இந்த 5 விஷயம் இருந்தாலே போதும்... தாத்தா காலத்து கார்கூட நவீனயுக காராக மாறிவிடும்... வெளிவரா தகவல்!

நம்ம தாத்தா காலத்தில் விற்பனைச் செய்யப்பட்ட கார்களைக்கூட இந்த ஐந்து அம்சங்களைச் சேர்ப்பதின் மூலம் நவீன யுக காராக மாற்ற முடியும். அதுவும், மிகக் குறைந்த செலவில். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

இந்த 5 விஷயம் இருந்தாலே போதும்... தாத்தா காலத்து கார்கூட நவீனயுக காராக மாறிவிடும்... இத வேற யாரும் சொல்ல மாட்டாங்க!

இந்தியாவில் தற்போதும் நம்முடைய தாத்தா காலத்தில் விற்கப்பட்ட கார்களை பயன்படுத்துவர்கள் பலர் இருக்கின்றனர். செண்டிமென்ட், பிடித்த கார் போன்ற பல்வேறு காரணங்களுக்காக அவர்கள் அந்த கார்களைத் தற்போதும் பயன்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற விஷயங்களை உலக நாடுகளைக் காட்டிலும் இந்தியாவிலேயே நம்மால் அதிகம் காண முடியும்.

இந்த 5 விஷயம் இருந்தாலே போதும்... தாத்தா காலத்து கார்கூட நவீனயுக காராக மாறிவிடும்... இத வேற யாரும் சொல்ல மாட்டாங்க!

அதேசமயம், ஒரு சிலர் போதிய வசதி இல்லாத காரணங்களினாலும் பல வருடங்களுக்கு முன்பு வாங்கப்பட்ட வாகனங்களை தற்போதும் பயன்படுத்துவதுண்டு. அவர்களுக்கு புதிய வாகனங்களை வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அதற்கு அவர்களின் குடும்பநிலை ஒத்துழைக்காது.

இந்த 5 விஷயம் இருந்தாலே போதும்... தாத்தா காலத்து கார்கூட நவீனயுக காராக மாறிவிடும்... இத வேற யாரும் சொல்ல மாட்டாங்க!

இருப்பினும், நவீன யுக கார்களின்மீது அவர்களுக்கு அளவுகடந்த பிரியம் இருந்துக்கொண்டுதான் உள்ளது. அதிலும், அண்மைக் காலங்களாக இந்தியாவில் அறிமுகமாகும் புதுமுக கார்களின் தொழில்நுட்ப வசதி அவர்களை கூடுதலாகவே கவரும் வகையில் இருக்கின்றன.

இந்த 5 விஷயம் இருந்தாலே போதும்... தாத்தா காலத்து கார்கூட நவீனயுக காராக மாறிவிடும்... இத வேற யாரும் சொல்ல மாட்டாங்க!

"அடேங்கப்பா... இந்த மாதிரி அம்சம் எல்லாம் அந்த கார்ல இருக்கா? இதுக்காகவே எப்படியாச்சும் அந்த காரை வாங்கிவிட வேண்டும்" என்ற எண்ணத்தை அது விதைத்து வருகின்றது.

ஆனால், அந்த கார்களின் உயர்ந்த விலை அதற்கு முட்டுக்கட்டையைப் போட்டுவிடுகின்றது. எனவே, அது நிறைவேறாத ஆசையாக அவர்களுக்கு மாறிவிடுகின்றது.

இந்த 5 விஷயம் இருந்தாலே போதும்... தாத்தா காலத்து கார்கூட நவீனயுக காராக மாறிவிடும்... இத வேற யாரும் சொல்ல மாட்டாங்க!

இந்த நிலையைப் போக்கும் விதமாக சந்தையில் பல்வேறு விஷயங்கள் தற்போது விற்பனைக்கு கிடைத்து வருகின்றன. அவை, மிக மிக பழைய கார்களைகூட அதிக தொழில்நுட்பம் கொண்ட புது யுக கார்களாக மாற்ற உதவும். அம்மாதிரியான கருவிகளையும், அவற்றின் விலையும்தான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

இந்த 5 விஷயம் இருந்தாலே போதும்... தாத்தா காலத்து கார்கூட நவீனயுக காராக மாறிவிடும்... இத வேற யாரும் சொல்ல மாட்டாங்க!

தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (Touchscreen Infotainment System)

இதன் விலை வரம்பு: ரூ. 10,000 - ரூ. 25,000

புதுமுக கார்களில், ஆச்சரியத்தில் திகைக்க வைக்கும் வகையில் காட்சியளிக்கும் அம்சங்களில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமே முதல் இடத்தில் இருக்கின்றது. இந்த அம்சம் வழங்கக்கூடிய வசதிகள் ஏராளாம். இது தற்போதைய நவீனயுக கார்களில் தொடு திரை வசதியுடன் கிடைக்கின்றன. இதனை நம்மால் வெளிப்புறச் சந்தையில் இருந்தும் பெற முடியும்.

இந்த 5 விஷயம் இருந்தாலே போதும்... தாத்தா காலத்து கார்கூட நவீனயுக காராக மாறிவிடும்... இத வேற யாரும் சொல்ல மாட்டாங்க!

