போட்டி நிறுவனங்களை வாயடைத்த மாருதி... நாட்டின் அதி-திறன் வாய்ந்த சிஎன்ஜி வாகனமானது வேகன்-ஆர்!

மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரபல மாடல்களில் ஒன்றான வேகன்-ஆர் தற்போது சிஎன்ஜி வேரியண்டிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த கார்தான் தற்போது நாட்டின் மிக திறமையான சிஎன்ஜி கார் புகழைச் சூடியுள்ளது.

நாட்டின் மிக திறமையான சிஎன்ஜி வாகனமாக மாருதி வேகன்-ஆர்... வாயடைத்த போட்டி நிறுவனங்கள்...

மாருதி சுசுகி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் எப்போதுமே தனித்துவமான வரவேற்பு நிலவி வருகின்றது. இதற்கு இந்நிறுவனத்தின் பெரும்பாலான தயாரிப்புகள் பட்ஜெட் விலையில், அதிக பயன்களை வழங்கக் கூடியவையாக இருப்பதே முக்கிய காரணமாக இருக்கின்றது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் குறைந்த எரிபொருளில் அதிக மைலேஜ் மற்றும் குறைவான பராமரிப்பு செலவு உள்ளிட்டவற்றை தாரக மந்திரமாக அவைக் கொண்டிருக்கின்றன.

நாட்டின் மிக திறமையான சிஎன்ஜி வாகனமாக மாருதி வேகன்-ஆர்... வாயடைத்த போட்டி நிறுவனங்கள்...

இதன் காரணத்தினாலயே இந்தியர்களிடத்தில் இனமறிய மோகத்தை மாருதி தயாரிப்புகள் ஏற்படுத்தி வருகின்றன.

இதனை எப்போதும் தன் வசம் தக்கவைத்துக் கொள்ளும் விதமாக இந்தியர்களின் மனநிலையறிந்து புதுமுக வாகனங்களை அந்நிறுவனம் களமிறக்கி வருகின்றது.

நாட்டின் மிக திறமையான சிஎன்ஜி வாகனமாக மாருதி வேகன்-ஆர்... வாயடைத்த போட்டி நிறுவனங்கள்...

அந்தவகையில், சமீப காலங்களுக்கு முன்பு களமிறக்கப்பட்டதுதான் வேகன்-ஆர் மாடலில் எஸ்-சிஎன்ஜி தேர்வு. மாருதி சுசுகி நிறுவனத்தின் புகழ்வாய்ந்த மாடல்களில் வேகன்-ஆர் மாடலும். இது, பட்ஜெட் வாகன விரும்புகளின் தேர்வில் முக்கிய இடத்தில் இருக்கின்றது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது.

நாட்டின் மிக திறமையான சிஎன்ஜி வாகனமாக மாருதி வேகன்-ஆர்... வாயடைத்த போட்டி நிறுவனங்கள்...

இந்த மாடலில்தான் மாருதி தற்போது சிஎன்ஜி தேர்வை களமிறக்கியிருக்கின்றது. மேலும், இது தற்போது இந்தியாவில் சிஎன்ஜி தேர்வில் கிடைக்கும் கார்களிலேயே மிக அதிக திறன் கொண்ட காராக மாறியிருக்கின்றது.

காற்று மாசுபாட்டைக் கருத்தில்கொண்டு வாகன உற்பத்தி நிறுவனங்கள் மின்சாரம், ஹைபிரிட் மற்றும் சிஎன்ஜி ஆகியவற்றால் இயங்கும் வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றது.

நாட்டின் மிக திறமையான சிஎன்ஜி வாகனமாக மாருதி வேகன்-ஆர்... வாயடைத்த போட்டி நிறுவனங்கள்...

இதனடிப்படையில், பட்ஜெட் வாகன விரும்பிகளை கவரும் வகையில் மாருதி அறிமுகம் செய்ததுதான் வேகன்-ஆர் சிஎன்ஜி மாடல். இந்த கார்தான் தற்போது பிஎஸ்-6 சிஎன்ஜி தேர்வில் கிடைக்கும் நாட்டின் மிக திறமையான வாகனமாக உருவெடுத்துள்ளது. இது மாருதி நிறுவனத்திற்கு மட்டுமின்றி அதனை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கும் பெறுமையான விஷயமாக மாறியிருக்கின்றது.

நாட்டின் மிக திறமையான சிஎன்ஜி வாகனமாக மாருதி வேகன்-ஆர்... வாயடைத்த போட்டி நிறுவனங்கள்...

இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் 5,500 ஆர்பிஎம்மில் 58 பிஎச்பி பவரையும், 3,500ஆர்பிஎம்பில் 78 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைப் பெற்றிருக்கின்றது. இந்த திறனே நாட்டின் மிக திறமை வாய்ந்த வாகனமாக வேகன்-ஆர் சிஎன்ஜி மாடலை மாற்றியிருக்கின்றது.

நாட்டின் மிக திறமையான சிஎன்ஜி வாகனமாக மாருதி வேகன்-ஆர்... வாயடைத்த போட்டி நிறுவனங்கள்...

இந்த கார் ஆராய் (ARAI) அமைப்பின் அறிவிப்பின்படி, ஒரு கிலோ சிஎன்ஜி எரிபொருளுக்கு 32.52 கிமீ தூரம் மைலேஜை வழங்கும் என உறுதியாகியிருக்கின்றது.

இதுவே, டேங்கை முழுமையாக ஃபில் செய்தால், அதாவது 8.5 கிலோ சிஎன்ஜியை நிரப்பினால் இந்த கார் முழுமையாக 276 கிமீ தூரம் வரை செல்லும்.

நாட்டின் மிக திறமையான சிஎன்ஜி வாகனமாக மாருதி வேகன்-ஆர்... வாயடைத்த போட்டி நிறுவனங்கள்...

இந்த காரில் சிஎன்ஜி மட்டுமின்றி பெட்ரோல் மோடும் வழங்கப்பட்டிருக்கின்றது. எனவே, இந்த பெட்ரோலால் இயங்கும்போது சிஎன்ஜி வேரியண்ட் வேகன்-ஆர் ஹேட்ச்பேக் கார் லிட்டர் ஒன்றிற்கு 21.79 கிமீ மைலேஜை வழங்கும். இதனை டேங்க் ஃபில் செய்தால், அதாவது 32 லிட்டர் பெட்ரோல் நிரப்பினால் அதிகபட்சமாக 697 கிமீ தூரம் செல்ல முடியும்.

நாட்டின் மிக திறமையான சிஎன்ஜி வாகனமாக மாருதி வேகன்-ஆர்... வாயடைத்த போட்டி நிறுவனங்கள்...

எனவே, பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி-களுக்கான டேங்கை முழுமையாக ஃபில் செய்கையில் அதன் உரிமையாளரால் சுமார் 973 கிமீ தூரம் வரை செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

மாருதி சுசுகி நிறுவனம் வேகன்-ஆர் மாடலை மட்டும் சிஎன்ஜி தேர்வில் விற்பனை அறிமுகம் செய்யவில்லை.

நாட்டின் மிக திறமையான சிஎன்ஜி வாகனமாக மாருதி வேகன்-ஆர்... வாயடைத்த போட்டி நிறுவனங்கள்...

அதன் மற்றுமொரு புகழ்வாய்ந்த மாடல்களில் ஒன்றான ஆல்டோ 800 காரையும் சிஎன்ஜி தேர்வில் வழங்கி வருகின்றது. இந்த கார் ஆராய் ஆய்வின்படி, ஒரு கிலோ சிஎன்ஜி எரிபொருளுக்கு 31.59 கிமீ ரேஞ்ஜை வழங்கும் என கூறப்படுகின்றது. இதேபோன்று, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 22.05 கிமீ தூரம் வரை செல்லும் என்றும் உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் மிக திறமையான சிஎன்ஜி வாகனமாக மாருதி வேகன்-ஆர்... வாயடைத்த போட்டி நிறுவனங்கள்...

மாருதி நிறுவனம் மட்டுமின்றி நாட்டி இயங்கி வரும் ஹூண்டாய் மற்றும் ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் சிஎன்ஜி தேர்வை அதன் பிரபல மாடல்களில் அறிமுகம் செய்து வருகின்றன. சிஎன்ஜி வகை கார்கள் குறைந்த செலவில் அதிக ரேஞ்ஜை வழங்குவதோடு மட்டுமின்றி சுற்றுப்புறச் சூழலுக்கும் குறைந்தளவு மாசுபாட்டையே ஏற்படுத்துகின்றது.

நாட்டின் மிக திறமையான சிஎன்ஜி வாகனமாக மாருதி வேகன்-ஆர்... வாயடைத்த போட்டி நிறுவனங்கள்...

இதன்காரணத்தினாலயே இந்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு முக்கியத்துவும் கொடுத்து வருகின்றது. அதேசமயம், குறைந்த மாசுபாட்டை ஏற்படுத்தும் ஹைபிரிட் மற்றும் சிஎன்ஜி, எல்என்ஜி உள்ளிட்ட வாகனங்களையும் அது ஊக்குவித்து வருகின்றது.

Most Read Articles
English summary
Maruti Suzuki Wagon R BS6 CNG Model Is The Most-Efficient Car. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X