அறிமுகமாகி 2 வருடங்களான போதிலும் ஜப்பானில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் சுசுகி ஜிம்னி...

2018ல் ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து சுசுகி ஜிம்னி மாடலுக்கு அங்கு இன்னமும் வரவேற்பு கொஞ்சமும் குறையாமல் உள்ளது. இதன் காரணமாக ஜப்பானில் இந்த எஸ்யூவி மாடலுக்கு காத்திருப்பு காலம் 1.5 வருடங்களாக அதிகரித்துள்ளது.

அறிமுகமாகி 2 வருடங்களான போதிலும் ஜப்பானில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் சுசுகி ஜிம்னி...

சுசுகி நிறுவனம் ஜிம்னி எஸ்யூவி காரை ஜிம்னி மற்றும் பெரிய ஜிம்னி சியாரா என்ற இரு வேரியண்ட்களில் சந்தைப்படுத்தி வருகிறது. இதில் ஜிம்னி வேரியண்ட்டிற்கு 15,000 யூனிட்களையும், ஜிம்னி சியாரா வேரியண்ட்டிற்கு 1,200 யூனிட்களையும் இந்நிறுவனம் ஆண்டு விற்பனை இலக்காக நிர்ணயித்துள்ளது.

அறிமுகமாகி 2 வருடங்களான போதிலும் ஜப்பானில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் சுசுகி ஜிம்னி...

அறிமுகமாகி இரண்டு வருடங்களாகினும் அந்நாட்டு சந்தையில் இந்த இரு வேரியண்ட்களுக்கும் கிடைக்கும் வரவேற்பு குறையவில்லை. இதனால் ஜிம்னி வேரியண்ட்டிற்கு 1 வருட 2 மாதங்களையும், ஜிம்னி சியாரா வேரியண்ட்டிற்கு 1 வருட 6 மாதங்களையும் சுசுகி நிறுவனம் காத்திருப்பு காலமாக வைத்துள்ளது.

அறிமுகமாகி 2 வருடங்களான போதிலும் ஜப்பானில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் சுசுகி ஜிம்னி...

அதாவது இந்த வேரியண்ட்களை முன்பதிவு செய்பவர்கள் காரை டெலிவிரி செய்ய இத்தனை காலத்திற்கு காத்திருக்க வேண்டும். இந்திய சந்தையில் மாருதி சுசுகி நிறுவனம் முதன்முறையாக கடந்த ஆட்டோ எக்ஸ்போவில் ஜிம்னி சியாரா மாடலை மூன்று-கதவு வெர்சனாக காட்சிப்படுத்தியிருந்தது.

அறிமுகமாகி 2 வருடங்களான போதிலும் ஜப்பானில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் சுசுகி ஜிம்னி...

இருப்பினும் ஜிம்னி சியாரா மாடலை 5-இருக்கை வெர்சனிலும் இந்திய சந்தையில் எதிர்பார்க்கலாம். ஆட்டோ எக்ஸ்போவில் பார்வையாளர்கள் பலரது கவனத்தை வெகுவாக ஈர்த்திருந்த இந்த மாடல் ஆஃப்-ரோடிற்கு மிகவும் ஏற்றதாக விளங்கும். அதேநேரம் இதன் முன்னோடி மாடலான மாருதி ஜிப்ஸியின் மிக சரியான அடுத்த தலைமுறை எஸ்யூவி மாடலாகவும் இது உள்ளது.

அறிமுகமாகி 2 வருடங்களான போதிலும் ஜப்பானில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் சுசுகி ஜிம்னி...

ஜப்பான் உள்ளிட்ட வெளிநாட்டு சந்தைகளில் ஜிம்னி சியாரா மாடலில் 1.5 லிட்டர் விவிடி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 102 பிஎச்பி பவரையும், 130 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

அறிமுகமாகி 2 வருடங்களான போதிலும் ஜப்பானில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் சுசுகி ஜிம்னி...

இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 4-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. மேலும் காம்பெக்ட் அளவுடன் இந்த எஸ்யூவி மாடல் 4-வீல் ட்ரைவ் சிஸ்டத்தையும் கொண்டுள்ளது. 210மிமீ க்ரவுண்ட் க்ளியரென்ஸை பெற்றுள்ள இந்த மாடலில் 37-டிகிரி அப்ரோச் கோணமாகவும், 49-டிகிரி புறப்படும் கோணமாகவும் உள்ளது.

அறிமுகமாகி 2 வருடங்களான போதிலும் ஜப்பானில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் சுசுகி ஜிம்னி...

இந்த எஸ்யூவி காரில் மற்ற அம்சங்களாக சாட்-நவ் உடன் 7-இன்ச் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு இணைப்பு வசதி, ஸ்டேரிங்கில் ஆடியோ கண்ட்ரோல்கள், பின்புற பார்க்கிங் கேமிரா, ஆட்டோ க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

அறிமுகமாகி 2 வருடங்களான போதிலும் ஜப்பானில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் சுசுகி ஜிம்னி...

ஆஃப்-ரோடு செயல்படுதிறனிற்கு ஏற்றாற்போல் விலையை இந்தியாவில் பெறவுள்ள மாருதி சுசுகி ஜிம்னி மாடலுக்கு அறிமுகத்திற்கு பிறகு மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து விரைவில் அறிமுகமாகவுள்ள தார் மாடல் முக்கிய போட்டியாக விளங்கும்.

More from DriveSpark

Article Published On: Saturday, May 16, 2020, 15:28 [IST]
English summary
waiting period for the India-bound Suzuki Jimny SUV now stands at about 1.5 years in Japan
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+