இதனை நமது காரினுள் மாற்றியமைப்பதன் மூலம், நம்முடைய வாகனத்தை வேற லெவலுக்கு அப்கிரேட் செய்யப்பட்டதைப் போன்று உணர முடியும். இதுவே, பழைய வாகனங்களை புதிய தொழில்நுட்பத்திற்கு அப்கிரேட் செய்யும் விஷயங்களில் முதலாவதாக அமைந்துள்ளது.

இந்த 5 விஷயம் இருந்தாலே போதும்... தாத்தா காலத்து கார்கூட நவீனயுக காராக மாறிவிடும்... இத வேற யாரும் சொல்ல மாட்டாங்க!

இதன் மூலம் ஆடியோ சிஸ்டம், ஜிபிஎஸ், WiFi உள்ளிட்ட பல்வேறு வசதிகளை பெற முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இதில் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ மென்பொருளை பயன்படுத்துவதன் மூலம் காரை 24X7 கண்கானிக்க முடியும். இதனால், திருட்டு பயம் துளியளவும் இருக்காது. இந்த கருவி சந்தையில் ரூ. 10,000த்தில் இருந்து ரூ. 25 ஆயிரம் வரையில் விற்கப்படுகின்றது.

இந்த 5 விஷயம் இருந்தாலே போதும்... தாத்தா காலத்து கார்கூட நவீனயுக காராக மாறிவிடும்... இத வேற யாரும் சொல்ல மாட்டாங்க!

டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம் (Tyre Pressure Monitoring System)

இதன் விலை வரம்பு: ரூ. 2,500 - ரூ. 5,000

நமக்கு இருக்கின்ற நேர பற்றாக்குறை காரணமாக காரில் இருக்கும் டயர்களில் காற்று எவ்வளவு இருக்கின்றது என்பதைக்கூட கண்டறிவதற்கு போதிய நேரம் இருப்பதில்லை. இம்மாதிரியான நேரங்களில் உதவுவதற்காகதான் டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங்கள் கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதனை ஹை எண்ட் வேரியண்ட் எஸ்யூவி கார்களில் மட்டுமே வாகன உற்பத்தி நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

இந்த 5 விஷயம் இருந்தாலே போதும்... தாத்தா காலத்து கார்கூட நவீனயுக காராக மாறிவிடும்... இத வேற யாரும் சொல்ல மாட்டாங்க!

அதாவது, ஹூண்டாய் வென்யூ மற்றும் டாடா நெக்ஸான் உள்ளிட்ட மாடல்களின் டாப் வேரியண்டுகளில் இந்த அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இம்மாதிரியான அம்சத்தை மற்ற கார்களில் பார்ப்பது கடினம். ஆனால், இதனை வெளிச்சந்தையில் இருந்து மிக எளிமையாக நம்மால் பெற முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த 5 விஷயம் இருந்தாலே போதும்... தாத்தா காலத்து கார்கூட நவீனயுக காராக மாறிவிடும்... இத வேற யாரும் சொல்ல மாட்டாங்க!

இது ரூ. 2,500ல் இருந்து ஐயாயிரம் ரூபாய் வரையிலான விலையில் விற்கப்பட்டு வருகின்றது. இதனை நமது கார்களின் டயர்களில் பொருத்துவதன்மூலம் டயர்களில் இருக்கும் காற்றின் அளவை டிஜிட்டல் திரை மூலம் காண முடியும். எனவே, காற்றடிக்கும் இடத்தில் நீண்ட நேரமாக வரிசையில் நின்று பின்னர் காற்று போதுமான அளவு உள்ளது என ஏமாந்து போக வேண்டிய நில ஏற்படாது.

இந்த 5 விஷயம் இருந்தாலே போதும்... தாத்தா காலத்து கார்கூட நவீனயுக காராக மாறிவிடும்... இத வேற யாரும் சொல்ல மாட்டாங்க!

வாகனங்களை கண்கானிக்கும் கருவி (OBD-Based Vehicle Tracking Systems)

இதன் விலை வரம்பு: ரூ. 4,000 - ரூ. 7,000

இந்த கருவி நம்முடைய காரை 24X7 இணைப்பதற்கு உதவும். அதாவது, வாகனத்தை கண்கானிக்க உதவும் முக்கிய கருவியாக உள்ளது. இது ஒன்றை இணைப்பதன் மூலம் கார் உலகின் எந்த மூலைக்குக் கொண்டு சென்றாலும் நம்மால் எளிதில் கண்டறிய முடியும். இது நமது செல்போனில் பயன்படுத்தப்படும் மைக்ரோ சிம் மூலம் இயங்கும் தன்மையைக் கொண்டுள்ளது. இது இயங்குவதற்கு 12வோல்ட் மின்சாரம் தேவைப்படுகின்றது.

இந்த 5 விஷயம் இருந்தாலே போதும்... தாத்தா காலத்து கார்கூட நவீனயுக காராக மாறிவிடும்... இத வேற யாரும் சொல்ல மாட்டாங்க!

