சேல்ஸ் தூள் கௌப்புது... சொகுசு கார்கள் செகண்ட் ஹேண்ட்டில் மிக குறைந்த விலைக்கு வரும் ரகசியம் இதுதான்

சமீப காலமாக பயன்படுத்தப்பட்ட கார்கள் சந்தைக்கு, சொகுசு கார்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்து கொண்டுள்ளன. அது ஏன்? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

சேல்ஸ் தூள் கௌப்புது... சொகுசு கார்கள் செகண்ட் ஹேண்ட்டில் மிக குறைந்த விலைக்கு வரும் ரகசியம் இதுதான்

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பேருந்து, ஆட்டோ மற்றும் டாக்ஸி போன்ற பொது போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்துவதற்கு பொதுமக்கள் தயங்குகின்றனர். இதன் காரணமாக புதிய கார்களின் விற்பனை உயரும் என சமீப காலமாக வெளியாகி வரும் பல்வேறு ஆய்வுகள் அடித்து கூறி வருகின்றன. ஆனால் புதிய கார்களை விட யூஸ்டு கார்களின் விற்பனை பெரிய அளவில் அதிகரித்து வருகிறது.

சேல்ஸ் தூள் கௌப்புது... சொகுசு கார்கள் செகண்ட் ஹேண்ட்டில் மிக குறைந்த விலைக்கு வரும் ரகசியம் இதுதான்

குறிப்பாக குஜராத் மாநிலத்தில் செகண்ட் ஹேண்ட் கார்களின் விற்பனை தற்போது டாப் கியரில் சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உண்மையில் கொரோனா வைரஸ் பிரச்னையால் கடுமையான பொருளாதார நெருக்கடியை பலரும் சந்தித்து வரும் சூழலில், புதிய கார்களை விட பயன்படுத்தப்பட்ட கார்கள் நல்ல தேர்வாகவே பார்க்கப்படுகின்றன.

சேல்ஸ் தூள் கௌப்புது... சொகுசு கார்கள் செகண்ட் ஹேண்ட்டில் மிக குறைந்த விலைக்கு வரும் ரகசியம் இதுதான்

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பலர் வேலையை இழந்துள்ளனர். இன்னும் பலர் சம்பள குறைப்பு பிரச்னையை எதிர்கொண்டு வருகின்றனர். இவ்வாறான சூழலில் பலருக்கும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே புதிய கார்களை வாங்க திட்டமிட்டிருந்த பலர் தற்போது, அந்த முடிவில் இருந்து பின்வாங்கி வருகின்றனர்.

சேல்ஸ் தூள் கௌப்புது... சொகுசு கார்கள் செகண்ட் ஹேண்ட்டில் மிக குறைந்த விலைக்கு வரும் ரகசியம் இதுதான்

எனினும் கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக பொது போக்குவரத்தை பயன்படுத்துவதில் அச்சம் இருப்பதால், கார் அவசியமாகிறது. அப்படிப்பட்டவர்களின் கவனத்தை பயன்படுத்தப்பட்ட கார்களின் சந்தை ஈர்த்து வருகிறது. வாங்கி ஒரு வருடம் மட்டுமே ஆன கார் ஒன்று, சுமார் 25 சதவீத குறைவான விலையில் கிடைத்தால், அதை வீட்டிற்கு ஓட்டி செல்வதில் மக்களுக்கு தயக்கம் இருப்பதில்லை.

சேல்ஸ் தூள் கௌப்புது... சொகுசு கார்கள் செகண்ட் ஹேண்ட்டில் மிக குறைந்த விலைக்கு வரும் ரகசியம் இதுதான்

குஜராத்தை சேர்ந்த கட்டிட வடிவமைப்பாளர் ஒருவர் 39 லட்ச ரூபாய் மதிப்புடைய எஸ்யூவி ரக கார் ஒன்றை வாங்குவதற்காக பணம் ஒதுக்கியிருந்தார். ஆனால் அவர் வாங்க திட்டமிட்டிருந்த அதே கார் சுமார் 25 சதவீத குறைவான விலையில் கிடைக்கிறது என்ற தகவல் தெரிந்தவுடன், புதிய கார் வாங்கும் திட்டத்தை அவர் ஒதுக்கி வைத்து விட்டார்.

சேல்ஸ் தூள் கௌப்புது... சொகுசு கார்கள் செகண்ட் ஹேண்ட்டில் மிக குறைந்த விலைக்கு வரும் ரகசியம் இதுதான்

25 சதவீத குறைவான விலையில் கிடைத்த கார், கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் வாங்கப்பட்டது ஆகும். அதாவது இன்னும் ஒரு ஆண்டு கூட ஆகவில்லை. இதுகுறித்து அவர் கூறுகையில், ''இந்த கார் 14,000 கிலோ மீட்டர்கள் மட்டுமே ஓடியுள்ளது. அத்துடன் வாரண்டி காலத்திற்கு உள்ளாகவும் இருக்கிறது. எனவே இந்த காரை வாங்குவதுதான் நல்ல முடிவாக இருக்கும்'' என்றார்.

சேல்ஸ் தூள் கௌப்புது... சொகுசு கார்கள் செகண்ட் ஹேண்ட்டில் மிக குறைந்த விலைக்கு வரும் ரகசியம் இதுதான்

கொரோனா வைரஸ் பிரச்னை ஏற்பட்டதற்கு பின்னர் ஆட்டோமொபைல் துறை மிக கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. வாகனங்களின் விற்பனை குறைந்துள்ளதால், முன்னணி நிறுவனங்களே திணறலுக்கு ஆளாகியுள்ளன. நிலைமை இப்படி இருக்கையில் பயன்படுத்தப்பட்ட கார்களின் சந்தையோ பிரம்மாண்டமான வளர்ச்சியை சந்தித்து வருகிறது.

