இந்த செய்திய படிச்சா 144 இருக்கும்போது வாகனத்துல வெளியே போக மாட்டீங்க? - மீறினால் ரணகளமாகிடும்!

கொரோனா உலகத்தையே களேபரமாக மாற்றிவிட்டது. கொரோனாவை கட்டுப்படுத்த வல்லரசு நாடுகள் திண்டாடி வரும் நிலையில், ஜனத்தொகை அதிகம் கொண்ட நம் நாட்டில் கொரோனா பீதி பெரும் சவால்களை கொடுத்துள்ளது. இருப்பினும், கொரோனாவிலிருந்து மக்களை காப்பதற்கு, 144 தடை உத்தரவு எனும் கசப்பு மருத்தை மத்திய, மாநில அரசுகள் கொடுத்துள்ளன.

இந்த செய்திய படிச்சா வாகனத்துல வெளியே போக மாட்டீங்க? - மீறினால் உடம்பு ரணகளமாகிடும்!

விழிப்புணர்வு

இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும், பலர் தங்களது வாகனங்களில் சாக்குப் போக்கு சொல்லி, வெளியில் சுற்றி வருகின்றனர். அரசு அதிகாரிகளும், போலீசாரும் பல்வேறு விதங்களில் அறிவுரைகளையும், விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் செய்தும் போதிய பலன் கிட்டவில்லை.

இந்த செய்திய படிச்சா வாகனத்துல வெளியே போக மாட்டீங்க? - மீறினால் உடம்பு ரணகளமாகிடும்!

ஏற்பாடு

அத்தியாவசிய பொருட்கள் தேவைப்படுவோர் டோர் டெலிவிரி மூலமாக பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதுடன், வாகனங்களை தவிர்த்து, நடந்து சென்று அருகிலுள்ள கடைகளில் வாங்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால், விபரீதம் புரியாமல் பலர் தேவையில்லாமல் வாகனங்களில் செல்வதையும் காண முடிகிறது.

இந்த செய்திய படிச்சா வாகனத்துல வெளியே போக மாட்டீங்க? - மீறினால் உடம்பு ரணகளமாகிடும்!

கண்டுகொள்ளாத வாகன ஓட்டிகள்

மேலும், 144 தடை உத்தரவு என்பது மிகவும் கடினமான சட்டம். ஆனால், மனிதாபிமான அடிப்படையில் போலீசார் எச்சரித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பலன் இல்லை. தேவையில்லாமல் பலர் சுற்றுவது அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது.

இந்த செய்திய படிச்சா வாகனத்துல வெளியே போக மாட்டீங்க? - மீறினால் உடம்பு ரணகளமாகிடும்!

வெளுக்கும் போலீசார்

இதனால், உரிய காரணங்களுடன் வருபவர்களுக்கும் சேர்த்து லத்தியால் வெளுத்து எடுக்கும் காட்சிகளை பார்க்க முடிகிறது. அவசர விஷயங்களுக்காக போலீசாரிடம் இருந்து பாஸ் வாங்குபவர்கள் மட்டுமே வாகனங்களில் செல்ல வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டும் வருகிறது.

இந்த செய்திய படிச்சா வாகனத்துல வெளியே போக மாட்டீங்க? - மீறினால் உடம்பு ரணகளமாகிடும்!

நூதன தண்டனை

ஆனால், பலரும் இதனை பொருட்படுத்தாமல் வாகனங்களில் வருவது பொழுதுபோக்காக மாறி இருக்கிறது. சென்னை பாடியில் கூட நேற்று தேவையில்லாமல் சுற்றியவர்களை பிடித்து போலீசார் நூதன தண்டனை கொடுத்தனர்.

இந்த செய்திய படிச்சா வாகனத்துல வெளியே போக மாட்டீங்க? - மீறினால் உடம்பு ரணகளமாகிடும்!

வைரலாகும் வீடியோக்கள்

இந்த நிலையில், வாகனங்களில் வருவோரை பிடித்து போலீசார் வசமாக லத்தியால் அடிப்பது குறித்த பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றன. இதில், பல வீடியோக்கள் போலீசாரால் எடுக்கப்பட்டு பகிரப்படுகிறது. இதனை பார்ப்பவர்கள வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்ற முனைப்பில் அவர்கள் செய்து வருகின்றனர்.

இந்த செய்திய படிச்சா வாகனத்துல வெளியே போக மாட்டீங்க? - மீறினால் உடம்பு ரணகளமாகிடும்!

ஆதரவும், எதிர்ப்பும்...

ஆனால், இது சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. போலீசாரின் லத்தி அடிக்கு பலர் ஆதரவாகவும், தேவைக்கு செல்வோரை தாக்குவது சரியல்ல என்றும் எதிர்ப்பு கருத்துக்களும் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த செய்திய படிச்சா வாகனத்துல வெளியே போக மாட்டீங்க? - மீறினால் உடம்பு ரணகளமாகிடும்!

