ஆம்புலன்ஸுக்கு வழி விட மறுத்த பாஜக தலைவர்... மம்தா பானர்ஜி மீது குற்றச்சாட்டு.. அலப்பறையின் உச்சம்!

ஆம்புலன்ஸுக்கு வழிவிட மறுத்த பாஜக தலைவரால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

ஆம்புலன்ஸுக்கு வழி விட மறுத்த பாஜக தலைவர்... மம்தா பானர்ஜி மீது குற்றச்சாட்டு... அலப்பறையின் உச்சம்...!

பாஜக கட்சி சார்பாக மேற்கு வங்கம் மாநிலம், நதியா எனும் மாவட்டத்தில் பேரணி நடைபெற்றது. இதில், அம்மாநிலத்திற்கான பாஜக தலைவர் திலிப் கோஷ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது, பேரணி நடைபெற்ற மேடை வழியாக ஆம்புலன்ஸ் வந்தது. நீண்ட நேரமாக காத்துக்கொண்டிருந்த அந்த ஆம்புலன்ஸுக்கு வழிவிட மறுத்த பாஜக தலைவர். அதனை மாற்று வழியில் செல்லும்படியும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

ஆம்புலன்ஸுக்கு வழி விட மறுத்த பாஜக தலைவர்... மம்தா பானர்ஜி மீது குற்றச்சாட்டு... அலப்பறையின் உச்சம்...!

இதுதொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளங்களான டுவிட்டர், முகப்புத்தகம் உள்ளிட்டவற்றில் வைரலாகி வருகின்றது.

பெங்காளி மொழியில் பேசிய அவர், "ஆம்புலன்ஸை திரும்பி போகச் சொல்லுங்கள். இந்த பக்கம் வழியில்லை. கட்சித் தொண்டர்கள் அமர்ந்திருக்கின்றனர். இவ்வழியாக ஆம்புலன்ஸ் சென்றால் அவர்களுக்கு தொந்தரவாக இருக்கும். எனவே, மாற்று பாதையில் செல்லச் சொல்லுங்கள். அந்த பக்கத்திலும் நிறை வழிகள் இருக்கின்றன" என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

ஆம்புலன்ஸுக்கு வழி விட மறுத்த பாஜக தலைவர்... மம்தா பானர்ஜி மீது குற்றச்சாட்டு... அலப்பறையின் உச்சம்...!

பொதுவாக ஆம்புலன்ஸ்கள் சாலையில் செல்லுமேயானால் அவற்றிற்கு உடனடியாக பாதையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற விதி போக்குவரத்து சட்டத்திலேயே இருக்கின்றது. தொடர்ந்து, அவற்றைச் செல்லவிடாமல் இடையூறு செய்தால், அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படும்.

ஆம்புலன்ஸுக்கு வழி விட மறுத்த பாஜக தலைவர்... மம்தா பானர்ஜி மீது குற்றச்சாட்டு... அலப்பறையின் உச்சம்...!

ஆனால், மேற்கு வங்கம்ம பாஜக கட்சியின் தலைவர் மீது எத்தகைய நடவடிக்கை பாயும் என்பதைப் பற்றிய தகவல் எதுவும் இல்லை. அதேசமயம், சாமானியர்கள் யாரேனும் இத்தகைய செயலை செய்திருந்தால் போலீஸாரின் தடி எப்போதோ அவர்மீது பாய்ந்திருக்கும் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை.

தொடர்ந்து சர்ச்சைக்குரிய பதிலை வெளியிட்ட பாஜக தலைவர் திலிப் கோஷ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியையும் வம்புக்கு இழுத்தார்.

ஆம்புலன்ஸுக்கு வழி விட மறுத்த பாஜக தலைவர்... மம்தா பானர்ஜி மீது குற்றச்சாட்டு... அலப்பறையின் உச்சம்...!

