நம்ம ஊரிலும் இனி இப்படிதான் படங்கள் திரையிடப்படுமோ... கொரோனா கற்று கொடுத்த பாடம் மிக வித்தியாசமானது!

கொரோனா கற்றுக் கொடுக்கும் பாடம் மிகவும் வித்தியாசமானது என்பதை நிரூபிக்கின்ற வகையில் பல மாற்றங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், திரைத்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இந்த பதிவில் நாம் காணலாம்.

நம்ம ஊரிலும் இனி இப்படிதான் சினிமா படங்கள் திரையிடப்படுமோ... கொரோனா கற்று கொடுத்த பாடம் மிக வித்தியாசமானது!

கொரோனா வைரஸ் மனிதர்களின் தினசரி வாழ்க்கையை மிக கடுமையாக பாதிப்படையச் செய்துள்ளது. இதனால், அளப்பறியா துயரத்தில் மக்கள் ஆழ்ந்திருக்கின்றனர். குறிப்பிட்டு கூற வேண்டுமானால் எந்தவொரு வருமானம் மற்றும் உதவிகளும் இன்றி அவர்கள் வாழ பழகியுள்ளனர். இந்த நிலையில்தான் தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமலுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

நம்ம ஊரிலும் இனி இப்படிதான் சினிமா படங்கள் திரையிடப்படுமோ... கொரோனா கற்று கொடுத்த பாடம் மிக வித்தியாசமானது!

3.0 வெர்ஷன் ஊரடங்கைப் போலவே இப்போதைய 4.0 ஊரடங்கிலும் லேசான தளர்வுகள் பாதிக்கப்பட்ட பகுதிகளின் தன்மைப் பொருத்து வழங்கப்பட்டுள்ளன. இதனால், நாட்டின் ஒரு சில முக்கியத் துறைகள் மீண்டும் புத்துணர்வுடன் செயல்படத் தொடங்கியுள்ளன. இது மக்களுக்கு சற்றே ஆறுதலைக் வழங்கினாலும், தற்போதும் சென்னைப் போன்ற சிவப்பு நிற பகுதிகளில் கடுமையான விதிகளே பின்பற்றப்பட்டு வருகின்றன.

நம்ம ஊரிலும் இனி இப்படிதான் சினிமா படங்கள் திரையிடப்படுமோ... கொரோனா கற்று கொடுத்த பாடம் மிக வித்தியாசமானது!

இந்த நிலை மக்களின் வாழ்க்கையை கூடுதலாக மேலும் மாற்றியமைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. முந்தைய காலங்களில் ஆட்டு மந்தையைப் போன்று எங்கும் கூட்டமாகவே நின்று பொருட்களை வாங்கி வந்த நாம், தற்போது வரிசையில் நின்று பொருட்களை வாங்க கற்றுக்கொண்டிருக்கின்றோம். குறிப்பாக, ஒருவர் மீது ஒருவர் உரசாமல், இடைவெளிவிட்டு நிற்பதைக் கண்டால் மிக ஆச்சரியமாக உள்ளது.

நம்ம ஊரிலும் இனி இப்படிதான் சினிமா படங்கள் திரையிடப்படுமோ... கொரோனா கற்று கொடுத்த பாடம் மிக வித்தியாசமானது!

குழந்தைகளுக்காக வாங்கப்படும் பால் நிலையங்களில் மட்டுமல்லாமல் மதுப்பான கடைகளின் வாசலிலும் இதே நிலைதான் காணப்படுகின்றது. ஏனென்றால் சமூக இடைவெளி என்பது கொரோனா வைரசின் இக்கட்டான காலத்தில் மிக முக்கியமானதாக மாறியிருக்கின்றது.

நம்ம ஊரிலும் இனி இப்படிதான் சினிமா படங்கள் திரையிடப்படுமோ... கொரோனா கற்று கொடுத்த பாடம் மிக வித்தியாசமானது!

இதனை உறுதி செய்ய முடியாது என்கிற காரணத்தினாலயே உலகின் பல நாடுகளில் தற்போது வரை திரையரங்குகள் இழுத்து மூடப்பட்டிருக்கின்றன.

ஆனால், ஐக்கிய அரபு நாடுகளில் மட்டும் திரையரங்குகள் செயல்படத் தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. அதுவும், திரையரங்கிற்கு வருபவர்கள் பாப்கார்ன் உடன் திரைப்படங்களை ரசித்து வருவதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

நம்ம ஊரிலும் இனி இப்படிதான் சினிமா படங்கள் திரையிடப்படுமோ... கொரோனா கற்று கொடுத்த பாடம் மிக வித்தியாசமானது!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலக நாடுகள் பலவற்றில் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கின்றன. இதனால், திரைப்பட பிரியர்கள் விரக்தியடைந்த நிலையில் காணப்படுகின்றனர்.

ஏன், இந்தியா போன்ற நாடுகளில் சின்னத் திரை முதல் பெரிய திரை அனுத்து திரைகளின் பணிகளும் முடக்கப்பட்டிருக்கின்றன.

நம்ம ஊரிலும் இனி இப்படிதான் சினிமா படங்கள் திரையிடப்படுமோ... கொரோனா கற்று கொடுத்த பாடம் மிக வித்தியாசமானது!

