ஆம்புலன்ஸில் ஆங்கில எழுத்துக்கள் தலைகீழாக எழுதப்படுவது ஏன்...? வெளிவந்தது சிதம்பர ரகசியம்..!

ஆம்புலன்ஸ்களில் ஆங்கில (ECNALUBMA) எழுத்துகள் தலைக்கீழாக எழதப்படுவதை ஏன் என உங்களுக்கு தெரியுமா...? வாருங்கள் இந்த பதிவில் அதைப்பற்றி காணலாம்.

ஆம்புலன்ஸில் ஆங்கில எழுத்துக்கள் தலைகீழாக எழுதப்படுவது ஏன்...? வெளிவந்தது சிதம்பர ரகசியம்..!

"உயிர் காப்பான் தோழன்" இந்த வாக்கியம் யாருக்கு பொருந்துகின்றதோ., இல்லையோ., நிச்சயம் ஆம்புலன்ஸுகளக்கு பொருந்தும். ஆபத்தில் இருக்கும் உயிர்களை தக்க நேரத்தில் விரைந்து சென்று காப்பதில் முதலிடத்தைப் பிடிக்கின்றன இந்த ஆம்புலன்ஸ்கள்.

ஆம்புலன்ஸில் ஆங்கில எழுத்துக்கள் தலைகீழாக எழுதப்படுவது ஏன்...? வெளிவந்தது சிதம்பர ரகசியம்..!

ஆனால், இந்த ஆம்புலன்ஸில் ஒரு சில மர்மான விஷயங்கள் நிலவுகின்றது. ஆம்புலன்ஸைப் பற்றி அறியாத விஷயங்களையே மர்மங்கள் என குறிப்பிட்டுள்ளோம்.

அந்தவகையில், நாம் அறிந்துகொள்ளாத மற்றும் வியப்பை ஏற்படுத்தும் விஷயமாக அதன் ஆங்கில வார்த்தை உள்ளது.

ஆம்புலன்ஸில் ஆங்கில எழுத்துக்கள் தலைகீழாக எழுதப்படுவது ஏன்...? வெளிவந்தது சிதம்பர ரகசியம்..!

பெரும்பாலான ஆம்புலன்ஸ்களில் ஆங்கில எழுத்துக்கள் தலைகீழாக ECNALUBMA என எழுதியிருப்பதை நாம் கண்டிருப்போம். இதனை ஏன் இவ்வாறு எழுதியிருக்கின்றனர் என்று நம்மில் பலருக்கு கேள்வியும், குழுப்பமும் இருக்கலாம். இதைதான் நாங்கள் இங்கு விளக்கவிருக்கின்றோம்.

ஆம்புலன்ஸில் ஆங்கில எழுத்துக்கள் தலைகீழாக எழுதப்படுவது ஏன்...? வெளிவந்தது சிதம்பர ரகசியம்..!

முக்கியமாக, ஆம்புலன்ஸுக்கு முன்னால் செல்லும் வாகன ஓட்டிகளை கருத்தில் கொண்டே இவ்வாறு திருப்பி எழுதப்பட்டுள்ளது. ஏனென்றால், ஆம்புலன்ஸுக்கு முன்னாள் செல்லும் வாகனங்கள், பின்னால் வருவது ஆம்புலன்ஸ் என்பதை அறிந்துக் கொள்வதற்காக இவ்வாறு எழதப்படுகின்றது.

ஆம்புலன்ஸில் ஆங்கில எழுத்துக்கள் தலைகீழாக எழுதப்படுவது ஏன்...? வெளிவந்தது சிதம்பர ரகசியம்..!

கண்ணாடி மூலம் பின்பக்கம் வரும் வாகனங்களைப் பார்க்கும்போது அது சரியாக தெரியாது. தலைகீழாக தெரியும். ஆகையால், ஆன்புலன்ஸில் எழுதும்போதே கண்ணாடிகளில் சீராக பிரதிபலிக்கின்ற வகையில் எழுதினால், அது வாகன ஓட்டிகளுக்கு எந்தவொரு சிரமுமின்றி வெளிப்படை தோற்றத்தை வழங்கும்.

