ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி பெரும் வரவேற்பு... முதல் லாட்டிற்கு புக்கிங் நிறைவடைந்தது!

ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவிக்கு இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் லாட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து டி ராக் எஸ்யூவிகளுக்கும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது. புதிதாக முன்பதிவுகள் ஏற்கப்படாது என்று ஃபோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது.

ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி பெரும் வரவேற்பு... முதல் லாட்டிற்கு புக்கிங் முடிந்தது!

கடந்த மார்ச் மாதம் ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. புதிய இறக்குமதி கொள்கையை பயன்படுத்தி, முதல் 2,500 யூனிட்டுகளை எந்த மாற்றங்களும் இல்லாமல் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும் என்று ஃபோக்ஸ்வேகன் அறிவித்தது.

ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி பெரும் வரவேற்பு... முதல் லாட்டிற்கு புக்கிங் முடிந்தது!

அதன்படி, முதல் லாட்டில் 1,000 கார்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. மேலும், ரூ.19.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டது.

ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி பெரும் வரவேற்பு... முதல் லாட்டிற்கு புக்கிங் முடிந்தது!

இந்த நிலையில், ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவிக்கு ஆரம்பம் முதலே நல்ல புக்கிங் கிடைத்து வந்தது. மேலும், கொரோனா பிரச்னையால் டெலிவிரிப் பணிகளில் தாமதம் ஏற்பட்டது.

ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி பெரும் வரவேற்பு... முதல் லாட்டிற்கு புக்கிங் முடிந்தது!

எனினும், வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்தனர். இதனால், முதல் லாட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து டிராக் எஸ்யூவிகளுக்கும் முன்திவு செய்யப்பட்டு விட்டதாகவும், இனி புதிய முன்பதிவு ஏற்கப்படாது என்றும் ஃபோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது.

ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி பெரும் வரவேற்பு... முதல் லாட்டிற்கு புக்கிங் முடிந்தது!

அதாவது, இரண்டாவது தொகுப்பு ஒதுக்கீடு செய்யப்பட்ட பின்னரே இனி டி ராக் எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கப்படும். தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.

ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி பெரும் வரவேற்பு... முதல் லாட்டிற்கு புக்கிங் முடிந்தது!

ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியின் தனித்துவமான டிசைன் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்தது. இந்த கார் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் MQB என்ற கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்பட்டது.

ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி பெரும் வரவேற்பு... முதல் லாட்டிற்கு புக்கிங் முடிந்தது!

இந்த காரில் 1.5 லிட்டர் எவோ டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி பெரும் வரவேற்பு... முதல் லாட்டிற்கு புக்கிங் முடிந்தது!

புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியில் பனோரமிக் சன்ரூஃப், 6 ஏர்பேக்குகள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 2 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, வியன்னா லெதர் இருக்கைகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி பெரும் வரவேற்பு... முதல் லாட்டிற்கு புக்கிங் முடிந்தது!

அனைத்து வசதிகளும் நிரம்பிய ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இந்த எஸ்யூவி மஞ்சள், வெள்ளை, ஆரஞ்ச், சாம்பல், நீலம் மற்றும் கருப்பு வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. ஜீப் காம்பஸ், ஹூண்டாய் டூஸான் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக இருக்கிறது.

Most Read Articles

English summary
Volkswagen has announced that the T-Roc first lot has been sold out in India and bookings stopped temporarily.
Story first published: Wednesday, September 9, 2020, 16:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X