பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபோக்ஸ்வேகன் டி-ராக் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம்... முழு விபரம்...!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டி-ராக் எஸ்யூவி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபேக்ஸ்வேகன் டி-ராக் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம்... முழு விபரம்...!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டி-ராக் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் ஆரம்பநிலை எஸ்யூவி ரக காராகும். ஃபோக்ஸ்வேகன் இந்த காரை நடப்பாண்டில் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போவில்தான் முதல் முறையாக அறிமுகம் செய்தது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபேக்ஸ்வேகன் டி-ராக் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம்... முழு விபரம்...!

அப்போது, டி-ராக் எஸ்யூவி காரை விரைவில் இந்தியாவில் களமிறக்க இருப்பதாக அறிவித்தது. ஆகையால், இந்த காரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தநிலையில் இன்று அந்த கார் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபேக்ஸ்வேகன் டி-ராக் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம்... முழு விபரம்...!

போக்ஸ்வேகன் நிறுவனம் இந்த மாதத்தின் ஆரம்பத்தில் புத்தம் புதிய டிகுவான் என்ற எஸ்யூவி காரை அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தகுந்தது. இதைத்தொடர்ந்து, இம்மாதத்திலேயே இரண்டாம் மாடலாக டி-ராக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த கார் ஃபுல்லி லோடட் ரகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆகையால், இதன் விலை அதிகரித்து காணப்படுகின்றது. இந்திய மதிப்பில் டி-ராக் எஸ்யூவிக்கு ரூ. 19.9 லட்சம் என்ற ஆரம்ப விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபேக்ஸ்வேகன் டி-ராக் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம்... முழு விபரம்...!

ஃபோக்ஸ்வேகன் இந்த காரை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு முன்பாக புக்கிங்கை தொடங்கிவிட்டது. இதனால், இதுவரை 300-க்கும் அதிகமான யூனிட்டுகளுக்கான புக்கிங் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளது. இது விரைவில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபேக்ஸ்வேகன் டி-ராக் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம்... முழு விபரம்...!

டி-ராக் இந்தியாவில் பிரிமியம் எஸ்யூவி காராக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, இதன் இட வசதி மற்றும் சொகுசு வசதிகள் நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்தும் வகையில் உள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபேக்ஸ்வேகன் டி-ராக் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம்... முழு விபரம்...!

இதுமட்டுமின்றி தொழில்நுட்ப அம்சத்திலும் பிரம்மிப்பின் உச்சத்திற்கு இந்த கார் நம்மை அழைத்துச் செல்கின்றது. டி-ராக் காரின் அதிக இட வசதிக்காக 4,342 மிமீ நீளம் வழங்கப்பட்டுள்ளது இதேபோன்று, உயரத்திற்காக 1,537 மிமீ, அகலத்திற்கு 1,819 மிமீ, வில் பேஸ் 2,590 மிமீ வழங்கப்பட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் சிபியூ (Completely Built Unit) வழியாக இந்த காரை களமிறக்க இருக்கின்றது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபேக்ஸ்வேகன் டி-ராக் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம்... முழு விபரம்...!

ஆகையால், இது எதிர்கால டிசைன் தாத்பரியங்களைப் பெற்றிருக்கின்றது. குறிப்பாக, எல்இடி டிஆர்எல்-களுடன் கூடிய எல்இடி புரஜக்டர் ஹெட்லேம்ப் அனைவரையும் கவரும் வகையில் இருக்கின்றது. இத்துடன், கூடுதல் கவர்ச்சி சேர்க்கும் விதமாக காரின் முகப்பு பகுதி கிரில் இருக்கின்றது. இந்த கிரில்லின் மையப்பகுதியில் VW பேட்ஜ் பொருத்தப்பட்டுள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபேக்ஸ்வேகன் டி-ராக் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம்... முழு விபரம்...!

கவர்ச்சியான தோற்றத்தைத் தொடர்ந்து ஸ்போர்ட்டி லுக்கிற்கான தோற்றத்தையும் இந்த டி-ராக் தன்னுள் தாங்கி நிற்கின்றது. இதற்காக, 17 இன்ச் அலாய் வீல், கட்டுமஸ்தான லைன்கள், கிரீசஸ் மற்றும் ஃபிளார்ட் வீல் ஆர்ச்சுகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபேக்ஸ்வேகன் டி-ராக் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம்... முழு விபரம்...!

தொடர்ந்து, காரின் பின் பக்கத்திலும் ஃபாவுக்ஸ் ஸ்கிட் பிளேட், மெல்லிய இழை போன்ற எல்இடி மின் விளக்குகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இத்துடன், காரின் மேற்கூரையில் ஸ்பாய்லர் நிறுவப்பட்டிருக்கின்றது.

மேற்கூறிய அனைத்தும் டி-ராக் எஸ்யூவி காரின் கவர்ச்சி மற்றும் ஸ்போர்ட்ஸ் தோற்றத்தை தூக்கலாக காட்டிலும் வழங்கப்பட்டிருக்கின்றது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபேக்ஸ்வேகன் டி-ராக் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம்... முழு விபரம்...!

இதேபோன்று காரின் உட்புற பகுதியில் பிரிமியம் வசதிக்காக பெரிய அளவிலா டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், விர்சுவல் காக்பிட், லெதர் இருக்ககைகள், பனோரமிக் சன் ரூஃப், ட்யூவல் டோன் அலாய் வீல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஆம்பியன்ட் லைட், கீ லெஸ் எண்ட்ரீ உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபேக்ஸ்வேகன் டி-ராக் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம்... முழு விபரம்...!

தொடர்ந்து, பாதுகாப்பு அம்சங்களுக்காக முன் மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் ஏர் பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி, எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபேக்ஸ்வேகன் டி-ராக் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம்... முழு விபரம்...!

இந்த காரின் எஞ்ஜின் அம்சத்தைப் பொருத்தவரையில் பிஎஸ்-6 தரத்திலான 1.5 லிட்டர் டிஎஸ்ஐ (இவிஓ) பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 148 பிஎச்பி மற்றும் 240 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது. இந்த எஞ்ஜின் வழக்கமான 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனில் இயங்குகின்றது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபேக்ஸ்வேகன் டி-ராக் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம்... முழு விபரம்...!

இது மணிக்கு 205 கிமீ வேகத்தில் செல்லும் திறனை வழங்குகின்றது. மேலும், 0த்தில் இருந்து 100 கிமீ வேகத்தை வெறும் 8.4 விநாடிகளிலேயே தொடுவதற்கு உதவும்.

இதுமட்டுமின்றி, இந்த கார் ஆறு விதமான வண்ண தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அவை, குர்குமா மஞ்சள், தூய வெள்ளை, ரவென்னா நீலம், ஆற்றல்மிக்க ஆரஞ்சு, இண்டியம் சாம்பல் மற்றும் டீப் பிளாக் பியர்ல் ஆகியவை ஆகும். இத்துடன், கறுப்பு நிறம் கொண்ட கூரை தேர்வும் வழங்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 18, 2020, 16:32 [IST]
English summary
Volkswagen T-Roc SUV Launched In India At Rs 19.99 Lakh: Will Rival The Jeep Compass. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+