சொந்த மாநில மக்களை அழைத்து வர இரு மடங்கு கட்டணம்... உறைந்துபோன வெளிநாடு ரிட்டர்ன் மக்கள்!
வந்தே பாரத் திட்டத்தின்கீழ் வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பிய மக்களை சொந்த மாநிலத்திற்கு அழைத்து செல்ல உச்சபட்ச கட்டணத்தை ஓர் மாநில அரசு நிர்ணயித்துள்ளது. இதனால், வெளிநாடு ரிட்டர்ன் மக்கள் ஷாக் ட்ரீட்மெண்ட் வழங்கியதைப் போல் உறைந்திருக்கின்றனர். அது எந்த மாநிலம், எவ்வளவு கட்டணம் கோரியுள்ளது என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் காணலாம்.

கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் போக்குவரத்து தடைபட்ட நிலையேக் காணப்படுகின்றது. சுமார் ஏறத்தாழ 50 நாட்களுக்கும் மேலாக இந்த நிலைதான் நாடு முழுவதும் நீடித்து வருகின்றது. இதனால், வெளிமாநிலங்களில் தங்கி பணி புரியும் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

வந்தே பாரத் திட்டத்தின்கீழ் வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் மூலம் மக்களை சொந்த நாடு அழைத்து வரும் அரசு, தற்போதுதான் ஏழை எளிய மக்களை அவரவர்களின் மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்த நடவடிக்கைக்கு அதிக நாட்கள் காலம் ஏற்பட்டதால் பெரும்பாலான மக்கள் கொடி நடையாகவே சொந்த மாநிலங்களுக்கு திரும்ப ஆரம்பித்திருக்கின்றனர். இதுகுறித்த செய்திகள் நாள்தோறும் வெளிவந்த வண்ணமே இருக்கின்றது. ஒவ்வொருவரும் ஆயிரம், இரண்டாயிரம் என பல ஆயிரம் கிலோ மீட்டர்களைக் கொடி நடையாகவே நடந்து கடந்துக் கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறு, நடந்தே பயணிக்கும் ஒரு சிலரை அந்தந்த மாநிலங்களின் எல்லைப் பகுதியில் பணியில் இருக்கும் போலீசார்கள், அவர்களை வழியிலேயே தடுத்து நிறுத்தி தேவையான உணவு உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். மேலும், அருகில் இருக்கும் தற்காலிக தங்கும் முகாம்களில் அவர்களை தங்கை வைக்கின்றனர். சில நேரங்களில் கொரோனா பாதிப்பு பற்றி ஆய்வை செய்துவிட்டு அவர்களை மேற்கொண்டு செல்ல அனுமதிக்கின்றனர்.

இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து வீடு திரும்புவர்களுக்கு கூடுதல் வசதி ஏற்படுத்திக் கொடுக்கும் விதமான முயற்சியில் ஒரு சில மாநிலங்கள் ஈடுபட்டு வருகின்றன.
அந்தவகையில், உத்தரபிரேதச மாநிலம், அதன் யுபிஎஸ்ஆர்டிசி மூலம் தலைநகர் டெல்லி விமான நிலையத்தில் இருந்து காசியபாத் திரும்புவதற்கு சிறப்பு டாக்சி சேவையைத் தொடங்கியிருக்கின்றது.

இந்த சிறப்பு கேப் சேவைக்கு அது கட்டணம் வசூலிக்கவும் திட்டமிட்டுள்ளது. உச்சபட்சமாக டெல்லி விமான நிலையத்தில் இருந்து நொய்டா அழைத்து வர ரூ. 10 ஆயிரம் என்ற தொகையை அது நிர்ணயித்திருக்கின்றது.

உபி அரசின் இந்த நடவடிக்கை சாமானிய மக்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாத திட்டம் என கருத்துக்கள் பரவிய வண்ணம் இருக்கின்றது. இந்த உச்சபட்ச கட்டணம் ஒரு வழித் தடத்திற்கானது என்பது குறிப்பிடத்தகுந்தது.

