Just In
- 42 min ago
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- 2 hrs ago
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- 4 hrs ago
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- 5 hrs ago
அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா?! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்
Don't Miss!
- News
ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை உறுதி -வழக்கறிஞருக்கு முறைப்படி கடிதம் அனுப்பிய சிறை நிர்வாகம்..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Movies
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஹெட்லேம்பிற்கு பதிலாக பேட்டரி லைட்டை பயன்படுத்திய இளைஞர்... இவருக்கு போலீஸ் கொடுத்த விநோத பரிசு என்ன தெரியுமா?
உடைந்த ஹெட்லேம்பிற்கு பதிலாக இளைஞர் ஒருவர் பேட்டரி லைட்டைப் பயன்படுத்தியிருக்கின்றார். இளைஞரின் இந்த செயலுக்கு போலீஸார் தரமான பரிசு ஒன்றை வழங்கியிருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.

விபத்தினால் இழந்த இரு மின் விளக்குகளுக்கு பதிலாக இளைஞர் ஒருவர் பேட்டரியால் இயங்கக்கூடிய மின் விளக்குகளைப் பயன்படுத்தியிருக்கின்றனர். இதைக் கண்ட போலீஸார் அந்த இளைஞருக்கு எதிர்பார்த்திராத பரிசு ஒன்றை வழங்கியிருக்கின்றனர். பரிசு என்றால் ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் வழங்கக்கூடிய பரிசுகள் இல்லைங்க, அபராதம் எனும் பரிசைதான் போலீஸார் வழங்கியிருக்கின்றனர்.

அமெரிக்காவின் வாஷிங்டனிலேயே இந்த விநோத சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. போலீஸார் கண்கானப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது ஓர் வாகனம் வந்துக் கொண்டிருப்பதைக் கண்டிருக்கின்றனர். ஆனால், அந்த வாகனத்தின் மின் விளக்குகள் வழக்கத்திற்கு மாறாக மிகவும் குறைந்த ஒளிர்வு தன்மையுடன் வந்திருக்கின்றது. எனவே அது என்ன வாகனம் என்பதைக் கூட அவர்களால் உணர முடியவில்லை.

Image Courtesy: Trooper Rick Johnson
சற்று நெறுங்கி வந்த பின்னரே அது கார் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கின்றனர். மேலும், மின் விளக்குகளைக் கண்ட அவர்களுக்கு மேலும் பேரதிர்ச்சிக் காத்துக் கொண்டிருந்தது. ஏனெனில், ஹெட்லேம்பிற்கு பதிலாக அந்த இடத்தில் பேட்டரியால் இயங்கக்கூடிய மின் விளக்குகள் அங்கு பயன்படுத்தப்பட்டிருந்தன. அவை கருப்பு நிற செல்லோ டேப்பால் ஒட்டப்பட்டிருக்கின்றன.

இதைக் கண்டு மிரண்டுபோன வாஷிங்டன் போலீஸார், பேட்டரி ஃபிளாஷ் லைட் பயன்படுத்தப்பட்டிருந்த செவ்ரோலே இம்பாலா (Chevrolet Impala) காரை பறிமுதல் செய்தனர். அண்மையில் அரங்கேறிய விபத்தின் காரணமாக காரின் மின் விளக்குகள் இரண்டும் நொறுங்கியதாக அக்காரின் உரிமையாளர் தெரிவித்தார்.

இருப்பினும், மின் விளக்குகள் இல்லாமல் வாகனங்களை இயக்குவது அமெரிக்க போக்குவரத்து விதிகளின்படி தண்டனைக்குரிய செயலாகும். எனவே, செவ்ரோலே இம்பாலா காரை ஓட்டி வந்த டிரைவரின் ஓட்டுநர் உரிமத்தை போலீஸார் அதிரடியாக ரத்து செய்தனர். இத்துடன், இச்சம்பவம் குறித்த தகவலை அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் அவர்கள் வெளியிட்டனர்.

மக்களின் போக்குவரத்து பயன்பாட்டில் சைக்கிள்கள் அதிக ஆதிக்கம் செலுத்திய காலத்தில் இருந்தே மிந் விளக்குகள் கட்டாயம் என்ற விதி பயன்பாட்டில் இருக்கின்றது. அதாவது சைக்கிள்களிலும் ஹெட்லேம்ப் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இந்த நிலை தற்போதும் அனைத்து வாகனங்களிலும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. மின் விளக்குகள் இல்லாமல் இயங்கும் வாகனங்களை இனம் கண்டறிவது சற்று கடினம். குறிப்பாக, இரவு நேரங்களில் அவற்றைக் கண்டறிவது மிக மிக கடினம். இதனால் விபத்து போன்ற கசப்பான சம்பவங்கள் அரங்கேறி வந்தன.

எனவோன், அனைத்து வாகங்களிலும் மின் விளக்குகள் கட்டாயம் இருக்க வேண்டும் என வாகன போக்குவரத்து விதிகள் கூறுகின்றன. அதேசமயம், அதிக ஒளிரும் தன்மையில் அவை இருக்கக் கூடாது என்பது போன்ற பல்வேறு விதிகள் மின் விளக்குகள் சார்ந்து பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த நிலையில்தான் அமெரிக்காவில் அரங்கேறிய மிகவும் வித்தியாசமான சம்பவம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியிருக்கின்றது.
குறிப்பு: 4 முதல் 8 வரையிலான புகைப்படங்கள் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.