பெருசா அலட்டிக்காதீங்க... உங்க சப்ப காரைகூட உலக தரத்திற்கு உயர்த்தலாம்... அதுவும் சில ஆயிரங்களில்...

மிக சாதாரண காரைகூட உலக தரம் வாய்ந்த காராக மாற்றும் வகையில் பல்வேறு அக்ஸசெரீஸ்கள் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அவைகுறித்த தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

பல லட்சங்கள் எல்லாம் தேவையில்லை... சில ஆயிரங்கள் இருந்தாலே போதும் உங்க காரை ஆடம்பரமாக மாற்றலாம்...

நம்மில் பலர் பிசினஸ் காரணமாக வீடுகளில் இருப்பதைக் காட்டிலும் அதிக நேரத்தை பிரயாணத்திலும், வாகனத்திலுமே செலவழிக்கின்றோம். இது, சிறு-குறு வணிகர்கள் முதல் டைமண்ட் வியாபாரி வரை அனைவருக்கும் பொருந்தும். இதில், பெரிய பிசினஸ் மேன்கள் அவர்களின் அதிகப்படியான பயணத்திற்கேற்ப வாகனங்களைப் பயன்படுத்துவர். அதாவது, நாள் முழுக்க பயணித்தாலும் களைப்பை ஏற்படுத்தாத நவீன அம்சங்களைக் கொண்ட வாகனங்களைப் பயன்பாட்டுக்கு வைத்திருப்பர்.

பல லட்சங்கள் எல்லாம் தேவையில்லை... சில ஆயிரங்கள் இருந்தாலே போதும் உங்க காரை ஆடம்பரமாக மாற்றலாம்...

அது களைப்பை மட்டுமின்றி நீண்ட பயணம் செய்கின்றோம் என்ற உணர்வைக் கூட வழங்காது. ஆனால், சாதாரண நடுத்தர மக்களால் அத்தகைய அம்சங்களைக் கொண்ட விலையுயர்ந்த கார்களை வாங்க முடியாது. அதேசமயம், அவர்களுக்கு உதவியளிக்கும் விதமாக சந்தையில் பல்வேறு அக்ஸசெரீஸ்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அவை, நீண்ட தூர பயணத்தைக்கூட உற்சாகமானதாக மாற்ற உதவும்.

பல லட்சங்கள் எல்லாம் தேவையில்லை... சில ஆயிரங்கள் இருந்தாலே போதும் உங்க காரை ஆடம்பரமாக மாற்றலாம்...

குறிப்பாக, அவற்றைப் பொருத்துவதன் மூலம் தங்களின் நீண்ட தூர பயணத்தைக்கூட மிகவும் அலாதியான ஒன்றாக மாற்ற முடியும். அந்தவகையில், சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும் 8 முக்கிய அக்ஸசெரீஸ்களைப் பற்றிய தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம். வாருங்கள் அவை என்னென்ன என்பதைக் காணலாம்.

பல லட்சங்கள் எல்லாம் தேவையில்லை... சில ஆயிரங்கள் இருந்தாலே போதும் உங்க காரை ஆடம்பரமாக மாற்றலாம்...

சோலார் மின் விசிறி

விலை: ரூ. 450 முதல் 799 வரை

பெரும்பாலான கார்கள் ஏசி அம்சத்துடன் விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால், ஒரு சிலருக்கு ஏசி என்றாலே ஆகாது. அத்தகையோருடு பயணிக்கும்போது ஏசியை ஆன் செய்வது என்பது முடியாத ஓர் காரியம். மீறி ஏசியை ஆன் செய்தால் அவர்களுக்கு குமட்டல் மற்றும் மயக்கம் போன்ற ஒவ்வாமை பிரச்னைகள் ஏற்படும். இம்மாதிரியான சூழலுக்கு உதவுவதற்காகவே இந்த மின் விசிறிகள் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றன.

பல லட்சங்கள் எல்லாம் தேவையில்லை... சில ஆயிரங்கள் இருந்தாலே போதும் உங்க காரை ஆடம்பரமாக மாற்றலாம்...

இதனை இயங்க வைக்க தனியாக மின்சார இணைப்புக் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏனெனில் அது சூரிய சக்தியில் இயங்கும் தன்மைக் கொண்டது. இது சந்தையில் ரூ. 450 முதல் 799 ரூபாய் வரையிலான விலையில் விற்கப்பட்டு வருகின்றது. இதனை கார் ஜன்னல்களில் வைத்துப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உள்ளிருக்கும் காரை வெளியேற்றவும் பயன்படும். எனவே, பலர் இதனை எக்சாஸ்ட் ஃபேனாக பயன்படுத்தவே வாங்கி வருகின்றனர்.

பல லட்சங்கள் எல்லாம் தேவையில்லை... சில ஆயிரங்கள் இருந்தாலே போதும் உங்க காரை ஆடம்பரமாக மாற்றலாம்...

