2021ல் இந்தியாவில் அறிமுகமாக வரிசைக்கட்டி நிற்கும் எலக்ட்ரிக் கார்கள்!! மாருதி முதல் டெஸ்லா வரை...

எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை இந்தியாவில் கடந்த சில வருடங்களில் உண்மையில் கவனிக்கத்தக்க அளவில் வளர்ச்சியை கண்டுள்ளது. இருப்பினும் எலக்ட்ரிக் கார்கள், மிகவும் குறைவாக, விரல்விட்டு எண்ணிவிடும் அளவில்தான் உள்ளன. ஆனால் இந்த நிலை வெகு காலத்திற்கு நீடிக்கப்போவதில்லை.

2021ல் இந்தியாவில் அறிமுகமாக வரிசைக்கட்டி நிற்கும் எலக்ட்ரிக் கார்கள்!! மாருதி முதல் டெஸ்லா வரை...

ஏனெனில் இந்தியாவில் தயாரிப்புகளை சந்தைப்படுத்தி வரும் பெரும்பான்மையான கார் தயாரிப்பு நிறுவனங்கள் அவற்றின் 2021ஆம் ஆண்டிற்கான திட்டங்களில் குறைந்தது ஒரு எலக்ட்ரிக் வாகனத்தையாவது கொண்டுள்ளன. இந்த வகையில் 2021ல் இந்தியாவில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் சில இவி கார்களை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

2021ல் இந்தியாவில் அறிமுகமாக வரிசைக்கட்டி நிற்கும் எலக்ட்ரிக் கார்கள்!! மாருதி முதல் டெஸ்லா வரை...

மஹிந்திரா இகேயூவி100

2020 ஆட்டோ எக்ஸ்போவில் மஹிந்திரா நிறுவனத்தின் சார்பில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த இகேயூவி100 எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை ரூ.8.25 லட்சத்தில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளதாக மஹிந்திரா ஏற்கனவே கூறியிருந்தது.

2021ல் இந்தியாவில் அறிமுகமாக வரிசைக்கட்டி நிற்கும் எலக்ட்ரிக் கார்கள்!! மாருதி முதல் டெஸ்லா வரை...

இதனால் இந்தியாவில் மலிவான எலக்ட்ரிக் காராக விற்பனையை துவங்கவுள்ள இகேயூவி100-இன் தோற்றம் அதன் வழக்கமான பெட்ரோல் வெர்சனில் இருந்து பெரிய அளவில் மாற்றப்படவில்லை. மிக விரைவில், 2021 ஏப்ரல் மாதத்திற்கு உள்ளாக அறிமுகமாகிவிடும் என எதிர்பார்க்கப்படும் இந்த மஹிந்திரா தயாரிப்பிற்கு டாடா நெக்ஸான் இவி போட்டியாக விளங்கும்.

2021ல் இந்தியாவில் அறிமுகமாக வரிசைக்கட்டி நிற்கும் எலக்ட்ரிக் கார்கள்!! மாருதி முதல் டெஸ்லா வரை...

மாருதி வேகன்ஆர் எலக்ட்ரிக்

இந்திய சந்தையில் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் பட்ஜெட் ரக இவி கார்களில் மிக முக்கியமானது மாருதி சுஸுகியின் வேகன்ஆர் எலக்ட்ரிக். ஊரடங்கு தளர்விற்கு பிறகு தீவிரமாக சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டுவரும் இந்த எலக்ட்ரிக் கார்தான் மாருதி சுஸுகியின் முதல் முழு-எலக்ட்ரிக் காராகும்.

2021ல் இந்தியாவில் அறிமுகமாக வரிசைக்கட்டி நிற்கும் எலக்ட்ரிக் கார்கள்!! மாருதி முதல் டெஸ்லா வரை...

இந்த எலக்ட்ரிக் காரின் அறிமுகம் குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் மாருதி நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. மாருதி வேகன்ஆர் ஹேட்ச்பேக் காரின் இந்த எலக்ட்ரிக் வெர்சனின் அறிமுகம் ரூ.8 லட்சம் என்ற ஆரம்ப விலையுடன் 2021ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியின் மத்தியில், செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் இருக்கலாம்.

2021ல் இந்தியாவில் அறிமுகமாக வரிசைக்கட்டி நிற்கும் எலக்ட்ரிக் கார்கள்!! மாருதி முதல் டெஸ்லா வரை...

ரெனால்ட் க்விட் எலக்ட்ரிக்

பிரெஞ்சு நாட்டை சேர்ந்த ரெனால்ட்டின் ஹேட்ச்பேக் காராக க்விட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் இவி வெர்சன் தற்சமயம் சீனாவில் விற்பனையில் உள்ள நிலையில் ஐரோப்பாவில் 2021ஆம் ஆண்டின் முதல் பாதியிலும் இந்தியாவில் ஆண்டு இறுதியிலும் விற்பனைக்கு வரலாம்.

2021ல் இந்தியாவில் அறிமுகமாக வரிசைக்கட்டி நிற்கும் எலக்ட்ரிக் கார்கள்!! மாருதி முதல் டெஸ்லா வரை...

இந்தியாவில் விற்பனைக்கு வரும் முதல் ரெனால்ட் எலக்ட்ரிக் காராக விளங்கவுள்ள க்விட் எலக்ட்ரிக்கில் 26.8kWh லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு வழங்கப்படவுள்ளது. இது சிங்கிள்-முழு சார்ஜில் அதிகப்பட்சமாக 270கிமீ தூரத்திற்கு காரை இயக்கி செல்லும்.

2021ல் இந்தியாவில் அறிமுகமாக வரிசைக்கட்டி நிற்கும் எலக்ட்ரிக் கார்கள்!! மாருதி முதல் டெஸ்லா வரை...

டாடா அல்ட்ராஸ் இவி

இதன் பெயரை வைத்தே கண்டுப்பிடித்துவிட முடியும், இது சந்தையில் பிரபலமான டாடா ப்ரீமியம் ஹேட்ச்பேக் காரான அல்ட்ராஸின் எலக்ட்ரிக் வெர்சன் என்று. 2021ல் அல்ட்ராஸ் இவி கார் விற்பனைக்கு வந்திவிடும் என கூறப்பட்டாலும், உறுதியான தேதி எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

2021ல் இந்தியாவில் அறிமுகமாக வரிசைக்கட்டி நிற்கும் எலக்ட்ரிக் கார்கள்!! மாருதி முதல் டெஸ்லா வரை...

இந்த காரில் டாடா நெக்ஸான் இவி காரில் தற்சமயம் வழங்கப்பட்டுள்ள எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரி தொகுப்பு அப்படியே பொருத்தப்படலாம். ஆனால் விலை நெக்ஸான் இவி காரை காட்டிலும் சற்று குறைவாக ரூ.10- 12 லட்சத்தில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

2021ல் இந்தியாவில் அறிமுகமாக வரிசைக்கட்டி நிற்கும் எலக்ட்ரிக் கார்கள்!! மாருதி முதல் டெஸ்லா வரை...

ஆடி இ-ட்ரான்

கொரோனா பரவல் இல்லையென்றால், 2020ஆம் வருடத்திலேயே ஆடி இ-ட்ரான் என்ற எலக்ட்ரிக் எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுக வேண்டியது. ஆனால் அது தற்போது 2021ஆம் ஆண்டிற்கு தள்ளி போகியுள்ளது.

2021ல் இந்தியாவில் அறிமுகமாக வரிசைக்கட்டி நிற்கும் எலக்ட்ரிக் கார்கள்!! மாருதி முதல் டெஸ்லா வரை...

புதிய ஆடி இ-ட்ரானில் சிங்கிள்-முழு சார்ஜில் 436கிமீ தூரத்திற்கு காரை இயக்கி செல்லக்கூடிய 95kWh லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்த ஆடி எலக்ட்ரிக் காரின் விலை ரூ.1 கோடி அளவில் நிர்ணயிக்கப்படலாம்.

