அஜாக்கிரதையாக செயல்பட்ட உபி எம்எல்ஏ... தக்க பாடம் புகட்டிய காவல்துறை... முதலமைச்சர் கண்டனம்!

கொரோனா வைரஸ் பரவல் முன்பைக் காட்டிலும் அதி வேகத்தில் பரவிக் கொண்டிருக்கின்ற வேலையில், எம்எல்ஏ ஒருவர் அவரது நண்பர்களுடன் சொகுசு காரில் மாநிலம் விட்டு மாநிலம் சென்றுள்ளார். மேலும், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைக் காட்டிலும் அதிக நபர்களுடன் அவர் சென்றுள்ளார். இந்த விதி மீறிய குற்றத்திற்காக போலீஸார் அவர்மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

இக்காடன சூழ்நிலையில் அஜாக்கிரதையாக செயல்பட்ட எம்எல்ஏ... தக்க பாடம் புகட்டிய காவல்துறை... முதலமைச்சர் கண்டனம்!

தேசியளவிலான ஊரடங்கு மூன்றாம் கட்டமாக நீட்டிக்கப்பட்டு செயல்பாட்டில் இருக்கின்றது. வேகமாக பரவி வரும் கொரோனா வைரசிடம் இருந்து மக்களைக் காப்பாற்றும் விதமாக தடையுத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கையால் ஏற்கனவே வறுமை கோட்டிற்குள் தள்ளப்பட்டிருந்த அடித்தட்டு மற்றும் தினக்கூலித் தொழிலாளர்கள், தற்போது மிகப்பெரிய பஞ்சத்தில் சிக்கியிருக்கின்றனர்.

இக்காடன சூழ்நிலையில் அஜாக்கிரதையாக செயல்பட்ட எம்எல்ஏ... தக்க பாடம் புகட்டிய காவல்துறை... முதலமைச்சர் கண்டனம்!

பலரின் அத்தியாவசிய தேவைகள் கேள்விக் குறியாகவே மாறியிருக்கின்றது. இந்த நிலையிலேயே மத்திய அரசு மீண்டும் மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவை அமலுக்குக் கொண்டுவந்தது. அதேசமயம், புதிய ஊரடங்கு உத்தரவுடன் லேசான தளர்வுகளையும் அது வழங்கியிருக்கின்றது.

இக்காடன சூழ்நிலையில் அஜாக்கிரதையாக செயல்பட்ட எம்எல்ஏ... தக்க பாடம் புகட்டிய காவல்துறை... முதலமைச்சர் கண்டனம்!

அதன்படி, குறிப்பிட்ட நிறுவனங்கள் மட்டும் அதிகபட்ச கட்டுப்பாடுகளுடன் இயங்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த தளர்வை ஒரு சிலர் தவறாக பயன்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இம்மாதிரியான ஓர் சம்பவம்தான் உத்தரகாண்ட் மாநிலத்தில் தற்போது அரங்கேறியிருக்கின்றது. இந்த சம்பவத்தை அரங்கேற்றியவர் யார் என்பதுதான் சற்றே அதிர்ச்சிக்குள்ளான தகவலாக உள்ளது

இக்காடன சூழ்நிலையில் அஜாக்கிரதையாக செயல்பட்ட எம்எல்ஏ... தக்க பாடம் புகட்டிய காவல்துறை... முதலமைச்சர் கண்டனம்!

ஆம், உத்தரபிரதேச மாநிலத்தின் எம்எல்ஏ-வான அமன் மணி திரிபாதி, இவர்தான் ஊரடங்கு உத்தரவை மீறி மாநிலம் விட்டு மாநிலம் சென்றிருக்கின்றார். இந்த பயணத்திற்காக உபி மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்-இன் பெயரையும் அவர் பயன்படுத்தியுள்ளார்.