சேல்ஸ் தூள் கௌப்புது... சொகுசு கார்கள் செகண்ட் ஹேண்ட்டில் மிக குறைந்த விலைக்கு வரும் ரகசியம் இதுதான்

பயன்படுத்தப்பட்ட கார்களின் சந்தையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது சுமார் 50 சதவீதம் என்கிற அளவிற்கு, விற்பனை உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்தவுடன், புதிய கார்களின் விற்பனை அதலபாதாளத்திற்கு சென்றது. தற்போது அந்த நிலைமையில் சிறிது சிறிதாக முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.

சேல்ஸ் தூள் கௌப்புது... சொகுசு கார்கள் செகண்ட் ஹேண்ட்டில் மிக குறைந்த விலைக்கு வரும் ரகசியம் இதுதான்

அதாவது புதிய கார்களின் விற்பனை சற்று மீண்டுள்ளது. ஆனால் புதிய கார் சந்தையுடன் ஒப்பிடும்போது பயன்படுத்தப்பட்ட கார்களின் சந்தை, பாதிப்பில் இருந்து வேகமாக மீண்டு பிரம்மாண்ட வளர்ச்சியை சந்தித்து வருகிறது. பயன்படுத்தப்பட்ட கார்களின் சந்தையில், விலை குறைவான மாடல்களின் விற்பனையுடன் சேர்த்து, சொகுசு கார்களின் விற்பனையும் அதிகரித்து வருகிறது.

சேல்ஸ் தூள் கௌப்புது... சொகுசு கார்கள் செகண்ட் ஹேண்ட்டில் மிக குறைந்த விலைக்கு வரும் ரகசியம் இதுதான்

பயன்படுத்தப்பட்ட கார்கள் சந்தையில், பிரீமியம் செக்மெண்ட் மாடல்களின் விற்பனை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது சுமார் 25 முதல் 30 சதவீதம் உயர்ந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து பயன்படுத்தப்பட்ட கார்களை விற்பனை செய்யும் டீலர்கள் கூறுகையில், ''பொது போக்குவரத்தை பயன்படுத்துவதில் உள்ள அச்சம் காரணமாக யூஸ்டு கார்களின் விற்பனை உயர்ந்துள்ளது.

சேல்ஸ் தூள் கௌப்புது... சொகுசு கார்கள் செகண்ட் ஹேண்ட்டில் மிக குறைந்த விலைக்கு வரும் ரகசியம் இதுதான்

குறிப்பாக நடுத்தர குடும்பத்திற்கு ஏற்ற சிறிய கார்கள் அதிகளவில் விற்பனையாகின்றன. அதே சமயம் பயன்படுத்தப்பட்ட கார்கள் சந்தையில் கிடைக்கும் சொகுசு வாகனங்களுக்கும் தேவை இருக்கவே செய்கிறது. தற்போது பல லட்ச ரூபாய் மதிப்புடைய சொகுசு கார்கள் கூட எங்களுக்கு அதிகளவில் விற்பனைக்கு வந்து கொண்டுள்ளன.

சேல்ஸ் தூள் கௌப்புது... சொகுசு கார்கள் செகண்ட் ஹேண்ட்டில் மிக குறைந்த விலைக்கு வரும் ரகசியம் இதுதான்

சம்பளம் குறைப்பு காரணமாக, இந்த கார்களை வாங்கிய நபர்களால், மாத தவணையை முறையாக செலுத்த முடியவில்லை. எனவே அவர்கள் எங்களிடம் கார்களை விற்பனை செய்கின்றனர். பயன்படுத்தப்பட்ட கார் சந்தையில் இந்த சொகுசு வாகனங்கள் குறைவான விலையில் கிடைப்பதால், அவற்றை வாங்கவும் பலர் விரும்புகின்றனர்.

சேல்ஸ் தூள் கௌப்புது... சொகுசு கார்கள் செகண்ட் ஹேண்ட்டில் மிக குறைந்த விலைக்கு வரும் ரகசியம் இதுதான்

அதே சமயம் கிராமப்புற பகுதிகளை சேர்ந்த மற்றும் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதில் தயக்கம் உள்ள வாடிக்கையாளர்கள் 2 முதல் 2.5 லட்ச ரூபாய் வரையுள்ள சிறிய கார்களை எங்களிடம் தேர்வு செய்கின்றனர். எங்களிடம் வரும் 90 சதவீத வாடிக்கையாளர்கள், புதிய கார் வாங்குவதற்கு திட்டமிட்டிருந்தவர்கள்தான்.

சேல்ஸ் தூள் கௌப்புது... சொகுசு கார்கள் செகண்ட் ஹேண்ட்டில் மிக குறைந்த விலைக்கு வரும் ரகசியம் இதுதான்

எனினும் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கும் முடிவுக்கு அவர்கள் தற்போது வந்து விட்டனர்'' என்றனர். இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக பொது போக்குவரத்தை பயன்படுத்துவதில் தயக்கம் இருப்பதால், இரு சக்கர வாகனங்களின் விற்பனையும் ஓரளவிற்கு உயர்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
English summary
Used Cars Sales In Top Gear - Here Is Why. Read in Tamil
Story first published: Friday, September 4, 2020, 2:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X