அடுத்தடுத்து புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவுள்ள டொயோட்டா... 5 புதிய கார்கள் வெளிவரவுள்ளன...

முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா, எடியோஸ், எடியோஸ் லிவா மற்றும் கரோல்லா அல்டிஸ் உள்ளிட்ட மாடல்களின் விற்பனையை சமீபத்தில் இந்தியாவில் நிறுத்தியிருந்தது. இதனால் தற்போது இந்நிறுவனம் தற்போதைய அதன் லைன்அப்-ஐ தான் நம்பியுள்ளது.

அடுத்தடுத்து புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவுள்ள டொயோட்டா... 5 புதிய கார்கள் வெளிவரவுள்ளன...

இருப்பினும் விற்பனை நிறுத்தங்களை சரிகட்ட இந்த 2020ஆம் வருடத்தில் மொத்தம் 5 புதிய தயாரிப்பு மாடல்களை அறிமுகப்படுத்த டொயோட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எண்ட்ரீ-லெவல் யாரிஸ் மாடலில் இருந்து ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வரை அடங்கவுள்ள இந்நிறுவனத்தின் இந்த ஆண்டிற்கான அந்த 5 மாடல்களை இந்த செய்தியில் காண்போம்.

அடுத்தடுத்து புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவுள்ள டொயோட்டா... 5 புதிய கார்கள் வெளிவரவுள்ளன...

ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட்

2020 மத்தியில் ஃபார்ச்சூனரின் மிட்-லைஃப் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை உலகளாவிய சந்தையில் டொயோட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. ஆனால் இந்த ஃபேஸ்லிஃப்ட் கார் நமது சந்தைக்கு இந்த வருட இறுதியில் தான் வருகை தரும். சமீபத்திய இந்த காரின் சோதனை ஓட்டத்தினை இந்நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

அடுத்தடுத்து புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவுள்ள டொயோட்டா... 5 புதிய கார்கள் வெளிவரவுள்ளன...

டொயோட்டாவின் சமீபத்திய தயாரிப்பு மாடல் என்பதை வெளிப்படுத்தும் விதமாக சில காஸ்மெட்டிக் மாற்றங்களை 2020 ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் காரில் நிச்சயம் எதிர்பார்க்கலாம். இருப்பினும் இதன் என்ஜின் தேர்வுகளாக வழக்கமான 2.7 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.8 லிட்டர் டீசல் என்ஜின்கள் தான் வழங்கப்படவுள்ளன.

அடுத்தடுத்து புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவுள்ள டொயோட்டா... 5 புதிய கார்கள் வெளிவரவுள்ளன...

இதில் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 166 பிஎச்பி பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 177 பிஎச்பி மற்றும் 420 என்எம் டார்க் திறனை மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வழங்கும். அதேநேரம் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸில் இந்த டீசல் என்ஜின் 450 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தவல்லது.

அடுத்தடுத்து புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவுள்ள டொயோட்டா... 5 புதிய கார்கள் வெளிவரவுள்ளன...

ரீ-பேட்ஜ்டு மாருதி விட்டாரா பிரெஸ்ஸா

ஜப்பானிய நிறுவனங்களான டொயோட்டா மற்றும் சுசுகி ஏற்படுத்தி கொண்ட கூட்டணியின் விளைவாக முன்னதாக மாருதி சுசுகி பலேனோ மாடல் டொயோட்டா க்ளான்ஸா-வாக உருமாற்றம் அடைந்து இந்திய சந்தையில் அறிமுகமானது. இதனை தொடர்ந்து தற்போது மாருதியின் விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி கார் டொயோட்டா பேட்ஜில் இன்னும் சில மாதங்களில் அறிமுகமாகவுள்ளது.

அடுத்தடுத்து புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவுள்ள டொயோட்டா... 5 புதிய கார்கள் வெளிவரவுள்ளன...

விட்டாரா பிரெஸ்ஸாவின் தோற்ற அடிப்படையில் இந்த கார் உருவாக்கப்பட்டாலும், அப்டேட்டான க்ரில், திருத்தியமைக்கப்பட்ட பம்பர்கள் உள்ளிட்ட சில காஸ்மெட்டிக் மாற்றங்களை டொயோட்டா நிறுவனம் கொண்டுவரும். என்ஜினிற்கு அதே 1.5 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் தான் பொருத்தப்படவுள்ளது. இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 105 பிஎச்பி பவர் மற்றும் 138 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.

அடுத்தடுத்து புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவுள்ள டொயோட்டா... 5 புதிய கார்கள் வெளிவரவுள்ளன...

