முன்பை விட மிகவும் அப்டேட்டான டிசைனில் புதிய ஃபோக்ஸ்வேகன் வெண்டோ..! டீசர் புகைப்படம் வெளியீடு

முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான ஃபோக்ஸ்வேகன், தனது பிரபலமான வெண்டோ காம்பெக்ட் செடானின் அடுத்த தலைமுறை காரின் ஸ்கெட்ச் புகைப்படங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் மூலம் வெளிவந்த புதிய வெண்டோ மாடலை பற்றிய தகவல்களை இனி காண்போம்.

முன்பை விட மிகவும் அப்டேட்டான டிசைனில் புதிய ஃபோக்ஸ்வேகன் வெண்டோ..! டீசர் புகைப்படம் வெளியீடு

இந்த ஸ்கெட்ச் புகைப்படங்களில் வெண்டோவின் புதிய தலைமுறை காரானது புதிய வெளிப்புற டிசைனை கொண்டிருப்பது தெரிய வருகிறது. இதனால் இந்த செடான் மாடல் இந்நிறுவனத்தின் போலோ ஹேட்ச்பேக்கில் இருந்து தனித்து காணப்படுகிறது.

முன்பை விட மிகவும் அப்டேட்டான டிசைனில் புதிய ஃபோக்ஸ்வேகன் வெண்டோ..! டீசர் புகைப்படம் வெளியீடு

மேலும் வெளியாகியுள்ள இந்த புகைப்படங்கள் வெண்டோவின் இந்த புதிய வெர்சன் காரில், ஃபோக்ஸ்வேகன் ஜெட்டா மாடலில் உள்ளதை போன்று ரீ-டிசைனில் பொனெட் பொருத்தப்பட்டிருப்பதும் நமக்கு தெரிகிறது.

முன்பை விட மிகவும் அப்டேட்டான டிசைனில் புதிய ஃபோக்ஸ்வேகன் வெண்டோ..! டீசர் புகைப்படம் வெளியீடு

2021ஆம் ஆண்டில் அறிமுகமாகவுள்ளதாக கூறப்படும் இந்த புதிய கார் முன்புறத்தில் புதிய டிசைனில் பம்பர், எல்இடி ஹெட்லைட்ஸ் மற்றும் அளவில் பெரிய ஏர்டேம் உள்ளிட்டவற்றை பெற்றுள்ளது. இதேபோல் இந்த காரின் பின்புறமும் புதிய டெயில்லைட்ஸ், மஸ்குலர் பம்பர் மற்றும் ஃபாக்ஸ் ட்யூல் எக்ஸாஸ்ட் டிப்ஸ்களுடன் புதிய டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முன்பை விட மிகவும் அப்டேட்டான டிசைனில் புதிய ஃபோக்ஸ்வேகன் வெண்டோ..! டீசர் புகைப்படம் வெளியீடு

தற்சமயம் வெளியாகியுள்ள வெண்டோவின் இந்த புதிய தலைமுறை மாடலின் உட்புற ஸ்கெட்ச் புகைப்படங்களின் மூலம் இந்த காரானது ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் ஜெட்டா மாடலின் புதிய உட்புற லே-அவுட்டை கொண்டுள்ளது நமக்கு தெரியவருகிறது.

முன்பை விட மிகவும் அப்டேட்டான டிசைனில் புதிய ஃபோக்ஸ்வேகன் வெண்டோ..! டீசர் புகைப்படம் வெளியீடு

மேலும் இந்த உட்புற ஸ்கெட்ச் புகைப்படங்களின் மூலம் அடுத்த தலைமுறை வெண்டோ கார் புதிய ஸ்டேரிங் சக்கரத்தையும், டேஸ்போர்ட்டின் மையத்தில் பொருத்தப்பட்ட ஏசியை பெற்றிருப்பதும் தெரிய வருகிறது.