2021ல் இந்தியாவில் அறிமுகமாக வரிசைக்கட்டி நிற்கும் எலக்ட்ரிக் கார்கள்!! மாருதி முதல் டெஸ்லா வரை...

ஜாகுவார் ஐ-பேஸ்

சில வெளிநாட்டு சந்தைகளில் ஏற்கனவே விற்பனையை துவங்கிவிட்ட ஐ-பேஸ் மூலமாக இந்தியாவில் தனது எலக்ட்ரிக் வாகன பயணத்தை துவங்கவுள்ளதாக ஜாகுவார் நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது. மேலும் இதன் அறிமுகம் 2021 மார்ச் மாதத்தில் இருக்கலாம் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2021ல் இந்தியாவில் அறிமுகமாக வரிசைக்கட்டி நிற்கும் எலக்ட்ரிக் கார்கள்!! மாருதி முதல் டெஸ்லா வரை...

இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ள ஆடி இ-ட்ரான் எஸ்யூவி மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் இக்யூசி கார்களுக்கு போட்டியாக விளங்கவுள்ள ஜாகுவார் ஐ-பேஸ் எஸ்யூவி காரில் 90kWh லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 395 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய இந்த பேட்டரி அதிகப்பட்சமாக காரை முழு சார்ஜில் 470கிமீ தூரத்திற்கு இயக்கி செல்லும்.

2021ல் இந்தியாவில் அறிமுகமாக வரிசைக்கட்டி நிற்கும் எலக்ட்ரிக் கார்கள்!! மாருதி முதல் டெஸ்லா வரை...

டெஸ்லா மாடல் 3

டெஸ்லா, எலக்ட்ரிக் கார்களை தயாரிப்பதில் உலகளவில் நிபணத்துவம் பெற்ற நிறுவனம். இந்தியாவில் கால் பதிக்க பல ஆண்டுகளாக திட்டங்களை வகுத்து வரும் இந்த நிறுவனத்தில் இருந்து ஒரு வழியாக மாடல் 3 என்ற பெயர் கொண்ட எலக்ட்ரிக் கார் 2021ல் அறிமுகமாகும் சமீபத்தில்கூட தகவல் ஒன்று வெளியாகி இருந்தது.

2021ல் இந்தியாவில் அறிமுகமாக வரிசைக்கட்டி நிற்கும் எலக்ட்ரிக் கார்கள்!! மாருதி முதல் டெஸ்லா வரை...

இதற்காக பெங்களூருவில் புதிய தொழிற்சாலை ஒன்றை நிறுவ முயற்சித்துவரும் டெஸ்லா எந்தவொரு டீலர்களின் தொடர்பும் இன்றி நேரடியாக தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவுள்ளது. இருப்பினும் காருக்கான முன்பதிவுகள் அடுத்த 2022ஆம் ஆண்டின் துவக்கத்தில்தான் நம் நாட்டில் துவங்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன. டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை ரூ.60 லட்சத்தில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

2021ல் இந்தியாவில் அறிமுகமாக வரிசைக்கட்டி நிற்கும் எலக்ட்ரிக் கார்கள்!! மாருதி முதல் டெஸ்லா வரை...

இவ்வாறான புதிய புதிய அறிமுகங்களினால் 2021ல் எலக்ட்ரிக் வாகன பிரிவு பெரிய அளவில் வளர்ச்சியினை காணவுள்ளது என்பது மட்டும் உறுதி. இவற்றில் எத்தனை எலக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் 2021ல் அறிமுகமாகும், அவற்றிற்கான சார்ஜிங் நிலையங்களை நிறுவும் பணியில் நிறுவனங்கள் எவ்வாறு செயல்பட போகின்றன என்பதை எல்லாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

Most Read Articles

English summary
Upcoming Electric Car Launches In India In 2021
Story first published: Tuesday, December 29, 2020, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X