சீருடை அணியாத போலீசார்

குறிப்பாக, சீருடை அணியாத போலீசார் அடிப்பது குறித்தும் பலர் வினவி வருகின்றனர். சீருடை இல்லாமல் பொதுமக்கள் அல்லது குற்றவாளி என கருதப்படும் நபர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்த முடியாது. ஆனால், 144 தடை அமல்படுத்தப்பட்டால் நிலைமை வேறு. சட்டம் ஒழுங்கை பராமரிப்பதற்காக, மாவட்ட அளவில் காவல் துறையில் இருக்கும் சிறப்புப் பிரிவு போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இந்த செய்திய படிச்சா வாகனத்துல வெளியே போக மாட்டீங்க? - மீறினால் உடம்பு ரணகளமாகிடும்!

சிறப்புப் பிரிவு போலீசார்

இவர்கள் எப்போதும் பணியில் இருக்கும் போலீசாருடன் இணைந்து சட்டம் ஒழுங்கு பிரச்னையை பராமரிக்க நடவடிக்கைகளை மேற்கொள்வர். எனவே, சீருடை அணியாமல் அவர்கள் செல்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். 144 தடை காலத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதற்கு குறைந்தபட்சம் லத்தி சார்ஜ் முதல் அதிகபட்சமாக துப்பாக்கி்ச் சூடு நடத்துவது வரை அனுமதிக்க இயலும்.

இந்த செய்திய படிச்சா வாகனத்துல வெளியே போக மாட்டீங்க? - மீறினால் உடம்பு ரணகளமாகிடும்!

வாகன ஓட்டிகள் கைது

மேலும், லத்தி சார்ஜ் இல்லாவிட்டாலும், தேவையின்றி செல்லும் வாகன ஓட்டிகள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும், பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் விசாரணைக்கு பின்னர் உரிமையாளர் மீது அல்லது வாகன ஓட்டி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சிறை தண்டனை அல்லது ரூ.20,000 வரை அபராதம் விதிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இந்த செய்திய படிச்சா வாகனத்துல வெளியே போக மாட்டீங்க? - மீறினால் உடம்பு ரணகளமாகிடும்!

கடுமையான உத்தரவு

கூட்டம் கூடுவதும், 4 பேருக்கு மேல் சேர்ந்து செல்வதும் இந்த தடை மூலமாக தவிர்க்கப்பட வேண்டும். எனவே, இந்த தடை உத்தரவு இருக்கும் இவ்வேளையில், நம் நலன் மட்டுமின்றி, பொதுமக்கள் அனைவரின் நலன் கருதி, வீட்டிலேயே இருப்பது அவசியம். தேவையில்லாமல், போலீசாருடன் வாக்குவாதம் செய்வது பிரயோஜனம் இல்லை.

இந்த செய்திய படிச்சா வாகனத்துல வெளியே போக மாட்டீங்க? - மீறினால் உடம்பு ரணகளமாகிடும்!

கொரோனா மோசமானது

எதற்காக, இந்த தடை உத்தரவு போடப்பட்டு இருக்கிறது, கொரோனா எந்த அளவு மிக மோசமானது என்பதை எல்லாம் உணர்ந்து கொண்டு நம்மையும், நம் வீட்டில் உள்ளோரையும் மட்டுமில்லாமல், உற்றார் அனைவரையும் காக்கும் கட்டாயம் ஒவ்வொருவருக்கும் உள்ளது என்பதை மனதில் வையுங்கள்.

இந்த செய்திய படிச்சா வாகனத்துல வெளியே போக மாட்டீங்க? - மீறினால் உடம்பு ரணகளமாகிடும்!

எல்லோர் கையிலும் பொறுப்பு

இல்லையெனில், கொரோனாவை அழையா விருந்தாளியாக வீட்டிற்கு கொண்டு வரும் நிலை ஏற்படுவதுடன், உடம்பை புண்ணாக்கிக் கொண்டு புலம்ப வேண்டியிருக்கும். கொரோனா வைரஸ் தமிழகம் முழுவதும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலும் இப்போது அதிர்ச்சியை தருவதாக அமைந்துள்ளது. எனவே, சூழ்நிலையை புரிந்து கொண்டு அரசு உத்தரவுக்கு ஒத்துழைப்பு வழங்குவது ஒவ்வொருவரின் கடமையும், பொறுப்புமாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, April 2, 2020, 16:28 [IST]
English summary
Coronavirus: What will happen if you violate the 144 order?. Here are the some important things vehicle owners need to know about 144 order in current situation.
மேலும்... #ஆஃப் பீட் #auto news
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+