தங்களுடைய பேரணிக்கு இடையூறு செய்வதற்காகவே இதுபோன்று ஆம்புலன்ஸுகளை அவ்வழியாக அனுப்பி வைப்பதாக கூட்டத்தில் அவர் பேசினார். இதுகுறித்து அவர் மேலும் பேசியதாவது, "ஏராளமான பாதைகள் இருக்கும்போது, பொதுக்கூட்டம் நடைபெறும் இவ்வழியாக ஏன் ஆம்புலன்ஸுகளை அனுமதிக்கின்றனர். அதிக மக்கள் அமர்ந்திருக்கும் இந்த பாதையில் ஆம்புலன்ஸை அனுப்பினால், அவர்களுக்கு இடையூறாக இருக்காதா?... எல்லாம் உள்நோக்கத்துடன் செய்கிறார்கள். சில நாடகங்கள் இங்கு அரங்கேற்றப்படுகின்றன. ஏன் இவ்வாறு மம்தா செய்கிறார்" என்றார்.

ஆம்புலன்ஸுக்கு வழி விட மறுத்த பாஜக தலைவர்... மம்தா பானர்ஜி மீது குற்றச்சாட்டு... அலப்பறையின் உச்சம்...!

பொதுசாலையில், விரைவில் மருத்துவமனையை சேருவதற்காக வந்த ஆம்புலன்ஸை மடக்கி சர்ச்சைக்குரிய வகையில் பேசியது மட்டுமின்றி, அம்மாநில முதலமைச்சர் மீதும் பழி போடும் வகையில் பேசினார்.

பாஜக தலைவரின் இந்த செயல்பாடு மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான பாஜக கட்சியினர் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது வழக்கம்தான். ஆனால், உயிருக்காக போராடும் மனிதர்களுக்கு உதவியை வழங்கச் செல்லும் ஆன்புலன்ஸை இடைமறைத்து, மாற்று வழியாக செல்ல சொல்லுவது சற்றே வருத்தத்தை ஏற்படுத்தும் விஷயமாகவே உள்ளது.

ஆம்புலன்ஸுக்கு வழி விட மறுத்த பாஜக தலைவர்... மம்தா பானர்ஜி மீது குற்றச்சாட்டு... அலப்பறையின் உச்சம்...!

இதபோன்றதொரு சம்பவம்கூட அண்மையில் கேரளாவில் நடைபெற்றது. மத்திய அரசின் புதிய குடியுரிமைச் சட்டம் சிஏபி-க்கு எதிரான போராட்டம் களம் அது. அப்போது, பெரும் திரளாக போராட்டக்காரர்கள் அங்கு கூடியிருந்தார். இந்த நிலையில் அதேப் பாதையில் ஆம்புலன்ஸ் ஒன்றும் வந்தது. இதைக் கண்ட போராட்டக்காரர்கள் ஒருங்கிணைந்து ஆம்புலன்ஸுக்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்தனர்.

ஆம்புலன்ஸுக்கு வழி விட மறுத்த பாஜக தலைவர்... மம்தா பானர்ஜி மீது குற்றச்சாட்டு... அலப்பறையின் உச்சம்...!

ஆனால், மேற்குவங்க மாநிலத்தின் பாஜக தலைவரோ சர்ச்சைக்குரிய வகையில் பேசியதுமட்டுமின்றி, மம்தா பானர்ஜி மீதும் பழி போட்டுள்ளார்.

ஆம்புலன்ஸுக்கு வழி விட மறுத்த பாஜக தலைவர்... மம்தா பானர்ஜி மீது குற்றச்சாட்டு... அலப்பறையின் உச்சம்...!

அவர் ஆன்புலன்ஸ் விவகாரத்தில் மட்டுமின்றி ஜேஎன்யூ மாணவர்கள் தாக்குதல் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். தலையில் பலத்த காயங்களுடன் வைரலாகிய புகைப்படத்தில் இருக்கும் மாணவர், ஏதோ ஒப்பனையின் மூலமாகவே காயமுற்றதைப் போன்று நாடகமாடியதாக கூறினார்.

தொடர்ந்து சர்ச்சையான கருத்துகளை தெரிவித்து வரும் திலிப் கோஷுக்கு இணையதளவாசிகள் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

ஆம்புலன்ஸுக்கு வழி விட மறுத்த பாஜக தலைவர்... மம்தா பானர்ஜி மீது குற்றச்சாட்டு... அலப்பறையின் உச்சம்...!

உயிருக்காக போராடுபவர்களை காப்பாற்றும் நோக்கில் அவசரமாக வரும் ஆம்புலன்ஸுக்கு வழி விடுவது என்பது மிகவும் அவசியமானது. ஆனால், பெரும்பாலானோர் இதனை கடை பிடிப்பதே இல்லை. மாறாக, துளியளவும் மனிதாபிமானம் இன்றி ஆம்புலன்சுக்கு வழி விடாமல் பயணிக்கின்றனர்.