டெல்லி, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கும், நொய்டாவிற்கும் 250 கிமீ இடைவெளி உள்ளது. இந்த இடைவெளிக்கே இந்த உச்சபட்ச தொகை கோரப்பட்டுள்ளது. மேலும், ரூ. 10 ஆயிரம் என்பது செடான் ரக காருக்கான கட்டணம் மட்டும்தான். இதுவே, எஸ்யூவி காரை புக் செய்தால் ரூ. 12 ஆயிரத்தைக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

இதுதவிர, கூடுதலாக பயணிக்கும் ஒவ்வொரு கிமீ-க்கும் ரூ. 40ஐ கூடுதல் கட்டணமாக செடான் ரக காருக்கும், ரூ. 50ஐ எஸ்யூவி கார்களுக்கும் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, ஒவ்வொரு காரிலும் இரு பயணிகள் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது, சமூக இடைவெளியைக் கட்டாயம் கடைபிடித்த வண்ணம் உபி-யின் இந்த கேப் சேவையில் பயணிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

டாக்சி சேவையைப் போலவே பேருந்து சேவையையும் அது அறிவித்துள்ளது. இதில், ஏசி அல்லாத பேருந்துகளில் பயணிக்க ரூ. 1,000 கட்டணத்தையும், ஏசி உள்ள பேருந்துகளுக்கு ரூ. 1,320ஐ கட்டணமாகவும் வசூலிக்க அது திட்டமிட்டுள்ளது. இந்த கட்டணங்கள் 100 கிமீ உள்ளாக பயணிப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஒரு வேலை 100 கிமீட்டர்களையும் கடந்து ஒருவர் பயணிக்க வேண்டுமானால் அவர் இரு மேற்கூறிய கட்டணத்தில் இரு மடங்கு செலுத்த வேண்டியிருக்கும்.

இப்பேருந்து சமூக இடைவெளியுடன் பயணிக்கின்ற வகையில் 26 இருக்கைகள் மட்டுமே பயன்படுத்தப்பட இருக்கின்றது. வழக்கமான நேரங்களில் இதே பேருந்தில் 36 பயணிப்பார்கள். ஆனால், தற்போது கொரோனா அச்சம் காரணமாக 26 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட இருக்கின்றனர். இதில் ஏற்படும் இழப்பை ஈடு செய்யும் விதமாகவே இரு மடங்கு கட்டணம் வசூலிக்க யுபிஎஸ்ஆர்டிசி திட்டமிட்டிருக்கின்றது.

இதுகுறித்து யுபிஎஸ்ஆர்டிசி-யின் தலைமை அதிகாரி ராஜ் சேகர் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, "2020 மே 9 ஆம் தேதி நொய்டா மற்றும் காசியாபாத்தில் உள்ள பிராந்திய மேலாளர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அதில், 'வந்தே பாரத் மிஷனின்' ஒரு பகுதியாக நாடு திரும்பும் மக்களுக்கு விமான நிலையத்திலிருந்து பேருந்துகள் மற்றும் டாக்சிகள் வசதி செய்யப்படுவது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் சிறப்பு வசதியை டெல்லி அரசாங்கத்தால் கிளியரன்ஸ் அனுமதி பெற்ற மற்றும் கோவிட் -19 அறிகுறிகள் அல்லாதவர்களுக்கு மட்டுமே இது கிடைக்கும்" என்றார்.

விமான நிலையங்களில் கோவிட்-19 பற்றிய ஆய்வு நடத்துப்பட்டாலும் வீட்டுக்கு வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் கட்டாயம் 14 நாட்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்க வேண்டும் என இந்திய அரசு தெரிவித்துள்ளது. அதேசமயம், தற்போது வெளிநாடுகளில் இருந்து திரும்புபவர்களை டெல்லியிலேயே வைத்து 14 நாட்கள் தனிமைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் பின்னரே அவர்களால் கிளியரன்ஸ் பெற்று சொந்த மாநிலம் திரும்ப முடியும் என கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications