Just In
- 49 min ago
நடராஜன் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா தார் பரிசு... சொந்த செலவில் வழங்குகிறார் ஆனந்த் மஹிந்திரா...
- 1 hr ago
பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...
- 2 hrs ago
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- 2 hrs ago
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- Movies
கோடியில் புரளும் 'கார்த்தி'யின் இயக்குனர்கள்.. பின்னணி என்ன? அதிரடியாய் அலசும் இளம் விமர்சகர்!
- News
நல்ல கூட்டம் வேறு.. மாஸ்க் அணியாத மோடி.. குவியும் விமர்சனங்களும், அக்கறை அறிவுரைகளும்!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Lifestyle
உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இந்த கசப்பு உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்..!
- Sports
ஹப்பா கடைசியில் மனம் மாறிய சென்னை.. சிஎஸ்கே இறக்கிய பெரிய கேம் பிளான்.. கசிந்த தகவல்!
- Finance
வாராக் கடன்களை வசூலிக்க தனி வங்கி.. மோடி அரசின் புதிய திட்டம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தயவுசெய்து இந்த தவற மட்டும் செய்யாதீங்க ப்ளீஸ்! குடித்துவிட்டு காரை ஓட்டுவதைவிட இது மிக ஆபத்தானதாம்!
குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டுவதைவிட மிகவும் ஆபத்தானது என புதிய தகவல் ஒன்றை இங்கிலாந்தைச் சேர்ந்த ஐஏஎம் எனும் அமைப்பு அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஃபுல்லாக மது குடித்துவிட்டு காரை ஓட்டுவதைக் காட்டிலும் மிகவும் ஆபத்தானது என நம்மில் பலர் மிக சாதாரணமாக காரில் செய்யக்கூடிய ஓர் செயலை புதிய ஆராய்ச்சி ஒன்று குறிப்பிட்டுள்ளது. உலகில் இதுவரை அரங்கேறிய பெரும்பாலான விபத்துகளுக்கு முக்கிய காரணி இதுமட்டுமே என்பது கூடுதல் ஷாக்களிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இதுவரை நம்மில் பலருமே குடித்து விட்டு வாகனத்தை ஓட்டுவதுதான் அதிக விபத்தை ஏற்படுத்துவதாக நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அதுதான் இல்லை. தற்போதைய மாடர்ன் கார்களில் வழங்கப்படும் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றே அதற்கான காரணம். தொடுதிரை இன்ஃபோடெயின்மமென்ட் சிஸ்டத்தை பலர் கேள்விப்பட்டிருப்பீர்கள், இந்த அம்சமே பல விபத்துகளுக்கு முக்கிய காரணியாக இருக்கின்றது.

இது உங்களுக்கு ஷாக்களிக்கும் வகையில் இருக்கலாம். மேலும், இந்த அம்சம் எப்படி விபத்துகளுக்கு காரணமாகும் என்ற கேள்வியும் உங்களுக்கு எழும்பலாம். இதுகுறித்த விளக்கத்தைதான் தொடர்ச்சியாக நாம் பார்க்கவிருக்கின்றோம்.
முன்பெல்லாம் லக்சூரி மற்றும் பிரீமியம் கார்களில் மட்டுமே தொடுதிரை இன்ஃபோடெயின்மமென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், இப்போது இந்த நிலை மாறியிருக்கின்றது.

மிகச்சிறிய ஹேட்ச்பேக் கார்களில்கூட இந்த தொடுதிரை இன்ஃபோடெயின்மமென்ட் சிஸ்டம் வசதியை நம்மால் பெற முடியும். இந்த வசதி பல விபத்துகளுக்கு காரணமாக அமைந்திருப்பது நம்ப முடியாத ஒன்றாக இருக்கின்றது. ஆனால், இங்கிலாந்து நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் ஐஏஎம் ரோட்ஸ்மார்ட் எனும் ஆராய்ச்சி நிறுவனமே இதுகுறித்து வெளியிட்டிருக்கும் தகவல் நம்மை உறைய வைக்கின்ற வகையில் உள்ளது.

இந்த ஆராய்ச்சியின்படி, முழுமையான மது போதை அல்லது கஞ்சா போதையில் இருக்கும் நபரைக் காட்டிலும் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தைப் பயன்படுத்தும் நபர் மிக மிக பொருமையாக செயல்படுவதாக ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இடைவெளியானது 2 முதல் 3 மடங்கு வரை அதிகம் ஆகும். இதன்காரணமாகவே பெரும்பாலான விபத்துகள் அரங்கேறியிருக்கின்றன.

இதுவரை நடைபெற்ற விபத்து மற்றும் அவை எந்த காரணத்தால் அரங்கேறின என்பதை விளக்கும் புகைப்படத்தை டீம் பிஎச்பி வெளியிட்டுள்ளது. அந்த படத்தைக் கீழே காணலாம். முக்கியமாக, காரை சாலையில் இயக்கிக் கொண்டிருக்கும்போது ஆண்ட்ராய்டு ஆட்டோ அல்லது ஆப்பிள் கார் பிளே ஆகியவற்றை சில தேவைகளுக்காக பயன்படுத்தும்போதே பெருவாரியான வேண்டாத சம்பவங்கள் அரங்கேறியிருப்பது இந்த ஆராய்ச்சியின் சில கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன.

எனவேதான், போதையில் காரை இயக்குவதைக் காட்டிலும் மிக கொடியது வாகனத்தை இயக்கிக் கொண்டிருக்கும்போது தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தைப் பயன்படுத்துவது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். தொடுதிரையைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் உடனடியாக வாகனத்தை நிறுத்த வேண்டும் என எண்ணினால்கூட அப்போது ஏற்படும் உறைய வைக்கின்ற நிலை அடுத்த செயலை மேற்கொள்ளவிடுவதில்லை.

இதுவே, விபத்துபோன்ற கசப்பான சூழலுக்கு வித்திடுகின்றது. இந்த அதிர்ச்சியூட்டும் தகவலையே இன்ஸ்டியூட் ஆஃப் அட்வான்ஸ்ட் மோடாரிஸ்ட் ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்டுள்ளது. இது, சாலை பாதுகாப்பை மையமாகக் கொண்டு இயங்கும் அமைப்பாகும். குறிப்பாக, சாலையில் கார் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றது.

இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியே இந்த தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பற்றிய தகவலாகும். இந்த ஆராய்ச்சியை டிஆர்எல் எனும் அமைப்புடன் இணைந்தே ஐஏஎம் செய்திருக்கின்றது. இது, எஃப்ஐஏ எனும் அமைப்பின் நிதியின்கீழ் இயங்கும் நிறுவனம் ஆகும்.

இந்த ஆராய்ச்சியை இரு அமைப்புகளும் இங்கிலாந்தில் மேற்கொண்டிருந்தாலும் ஒவ்வொரு சாலைக்குமே இது பொருந்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஓட்டுநர், காரை இயக்கும்போது இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தைப் பயன்படுத்தினால் அவரின் கவனம் திசை திரும்புவதோடு, காரின் இயக்கத்தையும் மாற்றிவிடும். அந்த நேரத்தில் கணிப்பு துள்ளியமாக இருப்பதில்லை என்பதே ஆராய்ச்சியின் மிக முக்கியமான தகவலாக உள்ளது.

இந்த புதிய ஆராய்ச்சி தகவல் கார் பிரியர்கள் மற்றும் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எப்படி குடித்துவிட்டு வாகனத்தை இயக்கக்கூடாதோ, அதேபோன்று, காரை இயக்கும்போது இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்ட்த்தையும் பயன்படுத்தாமல் இருப்பது மிக நல்லது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.