இதனால், தொலைக் காட்சிகளில் புதிய நாடக தொடர்கள் ஒளிப்பரப்ப முடியாமல் தொலைக்காட்சி சேனல் நிறுவனங்கள் திண்டாடி வருகின்றன. இதேபோன்று, பெரிய திரையான சினிமாவிலும் படப்பிடிப்பு மற்றும் வெளியீட்டு நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கின்றன. இதனால், திரைத்துறை மிகக் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது.

நம்ம ஊரிலும் இனி இப்படிதான் சினிமா படங்கள் திரையிடப்படுமோ... கொரோனா கற்று கொடுத்த பாடம் மிக வித்தியாசமானது!

திரையரங்குகளில் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியிருப்பதன் காரணத்தினாலேயே இந்த நிலை காணப்படுகின்றது. ஆனால், இதனை மாற்றியமைக்கும் விதமாக மிகப்பெரிய ஷாப்பிங் மாலின் திறந்தவெளி வளாகத்தை தனியார் நிறுவனம் ஒன்று டிரைவ்-இன் சினிமாவாக உருமாற்றியுள்ளது.

நம்ம ஊரிலும் இனி இப்படிதான் சினிமா படங்கள் திரையிடப்படுமோ... கொரோனா கற்று கொடுத்த பாடம் மிக வித்தியாசமானது!

திரைப்பட பிரியர்கள் அவர்களின் கார்களில் இருந்தே படங்களைப் பார்த்து ரசிக்கும் வசதியைதான் டிரைவ்-இன் சினிமா என்றழைக்கின்றனர். அதாவது குறிப்பிட்டு கூற வேண்டுமானால் சிவாஜி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் ஸ்ரேயா ஆகியோர் கார்களுக்குள்ளே அமர்ந்தபடி கிங்-காங் திரைப்படத்தைப் பார்ப்பார்கள், அம்மாதிரியான ஓர் திரையரங்கைதான் அந்த தனியார் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

நம்ம ஊரிலும் இனி இப்படிதான் சினிமா படங்கள் திரையிடப்படுமோ... கொரோனா கற்று கொடுத்த பாடம் மிக வித்தியாசமானது!

இந்தியாவில் இம்மாதிரியான திரையரங்குகள் பெரியளவில் பயன்பாட்டில் இல்லை. ஆனால், உலக நாடுகள் சிலவற்றில் டிரைவ்-இன் திரையரங்கள் அதிகளவில் பயன்பாட்டில் இருக்கின்றன.

இதுவே, தற்போதைய கொரோனாவின் இக்கட்டான சூழ்நிலையில் இருந்து பாதுகாப்பான திரைப்பட அனுபவத்தை வழங்க உதவும். இதனாலயே இந்த திரையரங்கிற்கு அரபு அரசு அனுமதி வழங்கியிருக்கின்றது.

நம்ம ஊரிலும் இனி இப்படிதான் சினிமா படங்கள் திரையிடப்படுமோ... கொரோனா கற்று கொடுத்த பாடம் மிக வித்தியாசமானது!

வோக்ஸ் என்னும் நிறுவனம் கொண்டு வந்திருக்கும் இந்த திரையரங்கில் சுமார் 75-க்கும் மேற்பட்ட கார்கள் நின்று திரைப்படங்களைக் கண்டு ரசிக்கலாம் என கூறப்படுகின்றது. அவர்கள் காரை விட்டு வெளியே தர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு காருக்கு இடையில் குறைந்தத இரு கார்களை நிறுத்தும் அளவிற்கு இடைவெளி இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நம்ம ஊரிலும் இனி இப்படிதான் சினிமா படங்கள் திரையிடப்படுமோ... கொரோனா கற்று கொடுத்த பாடம் மிக வித்தியாசமானது!

இந்த திரையரங்கில் படம் பார்க்க ஒரு நபருக்கு கட்டணமாக நம் நாட்டு மதிப்பில் ரூ. 180 வசூலிக்கப்படுகிறது. இந்த தொகையிலேயே அவர்களுக்கு பாப்-கார்ன் போன்ற ஸ்நேக்ஸ்களும் இலவசமாக வழங்கப்படுகின்றது.

அரபு நாட்டிலும் தற்போது ஊரடங்கு உத்தரவு நீடித்த வண்ணம் இருக்கின்றது.

நம்ம ஊரிலும் இனி இப்படிதான் சினிமா படங்கள் திரையிடப்படுமோ... கொரோனா கற்று கொடுத்த பாடம் மிக வித்தியாசமானது!

ஆனால், விரைவில் ரமலான் பண்டிகை வரவிருப்பதால் லேசான தளர்வுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த தளர்வின் அடிப்படையில் உணவு விடுதிகள் மற்றும் ஷாப்பிங் மால்கள் குறைந்த அளவு பணியாட்களுடன் இயங்க தொடங்கியிருக்கின்றன. ஆனால், 3 வயது முதல் 12 வயது வரையிலான சிறுவர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டோர் வெளியில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

Note: Images for representative purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
VOX Cinemas Launcehs Drive-In Cinema In United Arab Emirates. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X