எலெக்ட்ரிக் குக்வேர்

விலை: ரூ. 3,500

நிச்சயமாக நாங்கள் அடித்து கூறுகின்றோம் நாம் பார்க்கவிருக்கும் இந்த எலெக்ட்ரிக் குக்வேரானது நீண்ட தூர பயணத்தை மேற்கொள்வோரின் ஆகச் சிறந்த தேவையான அம்சமாக இது இருக்கிறது. கொரோனா இக்கட்டான சூழ்நிலையில் நாம் வெளியில் பயணிக்க நேர்ந்தால் உணவகங்கள் இல்லாத சூழலில் சிக்க நேரிடும் இம்மாதிரியான நேரத்தில் இதுபோன்ற உபகரணங்களே மிகுந்த பயனளிக்கும்.

பல லட்சங்கள் எல்லாம் தேவையில்லை... சில ஆயிரங்கள் இருந்தாலே போதும் உங்க காரை ஆடம்பரமாக மாற்றலாம்...

இது இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்க மட்டுமில்லைங்க, தேவையற்ற செலவுகளைக் குறைத்து ஆரோக்யமான உணவைச் சமைத்துச் சாப்பிடவும் இது மிகுந்த உதவியை அளிக்கும். இதனை பயன்படுத்த தனி மின்சார இணைப்பு தேவைப்படுமே என எண்ண வேண்டாம். ஏனெனில் இதனைப் பயன்படுத்த செல்போனைச் சார்ஜ் செய்ய வழங்கப்பட்டிருக்கும் போர்ட்டோ போதுமானது. இந்த சாதனம் தற்போது சந்தையில் ரூ. 3,500க்கும் அதிகமான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

பல லட்சங்கள் எல்லாம் தேவையில்லை... சில ஆயிரங்கள் இருந்தாலே போதும் உங்க காரை ஆடம்பரமாக மாற்றலாம்...

ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே

விலை: ரூ. 2,500

நீண்ட தூர பயணங்களில் தேவைப்படும் மற்றுமொரு மிக முக்கியமான அம்சமாக ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே உள்ளது. இதனை மிக விலையுயர்ந்த கார்களில் மட்டுமே தற்போது பார்க்க முடியும். அதேசமயம் வெளிச் சந்தையில் மிகக் குறைந்த விலையிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது நாம் செல்லும் பயணத்திற்கான வழிகாட்டியாக செயல்படும். அதை தலை கீழே இறக்காமலேயே பார்க்க உதவும்.

பல லட்சங்கள் எல்லாம் தேவையில்லை... சில ஆயிரங்கள் இருந்தாலே போதும் உங்க காரை ஆடம்பரமாக மாற்றலாம்...

அதாவது, ஓட்டுநருக்கு தேவையான தகவலை விண்ட்ஷீல்டு இந்த கருவி ஒளிரச் செய்யும். இதனால், ஓட்டுநர் எந்தவொரு இடையூறும் இன்றி அனைத்து தகவலையும் பெற முடியும். இது சந்தையில் ரூ. 2,500 என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.

பல லட்சங்கள் எல்லாம் தேவையில்லை... சில ஆயிரங்கள் இருந்தாலே போதும் உங்க காரை ஆடம்பரமாக மாற்றலாம்...

ஆன்டி கிளார் விண்ட்ஷீல்டு

விலை: ரூ. 200 முதல் ரூ. 500 வரை

நெடுந்தூர பயணத்தை மேற்கொள்ளும் கார்களுக்கு மட்டுமில்லைங்க இந்த ஆன்டி-கிளார் கண்ணாடிகள் அனைத்து கார்களுக்குமே தேவையான ஒன்றாக இருக்கின்றது. இது, அதிக வெளிச்சத்தைக் குறைத்து தெளிவான பார்வையை வழங்க உதவும்.

பல லட்சங்கள் எல்லாம் தேவையில்லை... சில ஆயிரங்கள் இருந்தாலே போதும் உங்க காரை ஆடம்பரமாக மாற்றலாம்...

அதாவது, எதிர் சூரிய ஒளி மற்றும் ஹை பீம் மின் விளக்குகளால் ஏற்படும் பார்வைக் குறைப்பாட்டைத் தவிர்க்க இந்த ஆண்டி-கிளார் கண்ணாடிகள் உதவுகின்றன. இது சந்தையில் ரூ. 200 முதல் ரூ. 500 வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

பல லட்சங்கள் எல்லாம் தேவையில்லை... சில ஆயிரங்கள் இருந்தாலே போதும் உங்க காரை ஆடம்பரமாக மாற்றலாம்...

லேசர் ஸ்டாப் மின் விளக்கு

விலை ரூ. 300 முதல் ரூ. 500 வரை

நாம் மேலே பார்த்த பிற அம்சங்களைப் போலவே இந்த ஸ்டாப் லைனர் மின் விளக்கும் மிகுந்த பயனளிக்க கூடியதாக உள்ளது. இது உங்கள் காருக்கும் பிறரின் கார்களுக்கும் இடைவெளியை வகுக்க உதவும். விபத்து போன்ற தேவையற்ற இடர்களைத் தவிர்க்க இதுபோன்ற லேசர் ஸ்டாப் மின் விளக்கை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது அவசியமாக உள்ளது.

