ஃபோக்ஸ்வேகன் போலோ, வென்ட்டோ கார்களின் விலை உயர்ந்த ஆட்டோமேட்டிக் வேரியண்ட் அறிமுகம்!

ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் வென்ட்டோ கார்களின் விலை உயர்ந்த ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டுகளுக்கான முன்பதிவு இன்று அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டு இருக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் போலோ, வென்ட்டோ விலை உயர்ந்த ஆட்டோமேட்டிக் வேரியண்ட் அறிமுகம்!

இந்தியாவின் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் ஃபோக்ஸ்வேகன் போலோ மிக முக்கிய தேர்வாக இருந்து வருகிறது. அதேபோன்று, மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் வென்ட்டோ மிக முக்கிய தேர்வுகளில் ஒன்றாக வாடிக்கையாளர் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருக்கிறது. இந்த இரு கார் மாடல்களும் கட்டுமானத் தரத்தில் சிறந்த மாடல்களாக பெயர் பெற்றிருக்கின்றன.

ஃபோக்ஸ்வேகன் போலோ, வென்ட்டோ விலை உயர்ந்த ஆட்டோமேட்டிக் வேரியண்ட் அறிமுகம்!

இந்தநிலையில், கடந்த மார்ச் மாதம் ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் வென்ட்டோ கார்களின் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த இரண்டு கார்களிலும் புதிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த எஞ்சின் 108 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கின்றன.

ஃபோக்ஸ்வேகன் போலோ, வென்ட்டோ விலை உயர்ந்த ஆட்டோமேட்டிக் வேரியண்ட் அறிமுகம்!

போலோ காரில் 1.0 லிட்டர் எம்பிஐ பெட்ரோல் எஞ்சின் தேர்வும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், போலோ மற்றும் வென்ட்டோ கார்களில் விலை உயர்ந்த ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டுகள் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

ஃபோக்ஸ்வேகன் போலோ, வென்ட்டோ விலை உயர்ந்த ஆட்டோமேட்டிக் வேரியண்ட் அறிமுகம்!

போலோ ஜிடி டிஎஸ்ஐ ஆட்டோமேட்டிக் என்ற வேரியண்ட் பெயரில் குறிப்பிடப்படும் மாடலுக்கு ரூ.9.67 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும், வென்ட்டோ ஹை லைன் ப்ளஸ் என்ற விலை உயர்ந்த ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டிற்கு ரூ.12.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது அறிமுகச் சலுகை விலையாகவும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் போலோ, வென்ட்டோ விலை உயர்ந்த ஆட்டோமேட்டிக் வேரியண்ட் அறிமுகம்!

மேலும், இந்த இரண்டு கார்களின் விலை உயர்ந்த ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டுகளுக்கான முன்பதிவும் இன்று முதல் துவங்கப்பட்டு இருக்கிறது. நாடு முழுவதும் உள்ள ஃபோக்ஸ்வேகன் டீலர்கள் அல்லது ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஃபோக்ஸ்வேகன் போலோ, வென்ட்டோ விலை உயர்ந்த ஆட்டோமேட்டிக் வேரியண்ட் அறிமுகம்!

ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி டிஎஸ்ஐ ஆட்டோமேட்டிக் மாடலானது லிட்டருக்கு 16.47 கிமீ மைலேஜையும், வென்ட்டோ ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 16.35 கிமீ மைலேஜையும் வழங்கும்.

ஃபோக்ஸ்வேகன் போலோ, வென்ட்டோ விலை உயர்ந்த ஆட்டோமேட்டிக் வேரியண்ட் அறிமுகம்!

போலோ ஜிடி டிஎஸ்ஐ ஆட்டோமேட்டிக் மாடலில் டியூவல் ஏர்பேக்குகள், கருப்பு வண்ண ரியர் வியூ மிரர்கள், ஜிடிஐ மாடலை பிரதிபலிக்கும் விதத்திலான விசேஷ இருக்கைகள், கருப்பு வண்ண ரியர் ஸ்பாய்லர் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன. வென்ட்டோ ஹைலைன் ப்ளஸ் ஆட்டோமேட்டிக் மாடலில் 4 ஏர்பேக்குகள், எல்இடி ஹெட்லைட்டுகள் முக்கிய அம்சங்களாக இடம்பற்றுள்ளன.

ஃபோக்ஸ்வேகன் போலோ, வென்ட்டோ விலை உயர்ந்த ஆட்டோமேட்டிக் வேரியண்ட் அறிமுகம்!

இந்த புதிய மாடல்கள் அறிமுகம் குறித்து ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் ஸ்டீபன் நாப் கூறுகையில்,"இன்று அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் போலோ மற்றும் வென்ட்டோ கார்களின் பிஎஸ்6 கார்களின் ஆட்டோமேட்டிக் மாடல்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிக செயல்திறனுடன் உற்சாகமான ஓட்டுதல் அனுபவத்தை தரும்.

ஃபோக்ஸ்வேகன் போலோ, வென்ட்டோ விலை உயர்ந்த ஆட்டோமேட்டிக் வேரியண்ட் அறிமுகம்!

அதிகபட்ச செயல்திறனுடன் சிறந்த எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் விதத்தில் இந்த மாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பிரிமீயம் அம்சங்கள் கொண்ட இந்த ஆட்டோமேட்டிக் மாடல்களை மிக எளிதாக இந்திய வாடிக்கையாளர்கள் வாங்கும் விதத்தில் நிலைநிறுத்தி இருக்கிறோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 2, 2020, 15:02 [IST]
English summary
Volkswagen has commenced bookings for top spec automatic variants of Polo and Vento cars In India
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+