வால்வோவின் எஸ்60 செடான் காருக்கு ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! 2021ல் கார் அறிமுகமாகுகிறது..

2021 வால்வோ எஸ்60 செடான் காருக்கான ஆக்ஸஸரீகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

வால்வோவின் எஸ்60 செடான் காருக்கு ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! 2021ல் கார் அறிமுகமாகுகிறது..

வால்வோ நிறுவனம் இந்தியாவில் அதன் புதிய செடான் மாடலாக எஸ்60-ஐ அடுத்த சில மாதங்களில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்கிடையில்தான் தற்போது இந்த வால்வோ காருக்கான ஆக்ஸஸரீகள் வெளியிடப்பட்டுள்ளன.

வால்வோவின் எஸ்60 செடான் காருக்கு ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! 2021ல் கார் அறிமுகமாகுகிறது..

வாடிக்கையாளர்களின் வாழ்க்கை முறையோடு ஒன்றிணையும் விதத்தில் எஸ்60 காருக்கான ஆக்ஸஸரீகளை வடிவமைத்துள்ளதாக வால்வோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த ஆக்ஸஸரீகளை உரிமையாளர்கள் செயல்முறை தேவைகளுக்கு பயன்படுத்தலாம்.

வால்வோவின் எஸ்60 செடான் காருக்கு ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! 2021ல் கார் அறிமுகமாகுகிறது..

இதன்படி காரின் உட்புறத்திற்கு குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கான இருக்கை ஆக்ஸஸரீயை பெறலாம். இது எளிதில் இருக்கையை சேதமடைய விடாமல் தடுக்கும்.

வால்வோவின் எஸ்60 செடான் காருக்கு ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! 2021ல் கார் அறிமுகமாகுகிறது..

இதனுடன் மேற்கூரைக்கான ரூஃப் பெட்டகம் மற்றும் சைக்கிள் வைப்பதற்கான பிடிப்பானையும் வாடிக்கையாளர்கள் வாங்கும் விதத்தில் வழங்கப்படவுள்ளது. இந்த சைக்கிள் பிடிப்பானை தேவைக்கு ஏற்றாற்போல் நீக்கி கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வால்வோவின் எஸ்60 செடான் காருக்கு ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! 2021ல் கார் அறிமுகமாகுகிறது..

உட்புற கேபினுக்கான கூடுதல் தரைப்பாயை பிளாஸ்டிக்கிலோ அல்லது துணியிலோ வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம். இந்த ஆக்ஸஸரீகள் சவுகரியம் மட்டுமின்றி பயணிகளின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு எஸ்60 செடான் காருக்கு வழங்கப்பட்டுள்ளன.

வால்வோவின் எஸ்60 செடான் காருக்கு ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! 2021ல் கார் அறிமுகமாகுகிறது..

இவை விரைவில் அறிமுகமாகும் எஸ்60 காரின் உரிமையாளர்களுக்கு ஏற்படும் சில அசவுகரியம் வகையில் கொண்டுவரப்பட்டதாக வால்வோ கூறுகிறது. வால்வோவின் புதிய தயாரிப்பான இந்த செடான் காரின் விலை ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #வால்வோ #volvo
English summary
2021 Volvo S60 accessories revealed
Story first published: Monday, December 14, 2020, 15:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X