4 புதிய எஸ்யூவிகளை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தும் ஃபோக்ஸ்வேகன்!

இந்திய மார்க்கெட்டில் அதிரடி திட்டத்துடன் 4 புதிய எஸ்யூவி மாடல்களை ஃபோக்ஸ்வேகன் பார்வைக்கு கொண்டு வர இருக்கிறது. இதற்காக, டீசர் ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறது.

4 புதிய எஸ்யூவிகளை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தும் ஃபோக்ஸ்வேகன்!

ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் குறிப்பிடத்தக்க இடத்தை பெறுவதற்கான புராஜெக்ட் 2.0 திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இந்த திட்டத்தின்படி, உலகத் தரம் வாய்ந்த பல புதிய எஸ்யூவி மாடல்களை இந்திய சந்தையில் களமிறக்க திட்டமிட்டுள்ளது.

4 புதிய எஸ்யூவிகளை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தும் ஃபோக்ஸ்வேகன்!

இந்த எஸ்யூவி மாடல்களை இந்தியர்களிடையே எளிதாக கொண்டு சேர்ப்பதற்கான தளமாக அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவை பயன்படுத்திக் கொள்ளும் முனைப்பில் இருக்கிறது.

4 புதிய எஸ்யூவிகளை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தும் ஃபோக்ஸ்வேகன்!

அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய கார்களை இந்தியர்களுக்கு காட்டும் விதத்தில் டீசர் ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறது. இந்த டீசரில் 4 புதிய கார்கள் வருவது உறுதியாகி இருக்கிறது.

4 புதிய எஸ்யூவிகளை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தும் ஃபோக்ஸ்வேகன்!

அதாவது, டீசரில் இருக்கும் படத்தில் இந்தியர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ஃபோக்ஸ்வேகன் டி-ராக் எஸ்யூவி இடம்பெற்றுள்ளது. இந்த எஸ்யூவி எம்ஜி ஹெக்டர், ஜீப் காம்பஸ் உள்ளிட்ட மாடல்களுடன் மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் போட்டி போடும்.

4 புதிய எஸ்யூவிகளை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தும் ஃபோக்ஸ்வேகன்!

வலிமையான தோற்றத்தை பெற்றிருக்கும் இந்த எஸ்யூவியில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் தேர்வு இடம்பெறும். வெளிநாடுகளில் டீசல் மாடலில் கிடைக்கிறது. ஆனால், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் காரணமாக, இந்தியாவில் அறிமுகம் செய்யப்படாது என்று தெரிகிறது.

4 புதிய எஸ்யூவிகளை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தும் ஃபோக்ஸ்வேகன்!

அடுத்து, ஐ.டி.க்ராஸ் என்ற எலெக்ட்ரிக் எஸ்யூவியின் கான்செப்ட் மாடலும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவியனது ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் எம்இடி பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

4 புதிய எஸ்யூவிகளை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தும் ஃபோக்ஸ்வேகன்!

இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவியில் 83kWh திறன் கொண்ட லித்தியம் அயான் பேட்டரி பயன்படுத்தப்படும். இரண்டு ஆக்சில்களிலும் மின் மோட்டார் கொடுக்கப்பட்டு இருக்கும். முன்னால் இருக்கும் மின்மோட்டார் 102 எச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வழங்கும். பின்னால் பொருத்தப்பட்டு இருக்கும் மின் மோட்டார் 204 எச்பி பவரையும், 310 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும்.

4 புதிய எஸ்யூவிகளை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தும் ஃபோக்ஸ்வேகன்!

ஃபோக்ஸ்வேகனின் சக்திவாய்ந்த இந்த எலெக்ட்ரிக் கார் மொத்தமாக 306 எச்பி பவரையும், 450 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ஒருமுறை பேட்டரியை சார்ஜ் செய்தால் 500 கிமீ தூரம் வரை பயணிக்கும். மணிக்கு 180 கிமீ வேகம் வரை செல்லும்.

4 புதிய எஸ்யூவிகளை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தும் ஃபோக்ஸ்வேகன்!

மூன்றாவதாக டி க்ராஸ் என்ற காம்பேக்ட் எஸ்யூவி மாடல் காட்சிப்படுத்தப்பட இருக்கிறது. ஃபோக்ஸ்வேகன் டி-ராக் எஸ்யூவியின் டிசைன் தாத்பரியங்களுடன் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் எம்க்யூபி பிளாட்ஃபார்மில் இந்த கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

4 புதிய எஸ்யூவிகளை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தும் ஃபோக்ஸ்வேகன்!

இந்த காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், பெரிய சக்கரங்கள் உள்ளிட்டவற்றுடன் வாடிக்கையாளர்களை கவரும் பல சிறப்பம்சங்களை பெற்றிருக்கும். ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் கார்களுக்கு இணையான ரகத்தில் வர இருக்கிறது.

4 புதிய எஸ்யூவிகளை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தும் ஃபோக்ஸ்வேகன்!

இதுதவிர்த்து, ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் டிகுவான் ஆல்ஸ்பேஸ் என்ற எஸ்யூவி மாடலையும் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்த இருக்கிறது. இந்த ஆல்ஸ்பேஸ் என்ற மாடலானது ஏற்கனவே விற்பனையில் இருக்கும் டிகுவான் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடலாக வர இருக்கிறது.

4 புதிய எஸ்யூவிகளை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தும் ஃபோக்ஸ்வேகன்!

இந்த எஸ்யூவியில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இறுக்கும். இந்த எஞ்சின் 190 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். பிஎஸ்-6 தரத்திற்கு இணையாக வர இருக்கிறது. டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

4 புதிய எஸ்யூவிகளை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தும் ஃபோக்ஸ்வேகன்!

மொத்தத்தில் ஆட்டோ எக்ஸ்போ வரும் பார்வையாளர்கள் மனதில் இடம்பெற்று இந்தியாவில் புதிய உத்வேகத்துடன் செயலாற்ற ஃபோக்ஸ்வேகன் செயலாற்றி வருகிறது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் எதிர்பார்ப்புகளை புதிய எஸ்யூவி மாடல்கள் நனவாக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from DriveSpark

Article Published On: Saturday, January 11, 2020, 12:52 [IST]
English summary
Volkswagen India has announced its product lineup for the upcoming Auto Expo 2020. The German brand will be showcasing four models at the 2020 Auto Expo, all of which will go on sale in the Indian market in the next two years.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+