இக்காடன சூழ்நிலையில் அஜாக்கிரதையாக செயல்பட்ட எம்எல்ஏ... தக்க பாடம் புகட்டிய காவல்துறை... முதலமைச்சர் கண்டனம்!

இந்த குற்றத்திற்காக சட்டமன்ற உறுப்பினர் அமன் மணி திரிபாதி தற்போது கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் மட்டுமின்றி அவருடன் மூன்று சொகுசு கார்களில் பயணித்த, அவரது நண்பர்கள் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.இதுகுறித்த தகவல் மற்றும் வீடியோவை நியூஸ் டைம்ஸ் 24 தளம் வெளியிட்டுள்ளது.

இக்காடன சூழ்நிலையில் அஜாக்கிரதையாக செயல்பட்ட எம்எல்ஏ... தக்க பாடம் புகட்டிய காவல்துறை... முதலமைச்சர் கண்டனம்!

அமன் மணி மற்றும் அவரது நண்பர்கள் சிலர் உத்தர்காண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் கோவிலுக்கு செல்லும் வழியிலேயே போலீஸார் இத்தகைய நடவடிக்கையை எடுத்திருக்கின்றனர். இவர்கள், கடந்த சில வாரங்களுக்கு முன்பு காலமான யோகி ஆதித்யநாத்தின் தந்தைக்கு விஷேச பூஜை செய்யும் விதமாகவே அக்கோவிலுக்கு செல்வதாக போலீஸாரிடம் கூறியுள்ளனர்.

இக்காடன சூழ்நிலையில் அஜாக்கிரதையாக செயல்பட்ட எம்எல்ஏ... தக்க பாடம் புகட்டிய காவல்துறை... முதலமைச்சர் கண்டனம்!

இதற்காக, உத்தர்காண்ட் மாநிலத்தின் கூடுதல் செயலாளர் ஓம் பிரகாஷிடம் அவர்கள் சிறப்பு அனுமதி பெற்றிருக்கின்றார். இந்த அனுமதியில், ஒவ்வொரு காரிலும் சமூக இடைவெளி மற்றும் பாதுகாப்பு வசதிகளுடன் மூன்று பேர் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இதனை மீறிய அமன் மணி, சமூக இடைவெளி இல்லாமல் ஒவ்வொரு காரிலும் நான்கு பேர் என கூடுதல் நபர்களுடன் அவர் பயணித்துள்ளார்.

இக்காடன சூழ்நிலையில் அஜாக்கிரதையாக செயல்பட்ட எம்எல்ஏ... தக்க பாடம் புகட்டிய காவல்துறை... முதலமைச்சர் கண்டனம்!

இதனைக் கண்டு அதிர்ந்துபோன போலீஸார், சிறப்பு அனுமதியில் ஒரு காரில் தலா 3 பேர் வீதம், மொத்தம் 9பேர் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால், நீங்கள் விதியை மீறியுள்ளீர்கள் என சுட்டிக்காட்டினர். இதனால், அதிருப்தி அடைந்த அமன் மணி, நான் யார் என தெரியுமா., எனக்கு இருக்கும் பவர் என்ன தெரியுமா., என்று போலீஸாரையும் அங்கிருந்த அதிகாரிகளையும் மிரட்டத் தொடங்கியுள்ளார்.

இக்காடன சூழ்நிலையில் அஜாக்கிரதையாக செயல்பட்ட எம்எல்ஏ... தக்க பாடம் புகட்டிய காவல்துறை... முதலமைச்சர் கண்டனம்!

கூடுதலாக போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடவும் ஆரம்பித்துள்ளனர். இதனால், தொடர் அதிர்ச்சியைச் சந்தித்த அதிகாரிகள், அனுமதியை துஷ்பிரயோகம் செய்தது, சமூக இடைவெளியைக் கடைபிடிக்காதது, அதிகாரிகளை மிரட்டும் விதமாக செயல்பட்டது என பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவர்கள் பயன்படுத்திய சொகுசு கார்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இதில், டொயோட்டா பார்ச்சூனர், ஃபோர்டு எண்டியோவர் மற்றும் மற்றுமொரு விலையுயர்ந்த எஸ்யூவி ஆகியவை அடங்கும்.

