பிரபல போலோ & வெண்டோ கார்களில் அதிரடியாக அப்டேட்டை கொண்டுவரும் ஃபோக்ஸ்வேகன்..!

ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் டிக்யூ200 7-ஸ்பீடு டிஎஸ்ஜி ட்ரான்ஸ்மிஷன் வேரியண்ட்டின் தயாரிப்பை நிறுத்தவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த டிஎஸ்ஜி வேரியண்ட்டை தற்சமயம் இந்நிறுவனத்தின் போலோ மற்றும் வெண்டோ மாடல் கார்கள் கொண்டுள்ளன.

பிரபல போலோ & வெண்டோ கார்களில் அதிரடியாக அப்டேட்டை கொண்டுவரும் ஃபோக்ஸ்வேகன்..!

இந்த ட்ரான்ஸ்மிஷன் தேர்வு 1.5 லிட்டர் டிடிஐ டீசல் மற்றும் 1.2 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின்களுடன் வழங்கப்படுகின்றன. இந்த இரு என்ஜின் தேர்வுகளும் புதிய மாசு உமிழ்வு விதிக்கான காலக்கெடுவான ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நிறுத்தப்படவுள்ளன.

பிரபல போலோ & வெண்டோ கார்களில் அதிரடியாக அப்டேட்டை கொண்டுவரும் ஃபோக்ஸ்வேகன்..!

இதில் 1.2 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் போலோ மற்றும் வெண்டோ மாடல்களில் பொருத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் 2020ஆம் ஆண்டிற்கான ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த இந்த இரு மாடல்களிலும் இந்த 1.2 லிட்டர் என்ஜினிற்கு பதிலாக 1.0 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின் வழங்கப்பட்டிருந்தது.

பிரபல போலோ & வெண்டோ கார்களில் அதிரடியாக அப்டேட்டை கொண்டுவரும் ஃபோக்ஸ்வேகன்..!

இந்த புதிய 1.0 லிட்டர், மூன்று-சிலிண்டர், நேரடி-இன்ஜெக்‌ஷன் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 113 பிஎச்பி பவரையும் 200 என்எம் டார்க் திறனையும் காருக்கு வழங்கும் ஆற்றல் கொண்டது. என்ஜினின் இந்த வெளியிடு ஆற்றல் அளவு தற்போதைய மாடலில் உள்ளதை விட 10 பிஎச்பி மற்றும் 25 என்எம் டார்க் திறன் அதிகமாகும்.

பிரபல போலோ & வெண்டோ கார்களில் அதிரடியாக அப்டேட்டை கொண்டுவரும் ஃபோக்ஸ்வேகன்..!

இந்த 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அமைப்பில் மிக பெரிய அப்க்ரேடாக 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக வழங்கப்படவுள்ளன.

பிரபல போலோ & வெண்டோ கார்களில் அதிரடியாக அப்டேட்டை கொண்டுவரும் ஃபோக்ஸ்வேகன்..!

டீசல் என்ஜின் கார்களை பற்றி இப்போதைக்கு எதுவும் கூற முடியாது; பெட்ரோல் வேரியண்ட்கள் மீதான வாடிக்கையாளர்களின் ஆர்வம் அதிகரித்தால் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான டீசல் வேரியண்ட்கள் மட்டுமின்றி, மற்ற கூடுதல் என்ஜின் தேர்வுகளும் வழங்கப்படும் என்று ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளது.

பிரபல போலோ & வெண்டோ கார்களில் அதிரடியாக அப்டேட்டை கொண்டுவரும் ஃபோக்ஸ்வேகன்..!

குறைவான விலையில் டிஎஸ்ஐ என்ஜினுடன் 6-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பு வழங்கப்படவுள்ளதால் மேற்கூறப்பட்ட மாடல்கள் கணிசமான விற்பனை எண்ணிக்கைகளை வரும் மாதங்களில் பதிவு செய்யும் என இந்நிறுவனம் நம்பி கொண்டுள்ளது.

பிரபல போலோ & வெண்டோ கார்களில் அதிரடியாக அப்டேட்டை கொண்டுவரும் ஃபோக்ஸ்வேகன்..!

ஏனெனில் ஸ்கோடாவுடன் இந்நிறுவனம் செயல்படுத்திவரும் இந்தியா 2.0 திட்டத்தின் ஒரு பகுதியாக அதிகளவில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்காக தான் புதிய ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வு இந்த 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் வழங்கப்பட்டுள்ளது.

