பழசோ, புதுசோ... நிச்சயம் இது உங்கள் காரில் இருந்தே ஆக வேண்டும்! அப்படி என்னங்க ஸ்பெஷல் இந்த கருவியில

வாகனங்களின் பாதுகாப்பை அதிகம் விரும்பும் உரிமையாளர்களுக்கு டிப்ஸ் கொடுக்கும் விதமாக இந்த பதிவை தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள் கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

பழசோ, புதுசோ... நிச்சயம் இது உங்கள் காரில் இருந்தே ஆக வேண்டும்... அப்படி என்னங்க ஸ்பெஷல் இந்த கருவில!

இன்றைய காலக்கட்டத்தில் அனைவருக்கும் வாகனம் என்பது மிகவும் தேவையான அத்தியாவசிய ஒன்றாக மாறியிருக்கின்றது. எனவே, நம்மில் பலரிடத்தில் சொந்த கார் என்பது கட்டாயம் இருந்து வருகின்றது. அது பழையதோ அல்லது புதியதோ மற்றும் அதிக விலைக் கொண்டதோ குறைந்த விலைக் கொண்டதோ எதுவாக இருந்தாலும் அதைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வது மிகுந்த அவசியமான ஒன்றாகும்.

பழசோ, புதுசோ... நிச்சயம் இது உங்கள் காரில் இருந்தே ஆக வேண்டும்... அப்படி என்னங்க ஸ்பெஷல் இந்த கருவில!

ஏனென்றால், இங்கு திருடுவதற்கு புதிய யுக்திகளைக் கையாண்டு வரும் கொள்ளையர்கள் வாகனங்களை எந்த இடத்தில் நிறுத்தி வைத்திருந்தாலும் மிகவும் அசால்டாக களவாடிச் சென்றுவிடுகின்றனர். இம்மாதிரியான சூழ்நிலையைச் சந்திக்கும் கார் புதிய தலைமுறைக் கார்களாக இருந்தால் அதனைக் கண்டுபிடிப்பது மிகவும் சுலபலம். அவ்வாறில்லாமல் உங்களுடையது சற்றே பழைய வாகனமாக இருந்தால் அதனைக் கண்டுபிடிப்பதில் அதிக சிக்கல் ஏற்படும்.

பழசோ, புதுசோ... நிச்சயம் இது உங்கள் காரில் இருந்தே ஆக வேண்டும்... அப்படி என்னங்க ஸ்பெஷல் இந்த கருவில!

ஏனெனில், மெகா திட்டத்துடன் வாகனங்களைத் திருடும் கொள்ளையர்கள், அதனை உதிரிபாகங்களாக மாற்றி விற்க நேரிடலாம் அல்லது நீண்ட காலங்கள் மறைத்து வைத்து பின்னர் பயன்படுத்தலாம். இவை மட்டுமின்றி வாகனங்களின் எஞ்ஜின் மற்றும் சேஸிஸ் எண்களை மாற்றி செகண்ட் ஹேண்ட் சந்தையில் விற்கப்படலாம். எனவே, திருடப்பட்ட வாகனம் அதன் உரிமையாளர் முன் வந்து நின்றாலும்கூட கண்டுபிடிக்க முடியாது.

பழசோ, புதுசோ... நிச்சயம் இது உங்கள் காரில் இருந்தே ஆக வேண்டும்... அப்படி என்னங்க ஸ்பெஷல் இந்த கருவில!

இம்மாதிரியான சூழ்நிலையைத் தவிர்க்கும் வகையில் சந்தையில் பல்வேறு தொழில்நுட்பம் அடங்கிய கருவிகள் விற்கப்படுகின்றன. அதில், ஒன்றுதான் டிராக்கிங் டிவைஸ். இது நிச்சயம், உங்கள் காரில் இருப்பது அவசியம். இது ஒன்று இருந்தால் போதும் உங்களது கார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் மிக சுலபமாக கண்டுபிடிக்க முடியும். எனவே, தான் இதை நாங்கள் முக்கியம் என்று கருதுகின்றோம்.

பழசோ, புதுசோ... நிச்சயம் இது உங்கள் காரில் இருந்தே ஆக வேண்டும்... அப்படி என்னங்க ஸ்பெஷல் இந்த கருவில!