இக்காடன சூழ்நிலையில் அஜாக்கிரதையாக செயல்பட்ட எம்எல்ஏ... தக்க பாடம் புகட்டிய காவல்துறை... முதலமைச்சர் கண்டனம்!

இந்த சம்பவம்குறித்து உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம், உத்தர்காண்ட் மாநில அதிகாரிகள் தொடர்பு கொண்டபோது, இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ளார். மேலும், அமன் மணியின் செயல்பாட்டிற்கு கண்டனத்தையும் தெரிவித்தார்.

இக்காடன சூழ்நிலையில் அஜாக்கிரதையாக செயல்பட்ட எம்எல்ஏ... தக்க பாடம் புகட்டிய காவல்துறை... முதலமைச்சர் கண்டனம்!

அமன் மணி உபி-யின் சுயேட்சை எம்எல்ஏ ஆவார். இவர், அவரது நண்பர்களுடன் ஜாலியாக ரைடு செய்வதற்காகவே பொய் காரணம் கூறி அனுமதி பெற்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

அதேசமயம், இந்த குழுவினர் செல்லவிருந்ததாக கூறப்படும் கேதரிநாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய இரு வழிபாட்டு தளங்களும் கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக பூட்டப்பட்டுள்ளது.

இக்காடன சூழ்நிலையில் அஜாக்கிரதையாக செயல்பட்ட எம்எல்ஏ... தக்க பாடம் புகட்டிய காவல்துறை... முதலமைச்சர் கண்டனம்!

குறிப்பாக, பொதுமக்கள் வழிபாட்டிற்கு தற்காலிக தடைவிதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த திருத்தலங்கள் மட்டுமின்றி நாட்டின் பெரும்பாலான கோவில்கள் தற்போது பூட்டப்பட்ட நிலையிலேயே இருக்கின்றன.

இருப்பினும், அமன் மணி திரிபாதி மற்றும் அவரது நண்பர்கள் இங்கு செல்வதாகவே கூறி சொகசு காரில் நான்கு மாநிலங்களைக் கடந்துச் சென்றுள்ளனர்.

இக்காடன சூழ்நிலையில் அஜாக்கிரதையாக செயல்பட்ட எம்எல்ஏ... தக்க பாடம் புகட்டிய காவல்துறை... முதலமைச்சர் கண்டனம்!

தற்போது நிலவிக்கொண்டிருக்கும் இக்கட்டான சூழ்நிலையில் சட்டமன்ற உறுப்பினர் அமன் மணியின் செயல் அம்மாநில மக்கள் மத்தியில் வறுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அவரது சொந்த தொகுதி மக்கள் மத்தியில் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற செயல்களில் பொதுமக்கள் மட்டுமின்றி இதுபோன்று அரசின் முக்கிய பொறுப்பில் இருக்கும் பலரும் தவறான காரணங்களைக்கூறி வெளியே சுற்றித்திரிவது வருந்த தக்க செயலாக உள்ளது.

இக்காடன சூழ்நிலையில் அஜாக்கிரதையாக செயல்பட்ட எம்எல்ஏ... தக்க பாடம் புகட்டிய காவல்துறை... முதலமைச்சர் கண்டனம்!

இதனை தவிர்க்கும் விதமாகவே நாடு முழுவதும் அந்தந்த மாநில போலீஸார், தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, கொரோனா வைரஸ் கூடுதலாக பரவி விடக்கூடாது என்பதில் அதிக கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.

இதற்காக, வழக்கு பதிதல், அபராதம் விதித்தல் விநோத தண்டனை வழங்குதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளைப் போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 6, 2020, 12:28 [IST]
English summary
Uttarakhand Police Stops and Busted UttarPradesh MLA Convoy. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+