பஸாத் ப்ரீமியம் செடான் காரை மீண்டும் இந்திய சந்தைக்கு கொண்டுவரும் ஃபோக்ஸ்வேகன்...

ஃபோக்ஸ்வேகனின் பிரபலமான பஸாத் ப்ரீமியம் செடான் கார் இந்தியாவில் பிஎஸ்6 தரத்தில் மீண்டும் அறிமுகமாகவுள்ளது. இந்த நிலையில் இந்த பிஎஸ்6 கார் சாலை சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளது.

பஸாத் ப்ரீமியம் செடான் காரை மீண்டும் இந்திய சந்தைக்கு கொண்டுவரும் ஃபோக்ஸ்வேகன்...

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் பஸாத் செடான் காரை இந்தியாவில் ஒரு காலத்தில் விற்பனை செய்துவந்தது. ஆனால் அதன்பின் விற்பனை நிறுத்தப்பட்ட இந்த ஃபோக்ஸ்வேகன் மாடல் பிஎஸ்6 தரத்தில் மீண்டும் இந்தியாவிற்கு வருகைதர உள்ளது.

பஸாத் ப்ரீமியம் செடான் காரை மீண்டும் இந்திய சந்தைக்கு கொண்டுவரும் ஃபோக்ஸ்வேகன்...

2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் நம் நாட்டு சந்தையில் பஸாத் மீண்டும் அறிமுகமாகலாம் என கூறப்பட்டுவரும் நிலையில்தான் தற்போது ரஷ்லேன் செய்திதளத்தால் சோதனை ஓட்டத்தின் போது இந்த கார் கண்டறியப்பட்டுள்ளது. புனேக்கு அருகே நடத்தப்பட்டுள்ள இந்த சோதனை ஓட்டத்தில் கார் எந்தவொரு மறைப்பாலும் மறைக்கப்படவில்லை.

பஸாத் ப்ரீமியம் செடான் காரை மீண்டும் இந்திய சந்தைக்கு கொண்டுவரும் ஃபோக்ஸ்வேகன்...

இதனால் வெளிப்புறத்தில் கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட்கள் சிலவற்றை நம்மால் பார்க்க முடிகிறது. குறிப்பாக ஃபேஸ்லிஃப்ட் வெர்சனாக பஸாத் வருகை தருவதால் நேர்த்தியான ஸ்லாட்களுடன் க்ரில் மற்றும் எல்இடி மேட்ரிக்ஸ் ஹெட்லேம்ப்களுடன் காரின் முன்பக்கம் பெரிய அளவில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

பஸாத் ப்ரீமியம் செடான் காரை மீண்டும் இந்திய சந்தைக்கு கொண்டுவரும் ஃபோக்ஸ்வேகன்...

ரீடிசைனில் உள்ள முன் பம்பர், வில் வடிவத்தில் ஃபாக் விளக்குகளுக்கான குழியினை கொண்டுள்ளது. ஃபாக்ஸ் ஏர் வெண்ட்ஸ் முன்பக்க க்ரில்லின் அதே டிசைனில் அதற்கு அடிப்பகுதியில் வழங்கப்பட்டுள்ளது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்த அமைப்பு தான் காருக்கு கிளாசிக் தோற்றத்தை வழங்குகிறது.

பஸாத் ப்ரீமியம் செடான் காரை மீண்டும் இந்திய சந்தைக்கு கொண்டுவரும் ஃபோக்ஸ்வேகன்...

மொத்த காரின் தோற்றமும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட வளைவுகளுடன் காற்றியக்கவியலுக்கு இணக்கமானதாக உள்ளது. பக்கவாட்டில் ஷோல்டர் லைன் முன்சக்கரத்தில் இருந்து பின் சக்கரம் முடியும் வரையில் கொடுக்கப்பட்டுள்ளது.

பஸாத் ப்ரீமியம் செடான் காரை மீண்டும் இந்திய சந்தைக்கு கொண்டுவரும் ஃபோக்ஸ்வேகன்...

இந்த லைனில் இணைந்தாற்போல் கதவு ஹேண்டில்கள் வழங்கப்பட்டிருப்பது உண்மையில் பார்ப்பதற்கு அருமையாக உள்ளது. ஆனால் அட்டகாசமான டிசைனில் உள்ள மல்டி-ஸ்போக் அலாய் சக்கரங்கள் இவை எல்லாத்தையும் மறைத்துவிடுகின்றன.