முன்பை விட மிகவும் அப்டேட்டான டிசைனில் புதிய ஃபோக்ஸ்வேகன் வெண்டோ..! டீசர் புகைப்படம் வெளியீடு

அடுத்த வருடம் அறிமுகமாகவுள்ள இந்த செடான் மாடலின் உட்புறத்தில் ஏசியின் துளைகளை தனது இருபுறங்களிலும் கொண்டுள்ள முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் இந்நிறுவனத்தின் புதிய க்ளைட்மேட் கண்ட்ரோல் பேனல்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.

முன்பை விட மிகவும் அப்டேட்டான டிசைனில் புதிய ஃபோக்ஸ்வேகன் வெண்டோ..! டீசர் புகைப்படம் வெளியீடு

இந்த புதிய காரின் உட்புறத்தில் மிக முக்கியமான அம்சமாக தற்போதைய மாடலில் உள்ள இன்-டேஸ் இன்போடெயின்மெண்ட் திரைக்கு பதிலாக புதிய 8-இன்ச் சுழலக்கூடிய தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

முன்பை விட மிகவும் அப்டேட்டான டிசைனில் புதிய ஃபோக்ஸ்வேகன் வெண்டோ..! டீசர் புகைப்படம் வெளியீடு

இவை தவிர காரின் உட்புற கேபினில் காற்றோட்டமான முன்புற இருக்கைகள், எலக்ட்ரானிக்கல் மூலம் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் பின்புறத்திலும் ஏசி உள்ளிட்டவற்றையும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஏற்படுத்தி கொடுத்திருக்கும் என எதிர்பார்க்கலாம்.

முன்பை விட மிகவும் அப்டேட்டான டிசைனில் புதிய ஃபோக்ஸ்வேகன் வெண்டோ..! டீசர் புகைப்படம் வெளியீடு

மற்றப்படி இந்த புதிய தலைமுறை காரில் வழங்கப்படவுள்ள என்ஜின் குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. ஆனால் நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி இந்த புதிய செடான் மாடலில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படவுள்ளது.

முன்பை விட மிகவும் அப்டேட்டான டிசைனில் புதிய ஃபோக்ஸ்வேகன் வெண்டோ..! டீசர் புகைப்படம் வெளியீடு

மூன்று சிலிண்டர், நேரடி-இன்ஜெக்‌ஷன் அமைப்பை கொண்ட இந்த 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஏற்கனவே இந்நிறுவனத்தின் போலோ ஹேட்ச்பேக் மாடலில் வழங்கப்பட்டு வருகிறது. போலோ மாடலில் இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 113 பிஎச்பி பவர் மற்றும் 200 என்எம் டார்க் திறனை காருக்கு வழங்குகிறது.

முன்பை விட மிகவும் அப்டேட்டான டிசைனில் புதிய ஃபோக்ஸ்வேகன் வெண்டோ..! டீசர் புகைப்படம் வெளியீடு

இந்த என்ஜினுடன் ட்ரான்ஸ்மிஷனிற்காக 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. தற்போதைய தலைமுறை வெண்டோ மாடல் இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.8.77 லட்சத்தில் இருந்து ரூ.14.49 லட்சம் வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

முன்பை விட மிகவும் அப்டேட்டான டிசைனில் புதிய ஃபோக்ஸ்வேகன் வெண்டோ..! டீசர் புகைப்படம் வெளியீடு

வெண்டோவின் இந்த புதிய தலைமுறை கார் ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.16 லட்சம் வரையில் விலையை பெற அதிக வாய்ப்புள்ளது. தற்போது வெளியாகியுள்ள இந்த ஸ்கெட்ச் புகைப்படங்களின் மூலம் இந்த செடான் மாடலை மிகவும் கவர்ச்சிக்கரமான தோற்றத்தில் அறிமுகத்தின்போது எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

English summary
Volkswagen Vento Official Sketches Revealed: Redesigned Exterior, Impressive Interior
Story first published: Wednesday, February 12, 2020, 10:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X