நடு ரோட்டில் கதறி அழுத இளம்பெண்.. இதற்காகதான் இந்த நாடகமா! என்னம்மா இப்படி பண்றீங்களேமா...

போலீஸாரின் சோதனையின்போது இளம்பெண் ஒருவர் கத்தி கதறி அழுதுள்ளார்.

நடு ரோட்டில் கதறி அழுத இளம்பெண்.. இதற்காகதான் இந்த நாடகமா! என்னம்மா இப்படி பண்றீங்களேமா...

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலுக்குக் கொண்டுவரப்பட்டு இன்றுடன் ஏறக்குறைய ஒரு மாதங்கள் ஆகின்றன. இதனால் அனைத்து மாநிலங்களும் அதன் வாசலை பூட்டிய நிலையிலேயே இருக்கின்றன. இந்த பூட்டுதலில் இருந்து லேசான தளர்வு வழங்கும் விதமாக, மத்திய அரசு அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டும் நிபந்தனைகளுடன் இயங்கு அனுமதி வழங்கப்பட்டது.

நடு ரோட்டில் கதறி அழுத இளம்பெண்.. இதற்காகதான் இந்த நாடகமா! என்னம்மா இப்படி பண்றீங்களேமா...

இதைத்தொடர்ந்து, அத்தியாவசிய சேவைகளை வழங்குபவர்கள் சிலர் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் அவர்களுக்கும் அதிகபட்ச நிபந்தனைகளுடன் தளர்வு வழங்கப்பட்டது. இருப்பினும் தேசம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த நிலையிலேயே இருக்கின்றது. மேலும், மக்களும் வழக்கம்போல் நடமாட தடை நீடித்த வண்ணம் இருக்கின்றது. இதற்கு, வைரஸ் தொற்று முன்பைக் காட்டிலும் தற்போது அதி தீவிரமாக இருப்பதே முக்கிய காரணம் இருக்கின்றது.

MOST READ: இணையத்தில் லீக்கான 2020 ஹோண்டா சிட்டி மாடலின் உட்புற புகைப்படங்கள்...

நடு ரோட்டில் கதறி அழுத இளம்பெண்.. இதற்காகதான் இந்த நாடகமா! என்னம்மா இப்படி பண்றீங்களேமா...

எனவே, மக்கள் நடமாட்டத்தைக் கட்டுக்குள் வைத்து, வைரஸ் தொற்றைக் குறைக்கும் விதமாக போலீஸார் அதி-தீவிர கண்கானிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள், வெளியே வரும் மக்கள் ஒவ்வொருவரையும் ஆய்வு செய்து, உரிய காரணத்திற்காகதான் வந்துள்ளனரா என்று பரீட்சையம் செய்த பின்னரே முன்னேறி செல்ல அனுமதிக்கின்றனர்.

நடு ரோட்டில் கதறி அழுத இளம்பெண்.. இதற்காகதான் இந்த நாடகமா! என்னம்மா இப்படி பண்றீங்களேமா...

இருப்பினம், ஒரு சிலர் போலீஸாரின் கழுகு பார்வையில் மண்ணை தூவிட்டு எஸ்கேப் ஆகிவிடுகின்றனர். சிலர் போலீஸிடம் சிக்கிக் கொண்டு, செய்வதறியாமல் தப்பிப்பதற்காக நாடகத்தை அரங்கேற்றிவிடுகின்றனர்.

MOST READ: ஸ்கோடா கோடியாக் ஆர்எஸ் மாடலின் புதிய சேலன்ஞ் வெர்சன் விற்பனைக்கு வருகிறது..!

நடு ரோட்டில் கதறி அழுத இளம்பெண்.. இதற்காகதான் இந்த நாடகமா! என்னம்மா இப்படி பண்றீங்களேமா...

அந்தவகையிலான ஓர் சம்பவம்தான் உத்தரபிரதேச மாநிலம், லக்னோவில் அரங்கேறியிருக்கின்றது. இந்த சம்பவத்தில், லாக்டவுணை உறுதி செய்யும் போலீஸார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, அவ்வழியாக வந்த ஹூண்டாய் இயோன் காரை மடக்கி அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

நடு ரோட்டில் கதறி அழுத இளம்பெண்.. இதற்காகதான் இந்த நாடகமா! என்னம்மா இப்படி பண்றீங்களேமா...