பல லட்சங்கள் எல்லாம் தேவையில்லை... சில ஆயிரங்கள் இருந்தாலே போதும் உங்க காரை ஆடம்பரமாக மாற்றலாம்...

எல்இடி பெயர்பலகை

விலை ரூ. 2,000 முதல் ரூ. 7,000 வரை

நவீன கால பெயர் பலகையாக எல்இடி திரைகள் இருக்கின்றன. இதற்கு காரில் என்ன வேலை என்ற கேள்வி உங்களுக்கு எழும்பலாம். இந்த எல்இடி பெயர் பலகை, காரில் குழுந்தை இருக்கிறது எங்களை டிஸ்டர்ப் செய்யாமல் செல்லுங்கள் என்பதை அறிவிக்க மற்றும் பாதுகாப்பான பொருட்களை எடுத்துச் செல்கிறோம் சற்று இடைவெளியுடன் செல்லுங்கள் என்பது போன்ற தகவலை வெளிப்படையாக அறிவிக்கவே இந்த அம்சம் உதவுகின்றது.

பல லட்சங்கள் எல்லாம் தேவையில்லை... சில ஆயிரங்கள் இருந்தாலே போதும் உங்க காரை ஆடம்பரமாக மாற்றலாம்...

இந்த அம்சத்தை இயக்க காரில் இருக்கும் 12வோல்ட் பாயிண்டே போதுமானது. அதாவது செல்போனை சார்ஜ் செய்யும் விதமாக வழங்கப்பட்டிருக்கும் போர்ட்டுகளே இதற்கு போதுமானதாக உள்ளது. இது சந்தையில் ரூ. 2 ஆயிரம் முதல் 7 ஆயிரம் ரூபாய் வரையிலான விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இது தேவையற்ற வாக்குவதங்களை ஏற்படுவதைத் தவிர்க்க உதவும்.

பல லட்சங்கள் எல்லாம் தேவையில்லை... சில ஆயிரங்கள் இருந்தாலே போதும் உங்க காரை ஆடம்பரமாக மாற்றலாம்...

போர்ட்டபிள் பேட்டரி சார்ஜர்:

விலை: ரூ. 4,000 முதல் ரூ. 12,000 வரை

ஒவ்வொரு காரிலும் கட்டாயம் இருக்க வேண்டிய விஷயமாக இந்த போர்டபிள் பேட்டரி சார்ஜர் உள்ளது. இது காரின் பேட்டரி செயலிழந்துவிட்டால், அதை சார்ஜ் செய்து புத்துயிர் வழங்க உதவும். எனவே, கார்களில் இருக்க மிகச் சிறந்த ஓர் கருவியாக இது பார்க்கப்படுகின்றது. இது ஓர் பவர்பேங்க் போன்று செயல்படக்கூடிய சார்ஜர் ஆகும். இது சந்தையில் ரூ. 4 ஆயிரம் முதல் ரூ. 12 ஆயிரம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

பல லட்சங்கள் எல்லாம் தேவையில்லை... சில ஆயிரங்கள் இருந்தாலே போதும் உங்க காரை ஆடம்பரமாக மாற்றலாம்...

சோலார் சன்-ஷேட்ஸ்

விலை: ரூ. 2,000 முதல் ரூ. 10,000 வரை

காரை சுட்டெறிக்கும் வெயிலில் நிறுத்தி வைத்தாலும்கூட கூலாக வைத்திருக்க இந்த சோலார் சன்-ஷேட்கள் உதவியாக இருக்கின்றன. இது சூரிய ஒளியை நேரடியாக காருக்குள் புகுவதை தடுக்கும். எனவே, காருக்குள் பசுமை வீடு விளைவு என்பது நேராது. எனவே, காருக்குள் அதிக வெப்பமும் காணப்படாது. இதனை காரின் அளவிற்கு ஏற்ப கஸ்டமைஸ் செய்தும் ஒரு சில நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

பல லட்சங்கள் எல்லாம் தேவையில்லை... சில ஆயிரங்கள் இருந்தாலே போதும் உங்க காரை ஆடம்பரமாக மாற்றலாம்...

இதேபோன்ற காரில் உறங்குவதற்கேற்ப மெத்தை மற்றும் தலையணைப் போன்ற விஷயங்களும் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அவையனைத்தும் உங்களின் ரெகுலர் பயணத்தை சௌகரியமானதாக மாற்ற உதவும். இதனை விலையுயர்ந்த கார்களில் தேடப்போனால் பல லட்சங்களை நாம் செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆனால், மிக கணிசமான ஆயிரங்களைச் செலவு செய்தாலே பல்வேறு பிரீமியம் அம்சங்களை சாதாரண கார்களில்கூட கொண்டுவர முடியும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Useful & Affordable Car Accessories. Read In Tamil.
Story first published: Wednesday, June 24, 2020, 13:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X