Just In
- 2 hrs ago
ஒருபக்கம் விலை அதிகரிப்பு, மறுபக்கம் சலுகை!! மோட்டார்சைக்கிள் விற்பனையில் கவாஸாகியின் அடுத்தடுத்த அறிவிப்புகள்
- 3 hrs ago
மக்களை தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்க வைக்க அதிரடி... கோவையை தொடர்ந்து மற்றொரு நகரிலும் தரமான சம்பவம்...
- 5 hrs ago
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- 15 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
Don't Miss!
- News
விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் ஜன.26-ல் விவசாயிகளின் 1 லட்சம் டிராக்டர் பேரணி
- Movies
இது எப்ப? நடிகர் சோனு சூட் தையல் கடை.. இங்கு இலவசமாக துணி தைத்து கொடுக்கப்படும்!
- Sports
வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூரை பாராட்டி ட்வீட்டிய கேப்டன்... மராத்தியில் பாராட்டு
- Finance
40% வரை ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி.. அமேசானின் சூப்பர் சலுகைகள்.. கவனிக்க வேண்டிய ஆஃபர் மழை..!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கேமிராக்கள் சுற்றியிருக்க காற்றில் பறந்த ஃபோக்ஸ்வேகன் போலோ... ஹாலிவுட்டை மிஞ்சிய சீன்... வீடியோ!
ஃபோக்ஸ்வேகன் போலோ கார் காற்றில் பறப்பதைப் போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் போலோ கார் காற்றில் பறப்பதைப் போன்ற வீடியோக் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகிய வண்ணம் இருக்கின்றது. இந்த காட்சியானது விபத்து நேர்ந்தபோது எடுக்கப்பட்டது அல்ல என்பது குறிப்பிடத்தகுந்தது. மலையாள திரைப்படம் ஒன்றிற்காக உருவாக்கப்பட்ட ஸ்டண்ட் காட்சியே அது.

திரைப்படத்திற்கு மிக முக்கியமான தேவைகளில் ஒன்றாக ஸ்டண்ட் காட்சிகள் இருக்கின்றன. அவையில்லை என்றால் படத்தில் பெரியளவு சுவாரஷ்யமே இருக்காது. எனவேதான், குடும்ப கதையாக இருந்தாலும் அதில் ஆக்ஷன் மற்றும் ஸ்டண்ட் காட்சிகளை படக்குழுவினர் சேர்த்து விடுகின்றனர்.

அந்தவகையில், 'ஃபாரன்ஸிக்' எனும் மலையாள திரைப்படத்தை விருவிருப்பாக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட ஓர் ஸ்டண்ட் காட்சியே ஃபோக்ஸ்வேகன் கார் காற்றில் பறக்கும் காட்சிகள். இந்த காட்சியே தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை டமோகில்ஸ் மல்லு எனும் யுட்யூப் சேனல் வெளியிட்டிருக்கின்றது.

'ஃபாரன்ஸிக்' ஓர் மலையாள திரில்லர் படம் ஆகும். அண்மையில்தான் இந்த திரைப்படம் வெளியாகியது. படமாக்கப்பட்டுள்ள இந்த காட்சி திரைப்படத்தின் முக்கிய அங்கமாகும். இந்த காட்சியில், காருக்கு உள்ளேயே இருவருக்கு இடையில் சண்டை ஏற்படுவதைப் போன்றும். அப்போது, அதிவேகமாக சென்றுக் கொண்டிருக்கும் போலோ கார் நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிரேன் மீது மோதி காற்றில் பறப்பதைப் போன்றும் காட்சிகள் அடங்கியிருக்கும்.

ஆனால், காட்சிப்படுத்தப்பட்ட வீடியோ முற்றிலும் மாறுபட்டு இருக்கும். இப்படிதான் திரைப்படங்களில் விபத்து மற்றும் ஸ்டண்ட் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. மேலும், ரியலாக எடுக்கப்பட்ட காட்சிக்கும் திரைப்படத்தில் வரக்கூடிய காட்சிக்கும் என்ன வித்தியாசம் என்பதை வெளிப்படுத்தும் வகையிலேயே தற்போது வெளியாகியிருக்கும் வீடியோ உள்ளது.

இந்த திரில்லாங்கான காட்சிக்காக பல வேலைகளை படக்குழுவினர் செய்திருக்கின்றனர். கார் வான் உயர பறப்பதற்காக சரிவு மேடை மற்றும் சாலையில் விழுந்த பின்னர் உராய்ந்தவாறு நெடுந்தூரம் செல்ல மணல் என அனைத்து வேலைகளையும் முன் கூட்டியே படக்குழு தயார் செய்திருந்தது.

இதுமட்டுமின்றி, ஸ்டண்ட் மேனுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு வசதிகளையும் அவர்கள் வழங்கியிருந்ததாக கூறப்படுகின்றது. இம்மாதிரியான சூழ்நிலையிலேயே இந்த ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னரே பாதுகாப்பு காரணமாக விண்ட் ஷீல்டு நீக்கப்பட்டிருப்பதையும் நம்மால் காண முடிகின்றது.

இத்துடன், கார் உருளும் போது ஸ்டண்ட் மேனுக்கு எந்தவித அசம்பாவிதமும் நேர்ந்த விடக்கூடாது என்பதற்காக பல்வேறு அணிகலன் அணிவிக்கப்பட்டிருந்தன. ஹெல்மெட், சீட் பெல்ட் மற்றும் ரைடிங் உடை உள்ளிட்டவை ஸ்டண்ட் கலைஞருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இதன் பின்னரே இந்த அதிரடி காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன.

ஸ்டண்ட் காட்சிக்காக பயன்படுத்தப்பட்ட கார் பற்றிய தகவலையும் தொடர்ந்து பார்த்துவிடலாம். இந்தியாவில் கணிசமாக நல்ல வரவேற்பைப் பெற்று வரும் ஹேட்ச்பேக் கார்களில் ஃபோக்ஸ்வேகன் போலோ காரும் ஒன்று. இந்த காரை பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்தில் அண்மையில்தான் இந்நிறுவனம் இந்தியாவில் களமிறக்கியது.
இந்த மாற்றத்தைத் தொடர்ந்து, இக்கார் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. இதில், இருவிதமான தேர்வுகள் வழங்கப்படுகின்றன. ஒன்று வழக்கமான 1.0 லிட்டர் எம்பிஐ பெட்ரோல் எஞ்ஜினுலும், மற்றொன்று சக்திவாய்ந்த 1.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் தேர்விலும் கிடைக்கிறது.

இதில், சாதாரணமான பெட்ரோல் எஞ்ஜின் அதிகபட்சமாக 76 பிஎச்பி பவரையும், 95 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸில் இயங்குகின்றது. இதேபோன்று சக்திவாய்ந்த பெட்ரோல் எஞ்ஜினைக் கொண்டிருக்கும் தேர்வு அதிகபட்சமாக 110 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகின்றது.