ஆம்புலன்ஸுக்கு வழி விட மறுத்த பாஜக தலைவர்... மம்தா பானர்ஜி மீது குற்றச்சாட்டு... அலப்பறையின் உச்சம்...!

ஒரு சிலரோ சிக்னலில் ஆம்புலன்ஸ் செல்லும்போது, அதன் பின்னாலே சென்று மற்ற பாதைகளை அடைத்துவிடுகின்றனர். பொதுவாக சாலையில் சிவப்பு நிற சிக்னல் இருந்தாலும் அதை மீறி ஆம்புலன்ஸால் செல்ல முடியும். இதைப்பயன்படுத்திக் கொண்டு ஆன்புலன்ஸ் பின்னால் வரும் வாகன ஓட்டிகள், அட்டைப் போல் ஒட்டிக் கொண்டு வேகமாக சிக்னலை ஜம்ப் செய்கின்றனர். இது முற்றிலும் தவிர்க்க வேண்டிய ஓர் பழக்கம் ஆகும்.

ஆம்புலன்ஸுக்கு வழி விட மறுத்த பாஜக தலைவர்... மம்தா பானர்ஜி மீது குற்றச்சாட்டு... அலப்பறையின் உச்சம்...!

ஒருவேலை உங்கள் பின்னால் சைரனை ஒலித்தவாறு ஆம்புலன்ஸ் வந்தால், பதற்றமடையாமல் வலப் பக்கமாக வாகனத்தைக் கொண்டு சென்று வழி விட வேண்டும். இல்லையேல், ஆம்புலன்ஸ் எந்த பக்கம் இருக்கின்றது என்பதைச் சுதாரித்துக்கொண்டு அதற்கேற்பவாறு வழியை விட்டால் அது அங்கிருந்து சென்று போராடும் உயிரை காப்பாற்ற உதவும்.

இது புதுசா இல்ல இருக்கு

பொதுவாக பாஜக கட்சியைச் சேர்ந்த தலைவர்களும், தொண்டர்களும் சர்ச்சைக்கு பெயர்போனவர்களாக இருக்கின்றனர். அந்தவகையில், தற்போது ஆம்புலன்ஸ்குறித்து சர்ச்சையாக பேசியதைப்போன்றே, டிராஃபிக்கில் இருந்து தப்பிப்பதற்காக பாஜக பிரமுகர் ஒருவர் தூப்பாக்கிய நீட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்த கூடுதல் தகவலை கீழே காணலாம்.

இது புதுசா இல்ல இருக்கு

அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களில் ஒரு சிலர் தாங்கள்தான் அரசாங்கம் என்பதைப் போன்று பல நேரங்களில் நடந்துக் கொள்வதை நம்மால் காண முடிகின்றது.

தாங்கள் மக்களின் நலனுக்காக பணியாற்றவே நியமிக்கப்பட்டுள்ளோம் என்பதை பல நேரங்களில் அவர்கள் மறந்து விடுகின்றனர். மேலும், அந்த செயலுக்கான பலனாக சட்ட சிக்கலிலும் அவர்கள் சிக்கிக் கொள்கின்றனர்.

இது புதுசா இல்ல இருக்கு

இந்நிலையில், உத்தரபிரதேசம் மாநிலம், பிலிஃபட் என்னும் பகுதியில் பாஜக கட்சியைச் சேர்ந்த ஓர் அரசியல் பிரமுகர் செய்த செயல் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்தவகையில், அரசியல் பிரமுகர் பயணித்த சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிப்பதற்காக, அவர் வைத்திருந்த துப்பாக்கியை நீட்டி, பொதுமக்கள் அனைவரையும் மிரட்டும் தோணியில் நடந்துக் கொண்டுள்ளார். அரசியல்வாதியின் இந்த செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது புதுசா இல்ல இருக்கு

இதற்கு முன்னதாக, டோல் கேட்டில் கட்டணம் செலுத்தாமல் ஓசியில் செல்வதற்காக ஊழியர்களைத் தாக்கியது, போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டுவிட்டு போலீஸாரிடம் வாக்குவாதம் செய்வது உள்ளிட்ட பல்வேறு அட்ராசிட்டிகளை அரசியர்கள் மேற்கொண்டு வந்தநிலையில் இது முற்றிலும் விநோதமான செயலாக இருக்கின்றது.

