ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டிகுவான் ஆல்ஸ்பேஸ் மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலுக்கான முன்பதிவுகளும் இன்று முதல் துவங்கியுள்ளன.

இதனால் புதிய டிகுவான் மாடலின் இந்திய அறிமுகத்தை இன்னும் ஒரு மாத காலத்திற்குள் எதிர்பார்க்கலாம். அதிக அளவிலான வீல்பேஸை கொண்டுள்ள இந்த மாடல், தற்சமயம் சந்தையில் விற்பனை செய்யப்பட்டுவரும் டிகுவான் காரை விட 109 மிமீ நீளம் அதிகமாக பெற்றுள்ளது.

டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டேவர் மற்றும் ஸ்கோடா கோடியாக் போன்ற தனது பிரிவு மாடல்களுடன் கடுமையாக விற்பனையில் போட்டியிட இந்த புதிய ஆல்ஸ்பேஸ் மாடலில் மூன்றாவது இருக்கையை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் சேர்த்துள்ளது.

இதுதான் இந்த காரின் நீளம் மற்றும் வீல்பேஸ் அளவுகளின் அதிகரிப்பிற்கு காரணம். ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் எஸ்யூவி மாடல்களுக்கான இந்தியா 2.0 என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக தற்போது ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய டிகுவான் மாடல், புதிய க்ரில், திருத்தியமைக்கப்பட்ட எல்இடி ஹெட்லைட்ஸ் மற்றும் ரீ-டிசைனில் முன்புற பம்பர் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது.

உட்புறத்திலும் இந்த கார் ஏகப்பட்ட நவீன தொழிற்நுட்பங்களை பெற்றுள்ளது. இன்போடெயின்மெண்ட் தொடுத்திரை, 'வியன்னா' லெதரால் போர்த்தப்பட்ட இருக்கைகள், மூன்று நிலைகளில் க்ளைமேட் கண்ட்ரோல் போன்றவை இந்த காரின் உட்புறத்தில் வழங்கப்பட்டுள்ள அம்சங்களாகும்.

இவை தவிர இந்த காரில் பனோராமிக் சன்ரூஃப்-ம் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சங்களாக இந்த புதிய எஸ்யூவி மாடலில் ஏழு காற்றுப்பைகள், இபிடியுடன் உள்ள ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம், இஎஸ்பி, டயரின் அழுத்தத்தை அளவிடும் வசதி மற்றும் பின்புற பார்க்கிங் கேமிரா முதலியவை உள்ளன.

ஃபோக்ஸ்வேகனின் இந்த புதிய டிகுவான் மாடலில் இயக்க ஆற்றலை வழங்குவதற்காக பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 2.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. டிகுவானின் தற்போதைய தலைமுறை காரில் 2.0 லிட்டர் டீசல் தான் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய மாடலில் பிஎஸ்4 தரத்தில் உள்ள இந்த என்ஜின் 143 பிஎச்பி பவரையும் 340 என்எம் டார்க் திறனையும் காருக்கு வழங்கி வருகிறது. இந்த என்ஜினுடன் ட்ரான்ஸ்மிஷனிற்காக 7-ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்படுகிறது.

டிகுவான் பிஎஸ்6 மாடலில் இந்த ட்ரான்ஸ்மிஷன் தேர்வில் எந்த மாற்றமும் இல்லை. டங்க்ஸ்டன் சில்வர், அட்லாண்டிக் நீலம், அடர்த்தியான கருப்பு, வரையாட்டின் வெள்ளை மற்றும் இண்டியம் க்ரே என 5 நிற தேர்வுகளில் டீலர்ஷிப்களில் தற்போதைய டிகுவான் மாடல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிற தேர்வுகளிலும் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது.

ஃபோக்ஸ்வேகனின் 4மோஷன் ஆல்-வீல் ட்ரைவ் சிஸ்டத்தை தற்போது பெற்றுள்ள 2020 டிகுவான் மாடல், கம்ஃபர்ட்-லைன் மற்றும் ஹை-லைன் என இரு வேரியண்ட்களில் கிடைக்கிறது. பிஎஸ்6-க்கு அப்டேட் செய்யப்பட்டுள்ள இந்த இரு வேரியண்ட்களும் ரூ.35- ரூ.40 லட்சத்தில் இந்திய சந்தைக்கான விலையை பெறவுள்ளன.


Click it and Unblock the Notifications