ரீபேட்ஜ்டு மாருதி சியாஸ்

விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி மாடலை தொடர்ந்து இந்த கூட்டணியால் மாருதி நிறுவனத்தின் சியாஸ் மாடல் டொயோட்டா மாடலாக வெளியாகவுள்ளது. இந்த புதிய ரீபேட்ஜ்டு வெர்சன் கார் இந்த வருடத்தின் இறுதியில் அறிமுகமாகவுள்ள நிலையில் டொயோட்டா நிறுவனத்தில் இருந்து தற்சமயம் யாரிஸ் மாடல் மட்டும் தான் தற்போதைக்கு செடான் ரக காராக விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்து புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவுள்ள டொயோட்டா... 5 புதிய கார்கள் வெளிவரவுள்ளன...

மாருதி சியாஸ் மாடலிலும் விட்டாரா பிரெஸ்ஸாவின் 1.5 லிட்டர் என்ஜின் தான் பொருத்தப்படுகிறது. சியாஸின் ரீ-பேட்ஜ்டு வெர்சனின் என்ஜின் அமைப்பிலும் எந்த மாற்றமும் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தடுத்து புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவுள்ள டொயோட்டா... 5 புதிய கார்கள் வெளிவரவுள்ளன...

யாரிஸ் டாக்ஸி வெர்சன்

ஏற்கனவே கூரியதுபோல், எடியோஸ் மற்றும் கரோல்லா அல்டிஸ் மாடல்களின் விற்பனை நிறுத்தப்பட்டுவிட்டதால் இந்திய சந்தையில் இப்போதைக்கு டொயோட்டா நிறுவனத்தில் இருந்து செடான் மாடலாக யாரிஸ் மட்டுமே சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது. யாரிஸ் மாடலுக்கு ஒரே விதமான பயன்பாட்டிற்காக எந்த வேரியண்ட்டும் இல்லை.

அடுத்தடுத்து புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவுள்ள டொயோட்டா... 5 புதிய கார்கள் வெளிவரவுள்ளன...

ஆனால் இந்த பார்வையை யாரிஸ் டாக்ஸி வெர்சன் மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாக்ஸி பயன்பாட்டிற்கு பிரத்யேகமாக உருவாக்கப்படவுள்ள இந்த புதிய கார் விரைவில் சந்தைக்கு வரவுள்ளது. 107 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய தற்போதைய 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினை அப்படியே பெறவுள்ள இந்த எண்ட்ரீ-லெவல் மாடலுக்கு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் தான் ஒரே தேர்வாக வழங்கப்படவுள்ளது.

அடுத்தடுத்து புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவுள்ள டொயோட்டா... 5 புதிய கார்கள் வெளிவரவுள்ளன...

இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட்

தற்போதைய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மாடல் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக விற்பனையில் உள்ளது. இதுமட்டுமில்லாமல் தற்சமயம் இதன் பிரிவில் வெற்றிடம் உருவாகியுள்ளதால், இதனையும் நிரப்பும் விதமாக இந்த மாடலின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை இந்த வருட இறுதியிலோ அல்லது அடுத்த வருட துவக்கத்திலோ அறிமுகப்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அடுத்தடுத்து புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவுள்ள டொயோட்டா... 5 புதிய கார்கள் வெளிவரவுள்ளன...

இந்த ஃபேஸ்லிஃப்ட் காரில் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் சில காஸ்மெட்டிக் கொண்டுவரப்படவுள்ளதால், நிச்சயம் இந்த காரை புத்துணர்ச்சியான தோற்றத்தில் எதிர்பார்க்கலாம். இன்னோவா க்ரிஸ்ட்டாவின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனில் தற்போதைய 2.4 லிட்டர் டீசல் என்ஜின் தான் வழங்கப்படவுள்ளது.

அடுத்தடுத்து புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவுள்ள டொயோட்டா... 5 புதிய கார்கள் வெளிவரவுள்ளன...

149 பிஎச்பி பவரையும், 343 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 2.7 லிட்டர் பெட்ரோல் (164 பிஎச்பி/245 என்எம் டார்க்திறன்) என்ஜின் தேர்வையும் இந்த புதிய கார் பெறவுள்ளது. ட்ரான்ஸ்மிஷனிற்கு 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டரும் தேர்வாக இணைக்கப்படவுள்ளது.

அடுத்தடுத்து புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவுள்ள டொயோட்டா... 5 புதிய கார்கள் வெளிவரவுள்ளன...

இதில் பெரும்பான்மையான புதிய மாடல்கள் வழக்கமான என்ஜின் அமைப்பை தான் பெற்று வரவுள்ளன. டொயோட்டாவின் இந்த எதிர்கால அறிமுக மாடல்களில் எதாவது மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
5 Upcoming Toyota Cars In India 2020 – Fortuner Facelift To Innova Facelift
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X