22 லட்ச கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன... அதிரடி முடிவை கையில் எடுத்த வால்வோ...

முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக உள்ள வால்வோ உலகளவில் தனது கிட்டத்தட்ட 2.2 மில்லியன் (22 லட்சம்) கார்களை திரும்ப அழைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

22 லட்ச கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன... அதிரடி முடிவை கையில் எடுத்த வால்வோ...

வால்வோவின் இந்த திரும்ப அழைக்கப்படும் நடவடிக்கைக்கு முன்புற பயணிகளுக்கான சீட் பெல்ட்டில் ஸ்டீல் கேபிள்களை இணைப்பதில் ஏற்படும் பிரச்சனை மிக முக்கிய காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நடவடிக்கைக்கு 2006ல் இருந்து 2019ஆம் ஆண்டு வரையில் தயாரிக்கப்பட்ட கார்களே உட்படுகின்றன.

22 லட்ச கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன... அதிரடி முடிவை கையில் எடுத்த வால்வோ...

மேற்கூறப்பட்ட சீட் பெல்ட் பிரச்சனையை வால்வோ வி60, வி70 மற்றும் எக்ஸ்சி60 மாடல்கள் மட்டும் தான் சந்திந்து வந்தாலும் எஸ்60, எஸ்60எல், எஸ்60சிசி, வி60சிசி, எக்ஸ்சி70, எஸ்80 மற்றும் எஸ்80எல் போன்ற மற்ற கார்களும் திரும்ப அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது.

22 லட்ச கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன... அதிரடி முடிவை கையில் எடுத்த வால்வோ...

இந்த சீட் பெல்ட் பிரச்சனையால் வால்வோவின் கார்கள் விபத்தில் சிக்கியதாக எந்த தகவலும் தற்போதுவரை பதிவாகவில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கையாக இந்நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ஏனெனில் எதிர்காலத்தில் இந்த பழுதினால் பயணிகள் விபத்தில் சிக்கி கொள்ள வாய்ப்புண்டு.

22 லட்ச கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன... அதிரடி முடிவை கையில் எடுத்த வால்வோ...

இந்த பழுதினை அடிக்கடி தனது வால்வோ காரில் சந்திப்போர் மட்டுமின்றி மேற்கூறப்பட்டுள்ள வால்வோ கார்களின் உரிமையாளர்களும் டீலர்களை அணுகி இலவசமாக இந்த பழுதினை சரிப்பார்த்து கொள்ளும் வசதியினை விரைவில் பெறவுள்ளனர்.

22 லட்ச கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன... அதிரடி முடிவை கையில் எடுத்த வால்வோ...

முன்புற இருக்கைகளின் சீட் பெல்ட்கள், எதிர்பாராத சில சூழ்நிலைகளிலோ அல்லது பயணிகள் பயன்படுத்தும் விதத்தின் அடிப்படையிலோ எளிதாக பழுதடைந்துவிடுவதாக தகவல்கள் கூறுகின்றன. சீட் பெல்ட் கேபிளில் ஏற்படுகின்ற இந்த பழுதினால் காரின் சீட் கட்டுப்பாட்டு செயல்பாடு குறைகிறது.

22 லட்ச கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன... அதிரடி முடிவை கையில் எடுத்த வால்வோ...

இந்த திரும்ப அழைக்கப்படும் நடவடிக்கையில் இந்தியாவில் உள்ள சில வால்வோ கார்களும் உட்படவுள்ளன. இந்த வகையில் 333 வால்வோ கார்கள் இந்தியாவில் திரும்ப அழைக்கப்படவுள்ளதாக வால்வோ இந்தியா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

22 லட்ச கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன... அதிரடி முடிவை கையில் எடுத்த வால்வோ...

இதற்கு வரையறைக்கு உட்பட்ட நேரத்திற்குள் தான் என்பது போன்ற எந்த நிபந்தனைகளுக்கு கிடையாது. இருப்பினும் டீலர்கள் இப்போதில் இருந்தே இந்த தகவலை வாடிக்கையாளர்களிடம் தெரிவிப்பதை ஆரம்பித்துவிட்டனர். இவ்வாறான தகவல் ஏதேனிம் பெற்றிருந்தீர்கள் என்றால் உடனே அருகில் உள்ள டீலர்களை அணுகவும்.

Most Read Articles

மேலும்... #வால்வோ #volvo
English summary
Volvo to recall 22 lakh vehicles globally over front seatbelt issue
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X