Just In
- 1 hr ago
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- 3 hrs ago
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- 5 hrs ago
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- 6 hrs ago
அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா?! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்
Don't Miss!
- News
அமெரிக்க கேபிடல் கலவரத்தன்று புடினுடன் டிரம்ப் பேசியிருப்பார்... அலைபேசி பதிவை பார்க்க ஆவல் -ஹிலாரி
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Movies
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அம்மாடியம்மா வாட்சுக்கே இந்த விலையா? கேட்குறப்பவே தலை சுத்துது... இந்த விலைல ஒரு வீட்டையே வாங்கிடலாமே!!
தலையை சுத்த வைக்கக்கூடிய விலையில் ஓர் தற்போது அறிமுகமாகியுள்ளது. இதுகுறித்த தகவலை இப்பதிவில் காணலாம்.

உலகின் மிக அதிக விலைக் கொண்ட வாட்ச் இதுதான் என்று கூறுமளவிற்கு மிக மிக அதிக விலையில் ஓர் கைக்கடிகாரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய லம்போர்கினி ஹூராகேன் எஸ்டிஓ ஆர்டபிள்யூடி சூப்பர் காரின் உருவத்தை தழுவி உருவாக்கப்பட்டிருப்பதே இந்த வாட்சின் சிறப்பு அம்சமாக இருக்கின்றது.

ஆகையால், ஹூராகேன் காரில் தென்படுவதைப் போன்று பல்வறு சிறப்பு வசதிகள் இடம்பெற்றிருக்கின்றன. எனவேதான் இதன் விலை மிக மிக அதிகமாக இருக்கின்றது. அதாவது, புதிய லம்போ பதிப்பு வாட்சிற்கு 56,500 அமெரிக்க டாலர்கள் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 42 லட்சம் ஆகும்.

இத்தகைய உச்சபட்ச விலையிலேயே சுவிட்சர்லாந்தை மையமாகக் கொண்டு இயங்கும் ரோஜர் ட்யூபிஸ் எனும் கடிகார நிறுவனம் வாட்சை அறிமுகம் செய்திருக்கின்றது. சுமார் 88 அலகு வாட்ச்சுகள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றையே உலகின் பல்வேறு நாடுகளில் அந்த நிறுவனம் விற்பனைச் செய்ய இருக்கின்றது.

இந்த வாட்ச் ஹூராகேன் கார் இருக்கும் நிறத்திலேயே காட்சியளிக்கின்றது. அதாவது ப்ளூ லாஃபி மற்றும் கலிஃபோர்னியா ஆரஞ்சு ஆகிய நிறங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து காரின் க்ரில் பகுதியை குறிக்கின்ற வகையில் வாட்சின் உட்பகுதியில் தேன்கூடு அமைப்புக் கொண்ட உறுப்பு பொருத்தப்பட்டுள்ளது.

இத்துடன், காரின் குறிப்பிட்ட சில கூறுகளைப் பிரதிபலிக்கக் கூடிய கூறுகளையும் வாட்சின் உட்பகுதி மற்றும் பக்கவாட்டு பகுதியில் கடிகார தயாரிப்பாளர் நிறுவியிருக்கின்றார். இவையனைத்தும் சேர்ந்து லம்போர்கினி ஹூராகேன் காரை நினைவுப்படுத்தும் வகையில் இருக்கின்றன.

லம்போர்கினி நிறுவனம் ஹூராகேன் எஸ்டிஓ ஆர்டபிள்யூடி சூப்பர் காரை மிக மிக சமீபத்திலேயே வெளியீடு செய்தது. இக்காருக்கு ரூ. 2.43 கோடி என்ற விலையை அது நிர்ணயித்திருக்கின்றது. இதில், 5.2 லிட்டர் நேட்சுரல்லி அஸ்பைரேடட் வி10 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 63 பிஎச்பி பவரையும், 565 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனைக் கொண்டது. இதன் உச்சபட்ச வேகம் மணிக்கு 310 கிமீ ஆகும். மேலும், இக்கார் பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிமீ எனும் வேகத்தை வெறும் 3 வினாடிகளிலேயே தொடுமளவிற்கு திறன் வாய்ந்தது. இதேபோன்று, பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 200 கிமீ எனும் வேகத்தை 9 வினாடிகளிலேயே இக்கார் தொட்டுவிடும் என்பது குறிப்பிடத்தகுந்தது.