பிரபல போலோ & வெண்டோ கார்களில் அதிரடியாக அப்டேட்டை கொண்டுவரும் ஃபோக்ஸ்வேகன்..!

இந்த புதிய என்ஜின் மாற்றங்களை பெற்றுள்ள மாடல்களின் விலைகளை பற்றிய எந்தவொரு தகவலையும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் வெளியிடவில்லை. நமக்கு தெரிந்தவரை இந்த புதிய ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளை பெற்றுவரும் கார்கள் தற்போதைய 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினை கொண்டிருப்பவையை விட சுமார் ரூ.1 லட்சம் வரையில் விலை குறைப்பை பெறவுள்ளன.

பிரபல போலோ & வெண்டோ கார்களில் அதிரடியாக அப்டேட்டை கொண்டுவரும் ஃபோக்ஸ்வேகன்..!

மேலும் இந்த புதிய 1.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் தேர்வு போலோ, வெண்டோ மட்டுமின்றி இந்நிறுவனத்தின் டிகுவான் எஸ்யூவியின் விலை குறைவான வேரியண்ட்களிலும் பொருத்தப்படவுள்ளன. இதனால் 2021ஆம் ஆண்டின் மத்தியில் அறிமுகமாகவுள்ள டிகுவானின் இத்தகைய வேரியண்ட்களில் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளும் கொடுக்கப்பட உள்ளன.

பிரபல போலோ & வெண்டோ கார்களில் அதிரடியாக அப்டேட்டை கொண்டுவரும் ஃபோக்ஸ்வேகன்..!

மற்றப்படி டிகுவான் மாடலின் டாப் வேரியண்ட்கள் அனைத்தும் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜினை தான் தொடரவுள்ளன. இந்த என்ஜினுடன் ட்ரான்ஸ்மிஷனிற்காக 7-ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் தான் கொடுக்கப்படவுள்ளது. இந்த டிஎஸ்ஜி ட்ரான்ஸ்மிஷன் அளவிற்கு வேறெந்த கியர்பாக்ஸும் சிறந்த ஷிஃப்ட் தரம் மற்றும் அனுபவத்தை வழங்குவதில்லை என இந்நிறுவனம் கருதுவதால் சில மாடங்களில் இந்த ட்ரான்ஸ்மிஷன் தொடரவுள்ளது.

பிரபல போலோ & வெண்டோ கார்களில் அதிரடியாக அப்டேட்டை கொண்டுவரும் ஃபோக்ஸ்வேகன்..!

மேலும் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின், அடுத்த ஆண்டில் அறிமுகமாகவுள்ளதாக கூறப்படுகின்ற வெண்டோ மாடலின் அடுத்த தலைமுறை காரிலும் வழங்கப்படவுள்ளது. டீசல் என்ஜின்களுக்கு சரியான மாற்றாக இந்த 1.0 டிஎஸ்ஐ என்ஜின் விளங்கும் என்று ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் உறுதியாக உள்ளது.

பிரபல போலோ & வெண்டோ கார்களில் அதிரடியாக அப்டேட்டை கொண்டுவரும் ஃபோக்ஸ்வேகன்..!

ஏனெனில் இந்த புதிய பெட்ரோல் என்ஜின் வெளிப்படுத்தவுள்ள ஆற்றல் அளவுகள் மிகவும் சிறந்ததாக உள்ளன. இதனால் போட்டி நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் இந்திய மார்க்கெட்டில் ஒரு நிலையை அடைவோம் என ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் எதிர்பார்த்து கொண்டிருக்கிறது.

பிரபல போலோ & வெண்டோ கார்களில் அதிரடியாக அப்டேட்டை கொண்டுவரும் ஃபோக்ஸ்வேகன்..!

இந்திய சந்தையில் நாளுக்கு நாள் போட்டி வலுத்து கொண்டே போகிறது. இதனால் ஒரு காலத்தில் ஆட்டோமொபைல் துறையில் ராஜாவாக விளங்கிய ஃபோக்ஸ்வேகன் தற்போது மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இதனையெல்லாம் மாற்றி மீண்டும் முன்னிலைக்கு வரவேண்டுமென்றால் இதுபோன்ற சில அப்டேட்கள் தயாரிப்பு மாடல்களில் நிச்சயம் தேவை.

Most Read Articles

English summary
Volkswagen Discontinues DSG Units In Polo & Vento: Replaces Them With 6-Speed MT And AMT Units
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X