ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விபரம்!

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. டொயோட்டா ஃபார்ச்சூனர் சந்தையை குறிவைத்து களமிறக்கப்பட்டுள்ள இந்த புதிய மாடல் குறித்த பல முக்கிய விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விபரம்!

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடல் கடந்த மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இந்த புதிய மாடல் இன்று முறைப்படி இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் எஸ்யூவி முழுவதுமாக கட்டமைக்கப்பட்ட நிலையில், இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும்.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விபரம்!

ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் இந்தியாவில் புராஜெக்ட் 2.0 என்ற திட்டத்தின் கீழ் பல புதிய மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பது தெரிந்ததே. இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கமாக, இந்தியாவுக்கான பிரத்யேக அம்சங்களுடன் புதிய மாடல்கள் கட்டமைக்கப்படும்.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விபரம்!

அதன் அடிப்படையில் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் MQB கட்டமைப்பு கொள்கையின் அடிப்படையிலான இந்தியாவுக்கான MQB AO IN என்ற கட்டமைப்புக் கொள்கையின் கீழ் இந்த புதிய மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விபரம்!

புதிய ஃபோக்ஸ்வகேன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் எஸ்யூவி மாடலில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 187 பிஎச்பி பவரையும், 370 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன், ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மூலமாக அனைத்து சக்கரங்களும் எஞ்சின் சக்தி செலுத்தப்படுகிறது.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விபரம்!

ஏற்கனவே இந்தியாவில் விற்பனையில் உள்ள ஃபோக்ஸ்வேகன் டிகுவான் 5 சீட்டர் மாடலை போன்றே, டிசைனில் ஒத்திருக்கிறது. இருப்பினும், மூன்றாவது வரிசை இருக்கை அமைப்புக்காக வீல்பேஸ் உள்ளிட்டவை அதிகரிக்கப்பட்டுள்ளன.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விபரம்!

இந்த புதிய எஸ்யூவியில் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள், எல்இடி பனி விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் உள்ளன. 18 அங்குல அலாய் வீல்கள் நிரந்தர அம்சமாக வழங்கப்படுகின்றன.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விபரம்!

புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் எஸ்யூவியின் டேஷ்போர்டு மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதன் பெரிய அளவு தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு செயலிகளை சப்போர்ட் செய்யும். புளூடூத் இணைப்பு வசதியும் உள்ளது.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விபரம்!

இந்த காரில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், பேடில் ஷி)ப்ட் வசதி, பனோரமிக் சன்ரூஃப், 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல், மெமரி வசதியுடன் சைடு மிரர்கள், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், வெப்பத்தால் அதிகம் பாதிக்கப்படாத விசேஷ விண்ட்ஷீல்டு கண்ணாடி, ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், புஷ் பட்டன் ஸ்டார்ட், கீ லெஸ் என்ட்ரி, டிரைவ் மோடு செலக்டர் உள்ளிட்ட ஏராளமான தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விபரம்!

புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் எஸ்யூவியில் 7 ஏர்பேக்குகள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஹில் டிசென்ட் கன்ட்ரோல், முன்புற, பின்புற பனி விளக்குகள், ஆட்டோ ஹோல்டு ஃபங்ஷன், எலெக்ட்ரானிக் இம்மொபைலைசர், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் ஆங்கர்கள் உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விபரம்!

புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் எஸ்யூவியில் ஆரஞ்ச் மெட்டாலிக், ப்யூர் ஒயிட், ரூபி ரெட் மெட்டாலிக், பெட்ரோலியம் புளூ, பிளாட்டினம் க்ரே மெட்டாலிக், பைரைட் சில்வர் மற்றும் டீப் பிளாக் பியர்ல் என 7 வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விபரம்!

புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் எஸ்யூவிக்கு ரூ.33.12 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. டீலர்களில் முன்பதிவும் துவங்கப்பட்டுள்ளது. விரைவில் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்பட இருக்கின்றன. டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர், மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 ஆகிய எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, March 6, 2020, 14:05 [IST]
English summary
Volkswagen has launched its new seven-seater Tiguan AllSpace SUV in the Indian market. The new Volkswagen Tiguan AllSpace is offered with a starting price of Rs 33.12 lakh, ex-showroom (India).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+