புதிய பெட்ரோல் என்ஜினுடன் ஃபோக்ஸ்வேகன் போலோ & வெண்டோ பிஎஸ்6 கார்கள் அறிமுகம்...
பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக அப்டேட் செய்யப்பட்ட போலோ மற்றும் வெண்டோ மாடல் கார்களை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இவை இரண்டின் ஆரம்ப விலை ரூ.5.82 லட்சம் மற்றும் ரூ.8.86 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்த இரு பிஎஸ்6 மாடல்களிலும் புதியதாக 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் மிகவும் ஆற்றல் மிக்க என்ஜினை பெற்ற மாடலாக விளங்கவுள்ள ஃபோக்ஸ்வேகனின் இந்த பிஎஸ்6 கார்கள், இந்த புதிய என்ஜின் அமைப்பால் சிறந்த எரிபொருள் திறனை பெற்றுள்ளன.

டிஎஸ்ஐ மற்றும் எம்பிஐ என்ற இரு தொழிற்நுட்பங்களில் வழங்கப்படவுள்ள இந்த 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஃபோக்ஸ்வேகனின் இஏ211 குடும்பத்தின் ஒரு அங்கமாக பார்க்கப்படுகிறது. பழைய 1.2 லிட்டர் யூனிட்டிற்கு மாற்றாக அறிமுகமாகியிருக்கும் இந்த 1.0 பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 110 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தவல்லது.

இந்த பெட்ரோல் என்ஜினுடன் 6-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் நிலையாக பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் வழக்கமான 7-ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸிற்கு பதிலாக போலோ மற்றும் வெண்டோ மாடல்களின் டாப் வேரியண்ட்களில் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த 1.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்ச ஆற்றல் இயக்குத்திறன், சிறந்த செயல்திறன், மேம்படுத்தப்பட்ட எரிபொருள்திறன் மற்றும் எதிர்காலத்திற்கு உகந்த என்ஜின் தேர்வுகள் உள்ளிட்டவற்றை வழங்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பிஎஸ்6 கார்கள் அறிமுகத்தின் போது ஃபோக்ஸ்வேகன் பயணிகள் வாகன பிரிவின் இயக்குனர் ஸ்டீஃபன் க்னாஃப் பேசுகையில், கார்பன் தடத்தில் சிறந்த தொழிற்நுட்பங்கள் உடன் கார்களை இந்திய வாடிக்கையாளர்களுக்கு வழங்க ஃபோக்வேகன் எப்போதும் தயாராகவுள்ளது.

எம்பிஐ என்ஜின் மற்றும் ஃபோக்ஸ்வேகனின் புகழ்பெற்ற டிஎஸ்ஐ தொழிற்நுட்பத்துடன் போலோ மற்றும் வெண்டோ மாடல்களின் பிஎஸ்6 வேரியண்ட்களை அறிமுகப்படுத்துவதில் பெருமை அடைகிறோம். இந்திய அரசாங்கத்தின் புதிய மாசு உமிழ்வு விதிக்கு தகுந்தாற்போல் தனது மொத்த தயாரிப்பு கார்களையும் பிஎஸ்6 தரத்திற்கு மாற்றவுள்ளதாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற குறைந்த விலை வித்தியாசங்களுடன் புதிய போலோ மற்றும் வெண்டோ மாடல்கள் சந்தைப்படுத்தப்பட்டுள்ளன என கூறினார். இந்நிறுவனத்தின் இந்த புதிய பிஎஸ்6 கார்கள் வழக்கமான ட்ரெண்ட்லைன், கம்ஃபோர்ட்லைன், ஹைலைன் மற்றும் ஹைலைன் ப்ளஸ் வேரியண்ட்களை தான் தொடரவுள்ளன. ஃபோக்ஸ்வேகன் போலோவின் டாப் வேரியண்ட்டாக அதே ஜிடி-லைன் தான் உள்ளது.

ஃபோக்ஸ்வேகனின் போலோ & வெண்ட்டோ மாடல்கள் பிஎஸ்6 அப்டேட்டால் புதிய 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினை மட்டும் தான் மாற்றமாக பெற்றுள்ளன. மற்றப்படி தொழிற்நுட்பங்கள், வழங்கப்பட்டுள்ள வசதிகள் மற்றும் பிரிவில் உள்ள போட்டி மாடல்கள் உள்ளிட்டவற்றை எல்லாம் அப்படியே தொடர்ந்துள்ளன.


Click it and Unblock the Notifications








