பறிமுதல் செய்த காரில் ஜாலி ரைடு செய்த போலீஸ்.. கடுப்பான கார் ஓனர் என்ன செய்தார் தெரியுமா... ?

பறிமுதல் செய்த காரில் ஜாலி ரைடு வந்த போலீஸ்காரர்களை அக்காரின் உரிமையாளர் விசித்திரமான முறையில் பழி வாங்கியிருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

பறிமுதல் செய்த காரில் ஜாலி ரைடு செய்த போலீஸ்.. கடுப்பான கார் ஓனர் என்ன செய்தார் தெரியுமா... ?

வாகன தணிக்கையில் ஈடுபடும் போலீஸார், பணியின்போது ஏதேனும் வாகனம் சட்டத்திற்கு புரம்பாக இயக்கப்படுவதை அறிவார்களானால் அந்த வாகனத்தை பறிமுதல் செய்வதோடு, சிறைகாவலிலும் எடுப்பார்கள்.

பொதுவாக கடத்தல், வன்முறை, திருட்டு, முறையான சான்றுகள் இல்லாதது உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடும் வாகனங்கள் மீதே போலீஸார் பறிமுதல் நடவடிக்கையை மேற்கொள்கின்றனர்.

பறிமுதல் செய்த காரில் ஜாலி ரைடு செய்த போலீஸ்.. கடுப்பான கார் ஓனர் என்ன செய்தார் தெரியுமா... ?

அவ்வாறு, பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை காவல்நிலையம் எடுத்துச் சென்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து, வாகனத்திற்கான முறையான ஆவணங்கள் வழங்கப்படுமேயானால் அந்த வாகனம் அதன் உரிமைாயளர்களிடமே ஒப்படைக்கப்படும்.

பறிமுதல் செய்த காரில் ஜாலி ரைடு செய்த போலீஸ்.. கடுப்பான கார் ஓனர் என்ன செய்தார் தெரியுமா... ?

ஆனால், இங்கு ஓர் முற்றிலும் வித்தியாசமான சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸார் சிலர் அந்த சொகுசு காரிலேயே ஜாலி ரைடு உல்லாசமாக சுற்றித் திருந்துள்ளனர்.

பறிமுதல் செய்த காரில் ஜாலி ரைடு செய்த போலீஸ்.. கடுப்பான கார் ஓனர் என்ன செய்தார் தெரியுமா... ?

இதையறிந்த சொகுசு காரின் உரிமையாளர், தனக்கு தெரியாமல் தன்னுடைய விலையுயர்ந்த காரைப் பயன்படுத்திய போலீஸார்களை முற்றிலும் வித்தியாசமான முறையில் பழி வாங்கியுள்ளார். இதுகுறித்த தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

பறிமுதல் செய்த காரில் ஜாலி ரைடு செய்த போலீஸ்.. கடுப்பான கார் ஓனர் என்ன செய்தார் தெரியுமா... ?

இந்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் அரங்கேறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை ஹிந்துஸ்தான் ஆங்கில தளம் வெளியிட்டிருக்கின்றது.

பறிமுதல் செய்த காரில் ஜாலி ரைடு செய்த போலீஸ்.. கடுப்பான கார் ஓனர் என்ன செய்தார் தெரியுமா... ?

பொதுவாக, இப்போது களமிறங்கும் பல வாகனங்கள் அதிக தொழில்நுட்பங்கள் அடங்கிய தயாரிப்பாக விற்பனைக்கு வருகின்றன. குறிப்பாக திருட்டை தவிர்க்கும் நோக்கில் ஜிபிஎஸ் வசதி அனைத்து தொழில்நுட்ப காரிலும் முதன்மை அம்சமாக இணைக்கப்பட்டு வருகின்றன.

பறிமுதல் செய்த காரில் ஜாலி ரைடு செய்த போலீஸ்.. கடுப்பான கார் ஓனர் என்ன செய்தார் தெரியுமா... ?

இந்த அம்சம் தற்போது கார்களில் மட்டுமின்றி இருசக்கர வாகனங்களிலும் இயல்பான ஓர் அம்சமாக வழங்கப்பட்டு வருகின்றது.

இது திருட்டை தவிர்ப்பதுடன் குறிப்பிட்ட ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட வாகனத்தின் நேரடி இருப்பிடத்தைப் பற்றிய தகவலையும் வழங்கும்.

பறிமுதல் செய்த காரில் ஜாலி ரைடு செய்த போலீஸ்.. கடுப்பான கார் ஓனர் என்ன செய்தார் தெரியுமா... ?

இந்த வகையிலான ஓர் காரைதான் லக்னோவில் உள்ள கோம்தி நகர் காவல்நிலைய அதிகாரிகள் குறிப்பிட்ட காரணங்களுக்காக பறிமுதல் செய்திருக்கின்றனர். இந்த கார் 2018ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட எஸ்யூவி ரக சொகுசு காராகும்.

இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக இந்த காரை போலீஸார் கடந்த செவ்வாய்கிழமை (மார்ச் 3) அன்று பறிமுதல் செய்திருந்தனர்.

பறிமுதல் செய்த காரில் ஜாலி ரைடு செய்த போலீஸ்.. கடுப்பான கார் ஓனர் என்ன செய்தார் தெரியுமா... ?

மறுநாள் (புதன்கிழமை) காரை பறிமுதல் செய்த போலீஸாருக்கு விசாரிக்க வேண்டிய வழக்கு ஒன்றிற்காக லக்கிம்பூர் மாவட்டத்தில் உள்ள நாய் பஸ்டி என்ற கிராமத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. இது, போலீஸாரின் கோம்திநகர் காவல்நிலையத்தில் இருந்து 143 கிமீ தொலைவில் இருக்கின்றது.

இந்த இடத்திற்கு அரசின் அதிகாரப்பூர்வமான வாகனத்தைப் பயன்படுத்தாமல் முந்தைய நாள் பறிமுதல் செய்த சொகுசு காரை பயன்படுத்த போலீஸார் திட்டமிட்டனர்.

பறிமுதல் செய்த காரில் ஜாலி ரைடு செய்த போலீஸ்.. கடுப்பான கார் ஓனர் என்ன செய்தார் தெரியுமா... ?

அதன்படி, கோம்தி நகர் காவல்நிலைய துணை ஆய்வாளர் மற்றும் இரு கான்ஸ்டபிள்கள் அந்த காரில் புறப்பட்டனர். இந்நிலையில், சொகுசு காரின் பயன்பாட்டை ஆன்லைன் மொபைல் ஆப் மூலம் பார்வையிட்டுக் கொண்டிருந்த அக்காரின் உரிமையாளர் தன்னுடை கார் இடம்விட்டு இடம் நகர்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தொடர்ந்து, தன்னுடைய காரை பாதுகாக்க நினைத்து காரில் இருக்கும் ஸ்மார்ட் கனெக்ட் வசதியின் உதவியுடன் காரின் எஞ்ஜினை ரிமோட் மூலம் ஆஃப் செய்தார்.

பறிமுதல் செய்த காரில் ஜாலி ரைடு செய்த போலீஸ்.. கடுப்பான கார் ஓனர் என்ன செய்தார் தெரியுமா... ?

இத்துடன், காரின் அனைத்து கதவுகளையும் திறக்க முடியாத வகையில் பூட்டினார். இதையனைத்தையும் மிக மிக நீண்ட இடைவெளியில் இணையத்தின் உதவியின் மூலம் சொகுசு காரின் உரிமையாளர் செய்தார். இதனால், வழக்கு விசாரணைக்காக திருட்டுத் தனமாக காரில் புறப்பட்ட காவலர்கள் மூன்று மணி நேரங்களுக்கு மேலாக காரில் சிக்கித் தவித்தனர்.

பறிமுதல் செய்த காரில் ஜாலி ரைடு செய்த போலீஸ்.. கடுப்பான கார் ஓனர் என்ன செய்தார் தெரியுமா... ?

இதையடுத்து, அதே லக்னோ காவல் நிலையத்தில் தன்னுடைய கார் தவறாக பயன்படுத்தப்பட்டதாக காரின் உரிமையாளர் புகாரளித்தார்.

புகாரைத் தொடர்ந்து, காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க இருப்பதாக கோம்தி நகர் காவல்நிலையத்தின் எஸ்எச்ஓ தெரிவித்தார். மேலும், இந்த சம்பவம் காவல்துறைக்கு ஏற்பட்ட கரும்புள்ளியாக கருதுவதாக அவர் தெரிவித்தார்.

பறிமுதல் செய்த காரில் ஜாலி ரைடு செய்த போலீஸ்.. கடுப்பான கார் ஓனர் என்ன செய்தார் தெரியுமா... ?

சமீப காலமாக அறிமுகம் பல்வேறு வாகனங்களில் இதுபோன்று டிராக்கிங் வசதி கொடுக்கப்பட்டு வருகின்றது. இது திருட்டு போன்ற முரண்பாடான செயல்களில் இருந்து வாகனத்தைக் காக்க மிகவும் உதவியாக இருக்கும். குறிப்பாக, உரிமையாளரின் அனுமதியின்றி ஒருவரையும் காருக்குள் இந்த தொழில்நுட்பம் அனுமதிப்பதில்லை.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
UP Cop Gets Stuck In Seized Car While JoyRiding. Read In Tamil.
Story first published: Saturday, March 7, 2020, 13:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X