புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காரின் உருவரை படங்கள் வெளியீடு

அடுத்த தலைமுறை ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காரின் உருவரை படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த படங்களையும், கூடுதல் தகவல்களையும் தொடர்ந்து காணலாம்.

புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காரின் உருவரை படங்கள் வெளியீடு

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் சிறந்த கட்டுமானம் கொண்ட கார் மாடலாக ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் வாடிக்கையாளர் மத்தியில் பெயர் பெற்றிருக்கிறது. இந்த நிலையில், கடும் சந்தைப்போட்டி, விற்பனைக்கு பிந்தைய சேவைகள் போன்ற காரணங்களால் இந்த கார் பின்னடைவுகளை சந்தித்து வருகிறது.

புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காரின் உருவரை படங்கள் வெளியீடு

இந்த சூழலில், கால மாற்றத்திற்கு தக்கவாறு ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காரின் அடுத்த தலைமுறை மாடல் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்கள் மற்றும் கார் பிரியர்கள் ஆவலைத் தூண்டும் விதமாக இந்த புதிய வென்ட்டோ காரின் உருவரை படங்களை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காரின் உருவரை படங்கள் வெளியீடு

இதன் முக அமைப்பு ஃபோக்ஸ்வேகன் ஜெட்டா காரை நினைவூட்டும் விதமாக டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரில் வலிமையான பானட் அமைப்பு, புதிய எல்இடி ஹெட்லைட்டுகள், பெரிய ஏர் டேம் பகுதி ஆகியவை கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காரின் உருவரை படங்கள் வெளியீடு

இந்த காரில் பக்கவாட்டில் பாடி பேனல் மிக பெரியதாகவும், கம்பீரமான தோற்றத்தை கொண்ட செடான் கார் மாடலாக காட்டுகிறது. பின்புறத்தில் எல்இடி டெயில் லைட்டுகள், வலிமையான பம்பர் அமைப்பு, இரட்டை குழல் சைலென்சர் அமைப்புகள் உள்ளன.

புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காரின் உருவரை படங்கள் வெளியீடு

உட்புற வடிவமைப்பு குறித்த உருவரை படமும் வெளியிடப்பட்டுள்ளது. இதிலும், ஜெட்டா காரின் டிசைன் அம்சங்களை பிரதிபலிப்பதாக உள்ளது. முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், பெரிய தொடு திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காரின் உருவரை படங்கள் வெளியீடு

புதிய ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காரில் புதிய அப்ஹோல்ஸ்ட்ரி, வென்டிலேட்டட் இருக்கைகள், எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் ஓட்டுனர் இருக்கை, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ரியர் ஏசி வென்ட்டுகள் ஆகியவையும் மிக முக்கிய அம்சங்களாக உள்ளன.

புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காரின் உருவரை படங்கள் வெளியீடு

புதிய ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காரில் இடம்பெற இருக்கும் எஞ்சின் தேர்வுகள் குறித்த தகவல் இல்லை. எனினும், புதிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்படும் வாய்ப்புள்ளது. இதே எஞ்சினுடன் ஸ்கோடா ரேபிட் வர இருப்பதால், இது நிச்சயம் உறுதியாக கூறலாம்.

புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காரின் உருவரை படங்கள் வெளியீடு

இந்த காரில் எதிர்பார்க்கப்படும் புதிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பிஎஸ்-6 தரத்திற்கு இணையாக இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 113 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காரின் உருவரை படங்கள் வெளியீடு

இந்த ஆண்டு பிற்பாதியில் புதிய ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா கார்களின் புதிய தலைமுறை மாடல் மற்றும் மாருதி சியாஸ் உள்ளிட்ட கார்களுடன் போட்டி போடும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 12, 2020, 10:15 [IST]
English summary
Volkswagen has just released official sketches of the next-generation Vento compact sedan. The sketches reveal that the new Vento will feature an all new exterior design that will make the sedan stand out from its hatchback sibling, the Volkswagen Polo.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+