மேலும், சிறிய எழுத்துகளாக இல்லாமல், சிவப்பு நிறத்தில் மிகப்பெரிய எழுத்துக்கள் அதில் பயன்படுத்தப்படுவதில் ஓர் காரணம் உண்டு.

ஆம்புலன்ஸில் ஆங்கில எழுத்துக்கள் தலைகீழாக எழுதப்படுவது ஏன்...? வெளிவந்தது சிதம்பர ரகசியம்..!

தூரத்தில் வரும் ஆம்புலன்ஸில் சிறிய எழுத்துக்கள் இருந்தால் அதை எளிதில் கண்டுபிடிக்க முடியாது என்பதற்காக மிகப்பெரிய எழுத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றது. மேலும், அதிக வெளிச்சத்தில் நிறம் மங்கி தெரியக் கூடாது என்பதற்காக எழுத்துக்களில் சிவப்பு நிறம் பயன்படுத்தப்படுகின்றது.

ஆம்புலன்ஸில் ஆங்கில எழுத்துக்கள் தலைகீழாக எழுதப்படுவது ஏன்...? வெளிவந்தது சிதம்பர ரகசியம்..!

பெரும்பாலும் இதுபோன்ற அனைத்து நடவடிக்கையும் ஆம்புலன்ஸ் சாலையில் வருகின்றது என்பதை அறிந்துகொள்வதற்காகவும், அது முன்னேறி செல்வதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவுமே செய்யப்படுகின்றது.

ஆம்புலன்ஸில் ஆங்கில எழுத்துக்கள் தலைகீழாக எழுதப்படுவது ஏன்...? வெளிவந்தது சிதம்பர ரகசியம்..!

ஆனால், இந்தியாவிலோ இது அப்படி தலைக் கீழாக இருக்கின்றது. ஆன்புலன்ஸ்தான் ஓர் உயிரை காப்பாற்றுவதற்காக வேகமாக சைரனை ஒலித்தவாறு செல்கின்றது என்றால், அதன்கூடவே மற்ற வாகன ஓட்டிகளும் ஹாரனை அடித்தவாறு அதிவேகமாக செல்கின்றனர். சரி, ஆம்புலன்ஸுக்கு வழி ஏற்படுத்தவே அவ்வாறு செல்கிறார்களா என பார்த்தால், ஆம்புன்ஸுக்கும் வழி கொடுக்காமல் அவர்கள் மட்டுமே முன்னேறி செல்லும் நோக்கில் செல்கின்றனர்.

ஆம்புலன்ஸில் ஆங்கில எழுத்துக்கள் தலைகீழாக எழுதப்படுவது ஏன்...? வெளிவந்தது சிதம்பர ரகசியம்..!

இது ஒரு புறமிருக்க, சிவப்பு சிக்னலை அதிவேகமாக கடந்து செல்லும் ஆம்புலன்ஸின் பின்னாலேயே ரத்தம் குடிக்கும் அட்டையைப் போன்று ஒட்டியவாறு ஒரு சில வாகன ஓட்டிகள் செல்கின்றனர். இதனால், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் குழப்பமடைவதுடன், சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன.

ஆம்புலன்ஸில் ஆங்கில எழுத்துக்கள் தலைகீழாக எழுதப்படுவது ஏன்...? வெளிவந்தது சிதம்பர ரகசியம்..!

சைரன் ஒலித்தவாறு செல்லும் ஆம்புலன்ஸுக்கு வழியை ஏற்படுத்திக் கொடுப்பது மிகவும் அவசியமானது. ஆனால், பெரும்பாலான வாகன ஓட்டிகள் யார் எப்படி போனால் என்ன நாம் மட்டும் முன்னேறி செல்ல வேண்டும் என எண்ணி செல்வதை நம்மால் காண முடிகின்றது. பொதுவாக, உங்கள் பின்னால், ஓர் ஆம்புலன்ஸ் சைரன் ஒலிக்க வருகின்றது என்றால், முதலில் அது செல்வதற்கு வழியைவிட வேண்டும். இல்லையெனில் உங்கள் போக்குவரத்து சட்டத்தின்கீழ் வழக்கு பதியக் கூடலாம்.

புகைப்படங்கள் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை

More from DriveSpark

Article Published On: Friday, January 10, 2020, 15:55 [IST]
English summary
Why Ambulance Using Backward Letters. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+