ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி விலை கணிசமாக குறைய வாய்ப்பு!

ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியின் விலை கணிசமாக குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி விலை கணிசமாக குறைய வாய்ப்பு!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் தீவிரமான வர்த்தக விரிவாக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. புரொஜெக்ட் 2.0 என்ற பெயரிலான இந்த வர்த்தக விரிவாக்க் திட்டத்தின் கீழ் பல புதிய கார் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. குறிப்பாக, எஸ்யூவி வகை மாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளது.

ARE YOU ON INSTAGRAM? FOLLOW TAMIL DRIVESPARK ON INSTAGRAM - CLICK HERE!

ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி விலை கணிசமாக குறைய வாய்ப்பு!

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில், புரொஜெக்டர் 2.0 திட்டத்தின் கீழ் வர இருக்கும் எஸ்யூவி மாடல்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. அதில், அனைவரின் கவனத்தையும் ஈர்த்த மாடல்களில் ஒன்றாக ஃபோக்ஸ்வேகன் டி ராக் இருந்தது.

ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி விலை கணிசமாக குறைய வாய்ப்பு!

இந்த நிலையில், கடந்த மாதம் ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ரூ.19.99 லட்சத்தில் ஏராளமான பிரிமீயம் அம்சங்களுடன் இந்த புதிய எஸ்யூவி விற்பனைக்கு வந்தது.

ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி விலை கணிசமாக குறைய வாய்ப்பு!

முதல் லாட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட கார்களுக்கு முன்பதிவு முடிந்துவிட்டதாக ஃபோக்ஸ்வேகன் வட்டாரத் தகவல் தெரிவிக்கின்றன. இந்தநிலையில், இந்த கார் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படுவதால், விலை அதிகம் இருப்பதாக கருத்து நிலவுகிறது.

ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி விலை கணிசமாக குறைய வாய்ப்பு!

எனவே, வரவேற்பை பொறுத்து இந்த காரை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யலாம் என்ற யோசனையை ஃபோக்ஸ்வேகன் கையில் எடுத்துள்ளது. இதன்மூலமாக, இந்த காரின் விலை ஒரு சில லட்சங்கள் வரை குறைய வாய்ப்பு ஏற்படும். அத்துடன், சந்தையில் மிகச் சிறந்த போட்டியாளராகவும், மதிப்புமிக்க தேர்வாகவும் மாறும் வாய்ப்புள்ளது.

ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி விலை கணிசமாக குறைய வாய்ப்பு!

இதுகுறித்து கார் அண்ட் பைக் தளத்திற்கு பேட்டி அளித்துள்ள ஃபோக்ஸ்வேகன் இந்தியா இயக்குனர் ஸ்டீபன் நாப், இந்தியாவில் டி ராக் எஸ்யூவிக்கு போதிய வரவேற்பு இருக்கும் பட்சத்தில், நிச்சயம் இந்தியாவில் அசெம்பிள் செய்வது சிறந்த யோசனையாக இருக்கும்.

ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி விலை கணிசமாக குறைய வாய்ப்பு!

முக்கிய பாகங்களை இறக்குமதி செய்து இந்தியாவில் அசெம்பிள் செய்வது சாத்தியப்படும் விஷயமாக இருக்கும். இதனை நாங்கள் எதிர்பார்த்திருக்கிறோம்," என்று தெரிவித்துள்ளார்.

ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி விலை கணிசமாக குறைய வாய்ப்பு!

ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி அதிக பிரிமீயம் அம்சங்களை பெற்றிருக்கிறது. எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், அழகிய க்ரில் மற்றும் பம்பர் அமைப்பு, இரட்டை வண்ண அலாய் வீல்கள், ஸ்கிட் பிளேட்,ரூஃப் ரெயில்கள் என வசீகரமாக இருக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி விலை கணிசமாக குறைய வாய்ப்பு!

இந்த காரில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், உயர்தரமான இருக்கைகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப் உள்ளிட்டவை உட்புறத்தை மிகவும் பிரிமீயமாக வைத்துள்ளது.

ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி விலை கணிசமாக குறைய வாய்ப்பு!

புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியில் பிஎஸ்6 தரத்திற்கு இணையான 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி விலை கணிசமாக குறைய வாய்ப்பு!

இந்த கார் ஐரோப்பிய என்சிஏபி க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றிருக்கிறது. இந்த காரில் 6 ஏற்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் என பல பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன ஜீப் காம்பஸ், எம்ஜி ஹெக்டர், ஹூண்டாய் டூஸான் உள்ளிட்ட மாடல்களுக்கு இது போட்டியாக அமைந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 15, 2020, 11:55 [IST]
English summary
German car maker, Volkswagen is considering to assemble the T ROC SUV in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+