கியா சொனேட்டிற்கு போட்டியாக உருவாகும் புதிய ஃபோக்ஸ்வேகன் காம்பெக்ட் எஸ்யூவி...!

டிகுவான் ஆல்ஸ்பேஸ் மாடலை தொடந்து மூன்று புதிய எஸ்யூவி கார்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதன்படி வருகிற மார்ச் 16ஆம் தேதி டி-ராக் மாடலும், அடுத்த ஆண்டு மத்தியில் டைகுவான் மாடலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. மூன்றாவது ஃபோக்ஸ்வேகன் எஸ்யூவி மாடலை பற்றிய எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

கியா சொனேட்டிற்கு போட்டியாக உருவாகும் புதிய ஃபோக்ஸ்வேகன் காம்பெக்ட் எஸ்யூவி...!

இந்த நிலையில் இந்நிறுவனத்தில் இருந்து நான்காவது மாடலாக காம்பெக்ட் எஸ்யூவி கார் ஒன்று இந்திய சந்தைக்கு வரவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன.

மாருதியின் விட்டாரா பிரெஸ்ஸா மாடலுக்கு போட்டியாக விற்பனைக்கு வரும் இந்த காரின் அறிமுகம் டைகுவான் எஸ்யூவி மாடலுக்கு பிறகு 2021ஆம் ஆண்டின் இறுதியில் இருக்கலாம் என கூறப்படுகிறது.

கியா சொனேட்டிற்கு போட்டியாக உருவாகும் புதிய ஃபோக்ஸ்வேகன் காம்பெக்ட் எஸ்யூவி...!

இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவி மாடல் குறித்து ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தில் இருந்து வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ தகவலில், இந்த எஸ்யூவி கார் மார்க்கெட்டில் உள்ள அனைத்து முக்கியமான தொழிற்நுட்ப வசதிகளுடன் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

மற்றப்படி இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவி கார் இந்திய சந்தையில் எந்த இடத்தில் நிலைநிறுத்தப்படவுள்ளது என்பது போன்ற எந்த தகவலையும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தெரிவிக்கவில்லை. ஆனால் நமக்கு தெரிந்தவரை ஃபோக்ஸ்வேகனின் புதிய காம்பெக்ட் எஸ்யூவி மாடல் மிட்-சைஸ் எஸ்யூவியான டைகுவானிற்கு அடுத்து நிலைநிறுத்தப்படலாம்.

கியா சொனேட்டிற்கு போட்டியாக உருவாகும் புதிய ஃபோக்ஸ்வேகன் காம்பெக்ட் எஸ்யூவி...!

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மட்டுமின்றி ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி மாடலுக்கும் போட்டியாக விளங்கவுள்ள இந்த 2021 காம்பெக்ட் எஸ்யூவி கார் ஃபோக்ஸ்வேகனின் எம்க்யூபி ஏ0-இந்தியா ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிறுவனம் ஸ்கோடா இந்தியா நிறுவனத்துடன் கூட்டணி வைத்துள்ளதால், ஸ்கோடா விஷன் இன் மாடலின் அடிப்படையில் உருவாகும் எஸ்யூவி மற்றும் மிட்-சைஸ் செடான் உள்ளிட்ட சில புதிய ஸ்கோடா மாடல்களும் இந்த ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

கியா சொனேட்டிற்கு போட்டியாக உருவாகும் புதிய ஃபோக்ஸ்வேகன் காம்பெக்ட் எஸ்யூவி...!

ஃபோக்ஸ்வேகனின் இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவி காரின் டிசைனை தற்போதைய லேட்டஸ்ட் ஃபோக்ஸ்வேகன் மாடல்களின் தரத்தில் எதிர்பார்க்கலாம். குறிப்பாக இந்த காரின் உட்புற பகுதி, சந்தையில் பிரபலமான அதன் போட்டி மாடல்களுக்கு விற்பனையில் கடுமையான போட்டியினை அளிக்கும் வகையில் இருக்கும்.

இதனால் இந்த காரின் உட்புறத்தில் பல இணைப்பு தேர்வுகளை கொண்ட தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தை நிச்சயம் எதிர்பார்க்கலாம். அதேபோல் இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவி மாடலின் டாப் வேரியண்ட்களில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரையும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கியா சொனேட்டிற்கு போட்டியாக உருவாகும் புதிய ஃபோக்ஸ்வேகன் காம்பெக்ட் எஸ்யூவி...!

இயக்க ஆற்றலுக்கு 2021 ஃபோக்ஸ்வேகன் காம்பெக்ட் எஸ்யூவி மாடல் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ மூன்று-சிலிண்டர் பெட்ரோல் என்ஜினை பெறும் கூறப்படுகிறது. இதேபோல் ட்ரான்ஸ்மிஷனிற்காக இந்த காம்பெக்ட் எஸ்யூவி கார் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என்ற இரு தேர்வுகளையும் கொண்டிருக்கும்.

இந்த 2021 மாடலில் வழங்கப்படவுள்ளதாக கூறப்படும் 1.0 லி பெட்ரோல் என்ஜின் ஏற்கனவே ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் வெண்டோ மாடல்களில் வழங்கப்பட்டுள்ளன. இந்த இரு மாடல்களிலும் இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 108 பிஎச்பி பவர் மற்றும் 175 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தி வருகிறது.

கியா சொனேட்டிற்கு போட்டியாக உருவாகும் புதிய ஃபோக்ஸ்வேகன் காம்பெக்ட் எஸ்யூவி...!

பெட்ரோல் என்ஜின் தேர்வை தவிர்த்து டீசல் வேரியண்ட்டில் 2021 காம்பெக்ட் எஸ்யூவி மாடலை வழங்கும் எண்ணம் வரை ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திடம் இல்லாதது போல் தான் தெரிகிறது. அதேபோல் இந்த புதிய கார் சிஎன்ஜி வேரியண்ட்டையும் பெறுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவே.

விட்டாரா பிரெஸ்ஸா, வென்யூ மாடல்களுடன் தற்சமயம் இந்திய சந்தையில் பிரபலமாக உள்ள எஸ்யூவி மாடல்களான டாடா நெக்ஸான், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 உள்ளிட்ட மாடல்களுடன் விரைவில் இந்திய மார்க்கெட்டிற்கு வரவுள்ள கியா சொனேட் உடனும் ஃபோக்ஸ்வேகனின் புதிய காம்பெக்ட்-எஸ்யூவி கார் விற்பனையில் போட்டியிடவுள்ளது.

பின்குறிப்பு: செய்தியில் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படங்கள் ஃபோக்ஸ்வேகன் காம்பெக்ட் எஸ்யூவி காரின் மாதிரிகளே.

Most Read Articles
English summary
Volkswagen compact SUV will launch in end of 2021, rivals Maruti vitara brezza and Kia Sonet
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X