மலிவு விலை:

கார் திருட்டையே பாதுகாக்கிறதே அப்போ இதோட விலை ரொம்ப அதிகமோ இருக்குமோ என்ற எண்ணம் உங்களுக்கு எழலாம். அதுதான் இல்லை. இந்த டிவைஸ் ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 3 ஆயிரம் வரையிலான விலையிலும் விற்பனைக்கு கிடைக்கின்றது. இதுமட்டுமின்றி, இந்த டிவைசிலேயே சற்று அதிக தொழில்நுட்ப வசதி கொண்ட கருவிகளும் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அவை, ரூ. 4 ஆயிரம் முதல் ரூ. 6 ஆயிரம் வரையிலான விலையைக் கொண்டிருக்கின்றது.

பழசோ, புதுசோ... நிச்சயம் இது உங்கள் காரில் இருந்தே ஆக வேண்டும்... அப்படி என்னங்க ஸ்பெஷல் இந்த கருவில!

இது, சிம் கார்ட் பொருத்தப்பட்ட சாதனமாகவே கிடைக்கின்றது. இது நீண்ட நாள் உழைக்க கூடியது. பயன்படுத்துவதும் சுலபம். முக்கிய அம்சம் என்னவென்றால் இதனால் டேட்டாக்களை செல்போன் வாயிலாக பகிர முடியும்.

ஆனால், மலிவு விலை டிராக்கர்களில் இதுபோன்ற ஒரு சில அம்சங்கள் குறைபாடு காணப்படுகின்றது. குறிப்பாக, சிம் கார்டு தனியாக வாங்கி பொருத்த வேண்டியநிலை உள்ளது.

பழசோ, புதுசோ... நிச்சயம் இது உங்கள் காரில் இருந்தே ஆக வேண்டும்... அப்படி என்னங்க ஸ்பெஷல் இந்த கருவில!

அதற்கு, எஸ்எம்எஸ் பேக் போட்டால் மட்டுமே அது குறுஞ்செய்தி வாயிலாக எச்சரிக்கையை வழங்கும். எனவே, சற்று கூடுதல் விலையைக் கொண்டிருந்தாலும், அதிக தொழில்நுட்பம் கொண்ட ஜிபிஎஸ் டிராக்கர்களை வாங்குவதே சிறந்தது.

இது திருட்டை ஒழிக்க மட்டுமின்றி குறிப்பிட்ட நேரத்தில் கார் எந்த பகுதியில் நிற்கின்றது என்பதைக்கூட நம்மால் அறிய முடியும்.

பழசோ, புதுசோ... நிச்சயம் இது உங்கள் காரில் இருந்தே ஆக வேண்டும்... அப்படி என்னங்க ஸ்பெஷல் இந்த கருவில!

பாதுகாப்பு:

பெரும்பாலானோர் வீட்டில் சிறுவர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு லைசென்ஸ் எடுக்கின்ற வயது இல்லையென்றால் கார் ஓட்ட கற்றுக் கொடுத்துவிடுகின்றோம். இதைப் பயன்படுத்தி ஒரு சில சிறுவர்கள் வீட்டில் யாருமில்லாத நேரம் பார்த்து காரை எடுத்துக் கொண்டு ஜாலி ரவுண்டு சென்றுவிடுகின்றனர். இந்த செயலைக் கூட ஜியோஃபென்ஸ் மூலம் தடுக்க முடியும்.

பழசோ, புதுசோ... நிச்சயம் இது உங்கள் காரில் இருந்தே ஆக வேண்டும்... அப்படி என்னங்க ஸ்பெஷல் இந்த கருவில!

குறிப்பிட்டு கூற வேண்டுமானால், இந்த அம்சத்தின்மூலம் காரை இருந்த இடத்திலிருந்தே ஆஃப் மற்றும் லாக் செய்ய முடியும். இதுமட்டுமின்றி, எல்லையைத் தாண்டி வாகனம் செல்லும்போது அலாரம் போன்ற சமிக்ஞைகூட செல்போன் செயலி வாயிலாக பெற முடியும். எனவே, அதிவேகம் மற்றும் எல்லையைத் தாண்டுவது என்பது ஜியோஃபென்ஸ் ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட காரில் முடியாத காரியம்.

பழசோ, புதுசோ... நிச்சயம் இது உங்கள் காரில் இருந்தே ஆக வேண்டும்... அப்படி என்னங்க ஸ்பெஷல் இந்த கருவில!

இது வாகனங்களை திருட்டில் இருந்து மட்டுமின்றி சிறுவர்களின் விநோத விளையாட்டால் ஏற்படும் இழப்புகளில் இருந்தும் காக்க உதவும். மேலும், கார் இருக்கும் இடத்திற்கே சென்று அதனை நம்மால் மீட்டெடுக்கவும் முடியும். இதனால் போலீஸின் உதவியை நாட வேண்டும் என்ற அவசியம் துளியளவும் இருக்காது. இருப்பினும், ஒரு சில பாதுகாப்பு காரணங்களுக்கு அவர்களின் துணை தேவைப்படுகின்றது.

