10 லட்ச ரூபாய் பட்ஜெட்டிற்குள் விற்பனைக்கு வரவுள்ள முக்கியமான கார்கள்... எதிர்பார்ப்பு எகிறுது...

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மக்கள் பொது போக்குவரத்தை தவிர்த்து விட்டு, சொந்த கார்களில் பயணம் செய்வதை பாதுகாப்பானதாக கருத தொடங்கியுள்ளனர். இந்த நேரத்தில் 10 லட்ச ரூபாய் பட்ஜெட்டிற்குள் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவுள்ள முக்கியமான கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம்.

10 லட்ச ரூபாய் பட்ஜெட்டிற்குள் விற்பனைக்கு வரவுள்ள முக்கியமான கார்கள்... எதிர்பார்ப்பு எகிறுது...

நிஸான் மேக்னைட் (Nissan Magnite)

மேக்னைட் மூலம் இந்திய சந்தையில் 'கம்பேக்' கொடுக்க நினைக்கிறது நிஸான். நிஸான் நிறுவனம் பெரிதும் நம்பியிருக்கும் தயாரிப்புகளில் ஒன்று மேக்னைட். டிசைனை பொறுத்தவரை இந்த காம்பேக்ட் எஸ்யூவி முன் பகுதியில் க்ரோம் சூழ்ந்த பெரிய க்ரில் அமைப்பை பெற்றுள்ளது. அத்துடன் L வடிவ எல்இடி டிஆர்எல்கள் உடன் எல்இடி ஹெட்லேம்ப்பையும் இந்த காம்பேக்ட் எஸ்யூவி பெற்றுள்ளது.

10 லட்ச ரூபாய் பட்ஜெட்டிற்குள் விற்பனைக்கு வரவுள்ள முக்கியமான கார்கள்... எதிர்பார்ப்பு எகிறுது...

டெயில்லேம்ப்களும் முழு எல்இடி யூனிட்கள்தான். அத்துடன் க்ரூஸ் கண்ட்ரோல், 8.0 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், க்ளைமேட் கண்ட்ரோல், ரியர் ஏசி வெண்ட்கள், ரியர் ஆர்ம்ரெஸ்ட் உள்ளிட்ட வசதிகளையும் நிஸான் மேக்னைட் பெற்றுள்ளது. இதுதவிர டிரைவரின் இருக்கைக்கு உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

10 லட்ச ரூபாய் பட்ஜெட்டிற்குள் விற்பனைக்கு வரவுள்ள முக்கியமான கார்கள்... எதிர்பார்ப்பு எகிறுது...

1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் தேர்வை நிஸான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி பெற்றுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 100 பிஎஸ் பவரையும், 160 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. 5 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி டிரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் இந்த இன்ஜின் கிடைக்கும். இதுதவிர 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் இன்ஜின் தேர்வும் வழங்கப்படலாம்.

10 லட்ச ரூபாய் பட்ஜெட்டிற்குள் விற்பனைக்கு வரவுள்ள முக்கியமான கார்கள்... எதிர்பார்ப்பு எகிறுது...

மேனுவல் கியர் பாக்ஸ் தேர்வில் மட்டுமே இந்த இன்ஜின் கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிஸான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவியின் விலை 6 லட்ச ரூபாயில் இருந்து தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, கியா சொனெட், ஹூண்டாய் வெனியூ உள்ளிட்ட கார்களுடன் இது போட்டியிடும்.

10 லட்ச ரூபாய் பட்ஜெட்டிற்குள் விற்பனைக்கு வரவுள்ள முக்கியமான கார்கள்... எதிர்பார்ப்பு எகிறுது...

டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் (Tata Altroz EV)

தற்போது விற்பனையில் உள்ள அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் கார் அடிப்படையில் உருவாகும் எலெக்ட்ரிக் கார் இது. இந்த இரண்டு கார்களுக்கும் ஒரு சில வித்தியாசங்கள் மட்டுமே காணப்படுகின்றன. அதே சமயம் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் பவர்ட்ரெயினை இது பெற்றுள்ளது. 95 kw எலெக்ட்ரிக் மோட்டாரும், 30.2 kWh லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன.

10 லட்ச ரூபாய் பட்ஜெட்டிற்குள் விற்பனைக்கு வரவுள்ள முக்கியமான கார்கள்... எதிர்பார்ப்பு எகிறுது...

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 312 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும். இது அராய் அமைப்பால் சான்று வழங்கப்பட்ட ரேஞ்ச் ஆகும். ஆனால் அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் இதை விட அதிக ரேஞ்ச் வழங்கும் என டாடா கூறுகிறது. டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரின் விலை 9 லட்ச ரூபாயில் இருந்து தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

10 லட்ச ரூபாய் பட்ஜெட்டிற்குள் விற்பனைக்கு வரவுள்ள முக்கியமான கார்கள்... எதிர்பார்ப்பு எகிறுது...

ரெனால்ட் கிகர் (எச்பிசி) (Renault Kiger) (HBC)

நிஸான் மேக்னைட்டை போல் இதுவும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்தான். எச்பிசி என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்படும் வரும் இந்த காம்பேக்ட் எஸ்யூவி, கிகர் என்ற பெயரில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, கியா சொனெட், ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஆகிய கார்களுடன் ரெனால்ட் கிகர் போட்டியிடும்.

10 லட்ச ரூபாய் பட்ஜெட்டிற்குள் விற்பனைக்கு வரவுள்ள முக்கியமான கார்கள்... எதிர்பார்ப்பு எகிறுது...

அத்துடன் நிஸான் மேக்னைட் மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆகிய கார்களுக்கும் சவால் அளிக்கும். ரெனால்ட் கிகர் காரில், 1.0 லிட்டர், மூன்று-சிலிண்டர், டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படலாம். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 99 பிஎச்பி பவரையும், 160 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6.5 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் ரெனால்ட் கிகர் எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Upcoming Cars Under Rs.10 Lakh - Nissan Magnite, Tata Altroz EV, Renault Kiger. Read in Tamil
Story first published: Friday, November 13, 2020, 5:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X