ஆனால், காரில் வந்த இளம்பெண்கள் ஆய்வுக்கு ஒத்துழைக்கவில்லை. மேலும், வெளியே செல்வதற்கான ஆவணத்தைக் கேட்டபோது, அதிக கூச்சலிட்டு போலீஸாரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

இருப்பினும், விடாப்பிடியாக போலீஸார் ஆவணத்தைக் கேட்க, நொடிப் பொழுதில் காரை ஓட்டி வந்த இளம்பெண் தப்பிப்பதற்கு வழி இல்லாத காரணத்தால் கதறி கதறி அழ ஆரம்பித்துவிடுகின்றார்.

MOST READ: திணறிய ஸ்கார்பியோ.. அசால்ட் செய்த டாடா டியோகா.. டாடா, டாடாதான்யா.. இத அடிச்சிக்க ஆளே இல்லை...!

நடு ரோட்டில் கதறி அழுத இளம்பெண்.. இதற்காகதான் இந்த நாடகமா! என்னம்மா இப்படி பண்றீங்களேமா...

இளம் பெண்களின் இந்த செயலை பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார்களில் ஒருவர் வீடியோவாக பதிவு செய்திருந்தார். தற்போது அந்த வீடியோதான் இணையத்திலும், ஊடகத்திலும் வைரலாக பரவிக் கொண்டிருக்கின்றது. இதனை நீங்கள் கீழே காணலாம்.

ஆரம்பத்தில் கத்தி கூச்சலிட்ட அப்பெண், போலீஸாரை மிரட்டும் தோனியில் பேசுவதையும் நம்மால் காண முடிகின்றது. இது எடுபடாதநிலையிலேயே அ்வர் அழுகை நாடகத்தை அரங்கேற்றுகின்றார்.

அதேசமயம், இந்த சம்பவத்திற்கு முன்பாக என்ன நடந்தது என்பது பற்றிய தகவல் வெளிவரவில்லை. ஆனால், போலீஸாரிடம் கத்தி கூச்சலிட்ட அப்பெண் (டிரைவர் இருக்கையில் அமர்ந்திருந்தவர்) வாகனத்தின் ஆவணங்களை வெளியே தூக்கி எரிகின்றார்.

இந்த சம்பவத்திற்காக, ஹூண்டாய் இயோன் காரில் வந்த இளம்பெண்களுக்கு ரூ. 3 ஆயிரம் அபராத செல்லாணை உபி போலீஸார் வழங்கியிருக்கின்றனர்.

MOST READ: கவாஸாகியின் முதல் எலெக்ட்ரிக் பைக்கின் பெயர், வீடியோக்கள் வெளியீடு

நடு ரோட்டில் கதறி அழுத இளம்பெண்.. இதற்காகதான் இந்த நாடகமா! என்னம்மா இப்படி பண்றீங்களேமா...

இதற்கான காரணம் முழுமையாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், தேசிய ஊரடங்கை மீறிய குற்றத்திற்காக இத்தகைய அபராதத்தைப் போலீஸார் வழங்கியிருக்கலாம் என கூறப்படுகின்றது.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நிலவி வருகின்றது. மேலும், கசப்பானதாக வைரஸின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இம்மாதிரியான சூழ்நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் சற்றே தவிர்க்க வேண்டியதாக உள்ளது. இந்த சம்பவத்தில் யார்மீது தவறு இருக்கும் என நம்மால் உறுதியாக கூற முடியவில்லை.

நடு ரோட்டில் கதறி அழுத இளம்பெண்.. இதற்காகதான் இந்த நாடகமா! என்னம்மா இப்படி பண்றீங்களேமா...

நாடு முழுவதும் இதுபோன்ற சம்பவங்கள் தினம் தினம் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றது. ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றத்திற்காக வாகனங்களை பறிமுதல் செய்த சம்பவங்கள்கூட அரங்கேறியிருக்கின்றன. இதைத் தவிர்க்கவே சிறப்பு அனுமதி சீட்டு வழங்கப்படுகின்றது. இதைப் பெற்றுச் சென்றால் போலீஸாரின் கடுமையான நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முடியும்..

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
UP Girl Sits On Road & Cries While Cops Check Up - Video. Read In Tamil.
Story first published: Thursday, April 23, 2020, 11:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X