ஃபோக்ஸ்வேகன் போலோ, வென்ட்டோ லிமிடேட் எடிசன் மாடல்கள் அறிமுகம்

கவர்ச்சிகரமான அம்சங்களுடன் ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் வென்ட்டோ டிஎஸ்ஐ கார்களின் லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மாடல்களின் சிறப்பம்சங்கள் மற்றும் கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஃபோக்ஸ்வேகன் போலோ, வென்ட்டோ லிமிடேட் எடிசன் மாடல்கள் அறிமுகம்

ஃபோக்ஸ்வேகன் போலோ, வென்ட்டோ கார்களின் டிஎஸ்ஐ பெட்ரோல் மாடலில் வழங்கப்படும் ஹைலைன் ப்ளஸ் வேரியண்ட்டில் கூடுதல் சிறப்பம்சங்களை சேர்த்து இந்த புதிய வேரியண்ட் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் போலோ, வென்ட்டோ லிமிடேட் எடிசன் மாடல்கள் அறிமுகம்

போலோ, வென்ட்டோ கார்களின் டிஎஸ்ஐ லிமிடேட் எடிசன் மாடல்களில் கவர்ச்சிகரமான பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கருப்பு வண்ணத்திலான சைடு மிரர்கள், கருப்பு வண்ண கூரை, கிளாஸி பிளாக் என்ற விசேஷ கருப்பு வண்ணத்திலான ரியர் ஸ்பாய்லர் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

ஃபோக்ஸ்வேகன் போலோ, வென்ட்டோ லிமிடேட் எடிசன் மாடல்கள் அறிமுகம்

இந்த லிமிடேட் எடிசன் மாடல்களில் முக்கிய அம்சமாக, கதவுகளில் பாடி டீக்கெல் ஸ்டிக்கர்களுடன் டிஎஸ்ஐ பேட்ஜ் பொருத்தப்பட்டு இருப்பதும் தனி கவனம் பெறுகிறது.

ஃபோக்ஸ்வேகன் போலோ, வென்ட்டோ லிமிடேட் எடிசன் மாடல்கள் அறிமுகம்

போலோ மற்றும் வென்ட்டோ டிஎஸ்ஐ மாடலில் இருக்கும் 1.0 லிட்டர் டர்போ பிஎஸ்6 பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 109 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. இரண்டிலும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு இல்லை.

ஃபோக்ஸ்வேகன் போலோ, வென்ட்டோ லிமிடேட் எடிசன் மாடல்கள் அறிமுகம்

போலோ 1.0 லிட்டர் டிஎஸ்ஐ மாடல் லிட்டருக்கு 18.24 கிமீ மைலேஜையும், வென்ட்டோ டிஎஸ்ஐ மாடல் லிட்டருக்கு 17.69 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று அராய் சான்று கூறுகிறது. இதில், போலோ கார் 1.0 லிட்டர் எம்பிஐ பெட்ரோல் எஞ்சின் கொண்டதாகவும் கிடைக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் போலோ, வென்ட்டோ லிமிடேட் எடிசன் மாடல்கள் அறிமுகம்

போலோ, வென்ட்டோ கார்களின் ஹைலைன் பிளஸ் வேரியண்ட்டில் இருக்கும் அனைத்து வசதிகளும் இந்த லிமிடேட் எடிசன் மாடல்களில் இடம்பெற்றுள்ளது. அதேநேரத்தில், கூடுதல் சிறப்பம்சங்களுடன் விலை குறைவாக வந்துள்ளதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்.

ஃபோக்ஸ்வேகன் போலோ, வென்ட்டோ லிமிடேட் எடிசன் மாடல்கள் அறிமுகம்

இதில், போலோ லிமிடேட் டிஎஸ்ஐ எடிசன் வேரியண்ட்டிற்கு ரூ.7.89 லட்சமும், வென்ட்டோ லிமிடேட் டிஎஸ்ஐ மாடலுக்கு ரூ.10.99 லட்சமும் நிலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களை கவரும் விலையில் வந்துள்ளன.

ஃபோக்ஸ்வேகன் போலோ, வென்ட்டோ லிமிடேட் எடிசன் மாடல்கள் அறிமுகம்

அதாவது, சாதாரண போலோ காரின் டிஎஸ்ஐ ஹைலைன் ப்ளஸ் வேரியண்ட்டைவிட லிமிடேட் எடிசன் வேரியண்ட் ரூ.13,000 குறைவான விலையிலும், வென்ட்டோ காரின் சாதாரண ஹைலைன் பிளஸ் வேரியண்ட்டைவிட லிமிடேட் எடிசன் வேரியண்ட்டானது ரூ.1 லட்சம் விலை குறைவாகவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஃபோக்ஸ்வேகன் போலோ, வென்ட்டோ லிமிடேட் எடிசன் மாடல்கள் அறிமுகம்

கொரோனா பாதிப்பால் விற்பனை அடியோடு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும் விதத்தில் இந்த புதிய லிமிடேட் எடிசன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தனித்துவத்தை விரும்பும், போலோ மற்றும் வென்ட்டோ கார் பிரியர்களுக்கு இது மதிப்புமிக்க தேர்வாக அமையும்.

More from DriveSpark

Article Published On: Monday, May 11, 2020, 19:30 [IST]
English summary
Volkswagen Cars India has launched the TSI edition Polo and Vento models in the Indian market. The new Volkswagen Polo and Vento TSI editions are based on the 'Highline Plus' trim. The cars are priced at Rs 7.89 lakh for the Polo TSI and Rs 10.99 lakh for the Vento TSI. Both prices are ex-showroom (Delhi).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+