஎஸ்4 கார்கள் உற்பத்தியை நிறுத்துவதாகவும் அறிவித்தது. இதனிடையே, டீசல் மாடல்கள் விற்பனையையும் மாருதி நிறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.