இது புதுசா இல்ல இருக்கு

அதேசமயம், இந்த அரசியல்வாதியின் செயலை சட்ட விரோதம் மற்றும் மிகப்பெரிய அச்சுறுத்தலை விளைவிக்கின்ற வகையிலான செயலாகவே பார்க்கப்படுகின்றது. இதுகுறித்து வெளியாகியுள்ள வீடியோவை கீழே காணலாம்...

வீடியோவில் முறைகேடாக நடந்துக் கொண்ட பாஜக அரசியல் பிரமுகரை மக்கள் சூடிக் கொண்டு காட்டமாக நடந்துக் கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதேசமயம், அவர் சென்ற சாலையில், அவரின் கார் மட்டுமின்றி பொதுமக்களுடை கார்களும் ஏராளமாக சாலையில் நிற்பதை நம்மால் காண முடிகின்றது.

இது புதுசா இல்ல இருக்கு

இந்த போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்கவே பாஜக கட்சியைச் சேர்ந்த, அந்நபர் இத்தகைய நடவடிக்கையில் இறங்கியுள்ளார். அவர் மீது பொதுமக்கள் கொடுத்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது புதுசா இல்ல இருக்கு

இந்த போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்கவே பாஜக கட்சியைச் சேர்ந்த, அந்நபர் இத்தகைய நடவடிக்கையில் இறங்கியுள்ளார். அவர் மீது பொதுமக்கள் கொடுத்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது புதுசா இல்ல இருக்கு

அதேசமயம், அவர் பயன்படுத்திய துப்பாக்கியிற்கு உரிய ஆவணங்கள் இருக்கின்றதா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. ஒருவேளை, அந்த துப்பாக்கியிற்கு உரிய அனுமதி பெறவில்லை என்றால், அரசியல் பிரமுகர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. ஏன், அவரை சிறையில்கூட அடைக்கலாம்.

இது புதுசா இல்ல இருக்கு

இதுபோன்று, போக்குவரத்து நெரிசல் மற்றும் விதிமீறல்களில் இருந்து தப்பிப்பதற்காக அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் சிலர் தங்களின் வாகனங்களில் சைரன் மற்றும் ப்ளாஷர் மின் விளக்குகளைப் பயன்படுத்துகின்றனர்.

இது புதுசா இல்ல இருக்கு

இது, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி குற்றமாகும். அவசர கால வாகனங்கள் மற்றும் போலீஸார் வாகனங்களில் மட்டுமே இத்தகைய கருவிகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது இந்திய மோட்டார் வாகன சட்டத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சைரன், ப்ளாஷர் மற்றும் விஐபி ஸ்டிக்கர்கள் போன்றவற்றை ஒட்டிக்கொண்டு விதிமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது புதுசா இல்ல இருக்கு

இதேப்போன்று, பொதுமக்களில் பலரும் போலியாக போலீஸ், பத்திரிக்கையாளர், அட்வகேட் போன்ற ஸ்டிக்கர்களை ஒட்டி போலீஸின் கெடுபிடியில் இருந்து தப்பிக்க முயற்சிக்கின்றனர். தற்போது வாகனங்களில் இதுபோன்ற ஸ்டிக்கர்களை ஒட்டுவது குற்றம் என மோட்டார் வாகன சட்டத்தில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக நம்பர் பிளேட்டுகளில் பதிவெண்ணகளைத் தவிர வேறெந்த எழுத்துக்களும் இடம்பெறக் கூடாது என்பதே அதன் முக்கிய கருத்தாகும்.

இது புதுசா இல்ல இருக்கு

இருப்பினும், இதுகுறித்து பலர் அறியாமல், இந்த தவறை செய்து போலீஸாரிடம் சிக்கிக்கொள்கின்றனர். அதேசமயம், பொதுவெளியில் துப்பாக்கிப் போன்ற எந்தவொரு ஆயுதங்களையும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்ற வகையில் பயன்படுத்தக்கூடாது என்று இந்திய அரசியலமைப்பு கூறுகின்றது. மீறினால், அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்துகின்றது. இதனடிப்படையிலேயே பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய பாஜக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
BJP Leader Blocks Ambulance Path In West Bengal. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X