குறிப்பாக, உடனுக்குடன் இருக்கும் இடத்தைக் கண்டறிய, இதற்கு முன்பு சென்று வந்த இடங்களைப் பற்றி தெரிந்துகொள்ள, அதிக வேகமாக இயக்கினால் அலாரம் அடிக்க இந்த கருவி பயன்படுகின்றது. இது இந்தியாவில் ரூ. 4,000 முதல் ரூ. 7,000 வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. இந்த கருவியைப் பொருத்துவதன்மூலம் வாகன திருட்டு பற்றிய கவலையை ஒழிக்க முடியும்.

இந்த 5 விஷயம் இருந்தாலே போதும்... தாத்தா காலத்து கார்கூட நவீனயுக காராக மாறிவிடும்... இத வேற யாரும் சொல்ல மாட்டாங்க!

டேஷ் கேம் (Dash Cam)

இதன் விலை வரம்பு: ரூ. 4,000 - ரூ. 10,000

இந்த அம்சம் விலையுயர்ந்த சொகுசு வாகனங்களில் கூட விருப்ப தேர்வாக மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றது. இது, மெமரி கார்டுடன் இயங்கும் எச்டி ரக கேமரா ஆகும். காரின் முன் நிகழும் காட்சிகளை இது படமாக்க உதவும். இதன் மூலம் காரை யாரேனும் சேதப்படுத்தினாலே அல்லது திருட முயற்சித்தாலோ அவர்களை எளிதாக கண்டறிய முடியும். மேலும், விபத்து காலங்களில் கிளைம் செய்வதற்கும் இந்த கேமிரா உதவும்.

இந்த 5 விஷயம் இருந்தாலே போதும்... தாத்தா காலத்து கார்கூட நவீனயுக காராக மாறிவிடும்... இத வேற யாரும் சொல்ல மாட்டாங்க!

எனவே, காரில் இருக்க வேண்டிய முக்கியமான அம்சங்களில் ஒன்றாக இதனை நாங்கள் கூறுகின்றோம். இது பல வழிகளில் நமக்கு உதவியாக இருக்கும். இந்த டேஷ் கேம் சந்தையில் நான்காயிரும் ரூபாய் முதல் பத்தாயிரம் ரூபாய் வரையிலான விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.

இந்த 5 விஷயம் இருந்தாலே போதும்... தாத்தா காலத்து கார்கூட நவீனயுக காராக மாறிவிடும்... இத வேற யாரும் சொல்ல மாட்டாங்க!

காற்று சுத்திகரிப்பான் (Air Purifier)

இதன் விலை வரம்பு: ரூ. 3,000 - ரூ. 15,000

சுற்றுப்புறத் தூய்மையின் முக்கியத்துவத்தை சமீப காலமாக உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது. ஆகையால், காற்று சுத்திகரிப்பான் அவசியத்தைப் பற்றி நீங்கள் நிச்சயம் உணர்ந்திருப்பீர்கள் என நம்புகின்றோம். இது உங்களது காரை நவீன தொழில்நுட்பத்திற்கு மாற்றுவதுடன், காருக்குள் இருக்கும் காற்றையும் தூய்மைப்படுத்தும்.

இந்த 5 விஷயம் இருந்தாலே போதும்... தாத்தா காலத்து கார்கூட நவீனயுக காராக மாறிவிடும்... இத வேற யாரும் சொல்ல மாட்டாங்க!

எனவேதான், மற்ற கருவிகளைக் காட்டிலும் இந்த கருவியை கட்டாயம் நிறுவ வேண்டும் என வாகன வல்லுநர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த அம்சத்தை தற்போது கியா நிறுவனம் அதன் குறிப்பிட்ட மாடல்களில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த காற்று சுத்திகரிப்பான் காருக்குள் தீங்கு விளைவிக்கக்கூடிய NO2, SO2 வாயுக்கள், PM 2.5 துகள்கள் மற்றும் மாசுக்களை வடிகட்ட உதவும்.

இந்த 5 விஷயம் இருந்தாலே போதும்... தாத்தா காலத்து கார்கூட நவீனயுக காராக மாறிவிடும்... இத வேற யாரும் சொல்ல மாட்டாங்க!

இந்த சுத்திகரிப்பான் இயங்குவதற்கு 12வோல்ட் மின்சாரத்தை வழங்கக்கூடிய சாக்கெட் தேவைப்படுகின்றது. இதனைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் மிகுந்த நம்பகம் கொண்ட காராக மாறிவிடுகின்றது.

நாம் மேலே பார்த்த இந்த அம்சங்கள்தான் பெரும்பாலான புதிய வாகனங்களில் கிடைக்கும் சிறப்பு வாய்ந்த தொழில்நுட்பங்களாக காட்சியளிக்கின்றன. இவற்றை நம்முடைய கார்களின் பொருத்துவதன் மூலமாகவே அதனை நவீன யூக காராக நம்மால் மாற்றிவிட முடியும்.

Most Read Articles

English summary
Ways To Make Your Old Car New Again Touchscreen System Air Purifier Other Features. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X