பஸாத் ப்ரீமியம் செடான் காரை மீண்டும் இந்திய சந்தைக்கு கொண்டுவரும் ஃபோக்ஸ்வேகன்...

பின்புறத்தில் புதிய டிசைனில் பம்பர் மற்றும் புதியதாக எல்இடி டெயில்லைட்கள் முக்கிய மாற்றங்களாக வழங்கப்பட்டுள்ளன. உட்புற கேபின் விசாலமான டேஸ்போர்டு, பெரிய தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்துடன் பரந்த ஒருங்கிணைக்கப்பட்ட மைய கன்சோல் உள்ளிட்டவற்றுடன் மிகவும் ப்ரீமியத்தில் உள்ளது.

பஸாத் ப்ரீமியம் செடான் காரை மீண்டும் இந்திய சந்தைக்கு கொண்டுவரும் ஃபோக்ஸ்வேகன்...

இவற்றுடன் கொள்ளளவு தொடு கண்ட்ரோல் உடன் தாழ்வான-தட்டையான ஸ்டேரிங் சக்கரம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், அடாப்டிவ் விளக்குகள், இரு நிலை க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் நினைவக செயல்பாட்டுடன் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய முன் இருக்கைகள் போன்றவையும் சிம் சார்ந்த இணைப்பு கார் தொழிற்நுட்பத்துடன் அப்டேட் செய்யப்பட்ட பஸாத்தில் வழங்கப்படவுள்ளன.

பஸாத் ப்ரீமியம் செடான் காரை மீண்டும் இந்திய சந்தைக்கு கொண்டுவரும் ஃபோக்ஸ்வேகன்...

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு ஸ்கோடா சூப்பர்ப் மற்றும் டிகுவான் ஆல்ஸ்பேஸ் கார்களில் வழங்கப்பட்டு வருகின்ற 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தான் பஸாத் ஃபேஸ்லிஃப்ட் காருக்கும் கொடுக்கப்படவுள்ளது. அதிகப்பட்சமாக 187 பிஎச்பி மற்றும் 320 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 7-ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படவுள்ளது.

பஸாத் ப்ரீமியம் செடான் காரை மீண்டும் இந்திய சந்தைக்கு கொண்டுவரும் ஃபோக்ஸ்வேகன்...

பஸாத் இந்திய சந்தையில் முதன்முதலாக 2007ல் அறிமுகப்படுத்தப்பட்டது. பிறகு சிறிது காலத்திலேயே பிரபலமான கார்களுள் ஒன்றாக மாறினாலும், அதன்பின் எல்லா கார்களையும் போல் இதுவும் சந்தையில் மோசமான காலத்தை சந்திந்தது.

பஸாத் ப்ரீமியம் செடான் காரை மீண்டும் இந்திய சந்தைக்கு கொண்டுவரும் ஃபோக்ஸ்வேகன்...

இதன் காரணமாக விற்பனை நிறுத்தப்பட்ட பஸாத் விரைவில் பிஎஸ்6 என்ஜின் அறிமுகமாகவுள்ளது. இதற்கு முன்னதாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் கடந்த ஜனவரி மாதத்தில் பஸாத் ஃபேஸ்லிஃப்டின் பெயரை மீண்டும் தனது அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்திற்கு கொண்டு வந்தது.

பஸாத் ப்ரீமியம் செடான் காரை மீண்டும் இந்திய சந்தைக்கு கொண்டுவரும் ஃபோக்ஸ்வேகன்...

ஸ்கோடா சூப்பர்ப் செடான் காருக்கு நேரடி போட்டியாளராக விளங்கவுள்ள ஃபோக்ஸ்வேகன் பஸாத் ப்ரீமியம் செடான் காரின் விலையை எக்ஸ்ஷோரூமில் ரூ.34- 35 லட்சத்தில் எதிர்பார்க்கலாம். ஏனெனில் ஸ்கோடாவின் சூப்பர்ப் மாடலின் விலை ரூ.30- 33 லட்சம் என்ற அளவில் உள்ளது.

Most Read Articles

English summary
Volkswagen Passat BS6 Spied Testing Near Pune Plant – Launch Soon
Story first published: Monday, September 7, 2020, 22:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X