டி-ராக் எஸ்யூவி காரை இந்திய டீலர்ஷிப்களுக்கு அனுப்பி வைக்கும் ஃபோக்ஸ்வேகன்... டெலிவிரி எப்போது..?
ஜெர்மனை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் டி-ராக் மாடலை இந்திய டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு அனுப்பி வைக்கும் பணியை துவங்கியுள்ளது. இதுகுறித்து டீம்-பிஎச்பி செய்தி தளம் வெளியிட்டுள்ள தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

டீலர்ஷிப்களை சென்றடைந்து வருவதால் மிக விரைவில் டெலிவிரியை ஆரம்பிக்கவுள்ள ஃபோக்ஸ்வேகன் டி-ராக் மாடல் அரசாங்கத்தின் வழிகாட்டுத்தலின்படி இந்தியாவில் சிபியூ முறையில் வருடத்திற்கு 2,500 யூனிட்களாக சந்தைப்படுத்தப்படவுள்ளன.

ஏனெனில் இத்தகைய முறையில் இறக்குமதி செய்யப்பட்டால் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு ஒத்திசைவு தேவைப்படாது. அதேநேரம் இந்த எஸ்யூவி மாடலுக்கு இந்திய வாடிக்கையாளர்களிடையே கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யும் திட்டமும் இந்நிறுவனத்திடம் உள்ளது.

டி-ராக் மாடலின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.19.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இந்த கார் அறிமுகத்திற்கு சில மாதங்களுக்கு பிறகு இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்பட்டால் விலையில் சில லட்சங்கள் குறைய வாய்ப்புள்ளது.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தைக்கான தனது 2.0 திட்டத்தில் பல புதிய மாடல்களை நம் நாட்டில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தான் தற்போது டி-ராக் எஸ்யூவி கார் சந்தையை அடைந்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த டி-ராக் மாடலின் இந்திய வெர்சனில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் 1.5 லிட்டர், 4-சிலிண்டர், டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜினை பொருத்தியுள்ளது.

அதிகப்பட்சமாக 5,000- 6,000 ஆர்பிஎம்-ல் 148 பிஎச்பி பவரையும், 1,500- 3,500 ஆர்பிஎம்-ல் 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 7-ஸ்பீடு ட்யூல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

தற்போது டீலர்ஷிப்களுக்கு சென்றுள்ள புதிய டி-ராக் மாடலில் எல்இடி தரத்தில் ஹெட்லைட்கள் & பகல்நேர விளக்குகள், ஸ்டைலான க்ரில் & பம்பர் அமைப்பு, ட்யூல் டோனில் அலாய் சக்கரங்கள், ஸ்கிட் ப்ளேட்கள், ரூஃப் ரெயில்கள், உட்புறத்தில் தொடுத்திரையுடன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் பனோராமிக் சன்ரூஃப் போன்ற ப்ரீமியம் தரத்திலான அம்சங்கள் உள்ளன.


Click it and Unblock the Notifications