பழசோ, புதுசோ... நிச்சயம் இது உங்கள் காரில் இருந்தே ஆக வேண்டும்... அப்படி என்னங்க ஸ்பெஷல் இந்த கருவில!

எளிதாக பயன்படுத்தலாம்:

இந்த கருவியின் ஆரம்பநிலை மாடலைப் பயன்படுத்த கப்லர் (Coupler) கனெக்ஷன் அம்சம் தேவைப்படுகின்றது. இது, காரில் செல்போனை சார்ஜ் செய்ய ஏதுவாக வழங்கப்பட்டிருக்கும் ஓர் அம்சம் ஆகும். இதுதான் டிராக்கிங் டிவைசுக்கு தேவையான மின் சக்தியை வழங்கும். எனவே, டிராக்கிங் கருவியை பயன்படுத்த மாடிஃபிகேஷன் செய்ய வேண்டும், செலவு அதிகமாக இருக்கும் என்றெல்லாம் அச்சமடைய தேவையில்லை.

பழசோ, புதுசோ... நிச்சயம் இது உங்கள் காரில் இருந்தே ஆக வேண்டும்... அப்படி என்னங்க ஸ்பெஷல் இந்த கருவில!

மேலும், இது பாதுகாப்பனதும் கூட. இதைப் பொருத்திய பின்னர் செல்போனுடன் இணைப்பது கட்டாயமான ஒன்று. இதைச் செய்தால் மட்டுமே நம்மால் அனைத்து தகவல்களையும் பெற முடியும். அதேசமயம், இதனை ப்ளூடூத் டிவைசுடன் இணைப்பதைப் போன்று மிகவும் சுலபமான ஒன்றாகும். எனவே, செல்போனைச் சார்ஜ் செய்யும் 12வோல்ட் திறன் கொண்ட கப்லர் இருந்தால் மட்டுமே போதுமானது.

பழசோ, புதுசோ... நிச்சயம் இது உங்கள் காரில் இருந்தே ஆக வேண்டும்... அப்படி என்னங்க ஸ்பெஷல் இந்த கருவில!

டிரைவ் டேடா அக்செஸ்:

இந்த டிவைஸ் கார் இருக்கும் இடத்தை மட்டுமின்றி நேரடி (லைவ்) ரிப்போர்டையும் வழங்க உதவுகின்றது. அதாவது, ஸ்விக்கி, ஜொமேட்டோவில் ஆர்டர் செய்த பின்னர் டெலிவரி பாய் வரும் இடத்தை இன்ச் பை இன்சாக காட்டுவதைப் போன்றே அனைத்து தகவலையும் இந்த டிராக்கர்கள் செல்போன் திரை வாயிலாக காண்பிக்கும்.

பழசோ, புதுசோ... நிச்சயம் இது உங்கள் காரில் இருந்தே ஆக வேண்டும்... அப்படி என்னங்க ஸ்பெஷல் இந்த கருவில!

பழைய கார் டூ புதிய கார்:

இந்த டிராக்கிங் டிவைசைப் பொருத்துவதன் மூலம் உங்களுது தாத்தா காலத்து கார்கூட, புதிய அதிநவீன காராக மாறிவிடும். இந்த தற்போது குறைந்தளவு மாடல்களில் மட்டுமே கிடைத்து வருகின்றது. அந்தவகையில், தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், எம்ஜி ஹெக்டர், ஹூண்டாய் வென்யூ, ஹூண்டாய் வெர்னா மற்றும் டாடா நெக்ஸான் ஆகிய கார்களில் மட்டுமே இந்த நேரடி டிராக்கிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

பழசோ, புதுசோ... நிச்சயம் இது உங்கள் காரில் இருந்தே ஆக வேண்டும்... அப்படி என்னங்க ஸ்பெஷல் இந்த கருவில!

எனவே, ஆரம்ப நிலை கார்களில் இந்த வசதியை எதிர்பார்க்க முடியாது. அதேசமயம், உயர்நிலை கார்களின் விலை பல லட்சங்களாக காணப்படுகின்ரது. ஆனால், இந்த டிராக்கிங் டிவைசை வெளிச் சந்தையில் மிகவும் குறைந்த விலையில் வாங்க முடியும். இதனைப் பொருத்துவதன்மூலம் பழைய காரைகூட புதிய தலைமுறை காராக மாற்ற முடியும். இது உங்களது காரை கனெக்டட் காராகவும் மாற்றிவிடும்.

Most Read Articles
English summary
Vehicle Tracking System Importance
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X