முதன்முறையாக ஷூட்டிங் ப்ரேக் ஸ்டைலில் 2021 ஃபோக்ஸ்வேகன் அர்டியோன்... ஜூன் 24ல் அறிமுகமாகிறது..

ஷூட்டிங் ப்ரேக் ஸ்டைலில் உருவாக்கப்பட்டு வருகின்ற 2021 ஃபோக்ஸ்வேகன் அர்டியோன் மாடலின் டீசர் வருகிற 24ஆம் தேதி நடைபெறவுள்ள இதன் உலகளாவிய அறிமுகத்திற்கு முன்னதாக வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

முதன்முறையாக ஷூட்டிங் ப்ரேக் ஸ்டைலில் 2021 ஃபோக்ஸ்வேகன் அர்டியோன்... ஜூன் 24ல் அறிமுகமாகிறது..

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் சிசி மாடலுக்கு மாற்றாக அர்டியோன் மாடலை முதன்முதலாக கடந்த 2017ல் 4-கதவு ஃபாஸ்ட்பேக் மாடலாக சந்தைக்கு கொண்டுவந்தது. ஆனால் சிசி மாடலை போல் இந்த ஃபாஸ்ட்பேக் மாடலும் வாடிக்கையாளர்களிடையே பெரிய அளவில் கவனத்தை பெறவில்லை.

முதன்முறையாக ஷூட்டிங் ப்ரேக் ஸ்டைலில் 2021 ஃபோக்ஸ்வேகன் அர்டியோன்... ஜூன் 24ல் அறிமுகமாகிறது..

இதனால் விற்பனையில் பெரும் சரிவை சந்தித்துவரும் அர்டியோன் மாடலில் மிட்-லைஃப் அப்டேட்டாக ஷூட்டிங் ப்ரேக் வெர்சனை கொண்டுவர இந்நிறுவனம் முடிவெடுத்து வருகிற 24ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த நிலையில் தான் தற்போது இதன் டீசர் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஸ்கெட்ச் டிசைனில் வெளியாகியுள்ள இந்த படங்களில் அர்டியோன் ஷூட்டிங் ப்ரேக் கார் திருத்தியமைக்கப்பட்ட க்ரில் மற்றும் எட்டாம் தலைமுறை கோல்ஃப் மாடலில் உள்ளதை போன்று ஹெட்லேம்ப்களை பெற்றுள்ளதை அறிய முடிகிறது.

முதன்முறையாக ஷூட்டிங் ப்ரேக் ஸ்டைலில் 2021 ஃபோக்ஸ்வேகன் அர்டியோன்... ஜூன் 24ல் அறிமுகமாகிறது..

இவற்றுடன் காரின் முன் மற்றும் பின் பகுதிகளில் உள்ள பம்பரின் டிசைனும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஷூட்டிங் ப்ரேக் கார்களுக்கே உண்டான தோற்றத்தால் பின்புறம் முடியும் வரையிலான நீண்ட ரூஃப்-ஐ பெற்றுள்ள இந்த 2021 மாடலின் பின்புறத்தில் புதிய டிசைனில் டெயில்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன.

முதன்முறையாக ஷூட்டிங் ப்ரேக் ஸ்டைலில் 2021 ஃபோக்ஸ்வேகன் அர்டியோன்... ஜூன் 24ல் அறிமுகமாகிறது..

உட்புற கேபினும் புதிய வெர்சனினால் அப்டேட்டான் தொழிற்நுட்ப வசதிகளை ஏற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வகையில் முன்பை விட சவுகரியமான ட்ரைவர்-அசிஸ்ட் சிஸ்டம் உட்புறத்தில் வழங்கப்பட்டிருக்கலாம். இவை மட்டுமின்றி வெவ்வேறு விதமான இணைப்பு வசதிகளை கொண்ட லேட்டஸ்ட் இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தையும் நிச்சயம் இந்த காரில் எதிர்பார்க்கலாம்.

முதன்முறையாக ஷூட்டிங் ப்ரேக் ஸ்டைலில் 2021 ஃபோக்ஸ்வேகன் அர்டியோன்... ஜூன் 24ல் அறிமுகமாகிறது..

இந்த எஸ்டேட் வெர்சன் பூட் கொள்ளளவை 560 லிட்டரில் கொண்டுள்ளது. இயக்க ஆற்றலுக்கு இந்த ஷூட்டிங் ப்ரேக் காரில் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 330 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் வகையில் ட்யூன் செய்யப்பட்டு பொருத்தப்படலாம்.

முதன்முறையாக ஷூட்டிங் ப்ரேக் ஸ்டைலில் 2021 ஃபோக்ஸ்வேகன் அர்டியோன்... ஜூன் 24ல் அறிமுகமாகிறது..

இந்த பெட்ரோல் என்ஜின் தவிர்த்து டீசல், மில்ட்-ஹைப்ரீட் மற்றும் ப்ளக்-இன் ஹைப்ரீட் என்ஜின் தேர்வுகள் இந்த காருக்கு வழங்கப்பட வாய்ப்புகள் குறைவே. டிஜிட்டல் முறையில் சர்வதே சந்தையில் அறிமுகமாகவுள்ள இந்த கார் கடந்த சில மாதங்களில் சில முறை சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்ட போது கண்டறியப்பட்டுள்ளது.

முதன்முறையாக ஷூட்டிங் ப்ரேக் ஸ்டைலில் 2021 ஃபோக்ஸ்வேகன் அர்டியோன்... ஜூன் 24ல் அறிமுகமாகிறது..

அதன் அடிப்படையிலும் தான் 2021 அர்டியோன் ஷூட்டிங் ப்ரேக் மாடல் தோற்றம் மேலே கூறப்பட்டுள்ளது. இவற்றுடன் கூடுதல் தகவல்களுக்கு இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள இந்த காரின் அறிமுகம் வரை காத்திருக்க வேண்டும். மற்ற நாட்டு சந்தைகளிலேயே ஃபோக்ஸ்வேகன் அர்டியோன் மாடலுக்கு அவ்வளவாக வரவேற்பு இல்லாததால் இந்த கார் இந்திய சந்தைக்கு வருவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு தான்.

Most Read Articles

English summary
2021 Volkswagen Arteon teased ahead of 24 June debut; Shooting Brake confirmed
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X