விளம்பரங்களில் காட்டப்படும் விலையில் ஏன் ஷோரூமில் வாகனங்கள் விற்கப்படுவதில்லை? உண்மை என்ன தெரியுமா?

விளம்பரங்களில் காட்டப்படும் காரை மனதில் வைத்து கொண்டு நாம் அதற்கான பணத்தை சிறுக சிறுக சேமித்து கொண்டு டீலர்ஷிப்பிற்கு சென்றால் அங்கு அந்த வாகனத்தின் விலை பல ஆயிரங்கள் கூடுதலாக இருக்கும். எதற்கு இந்த விலை வித்தியாசம்? உண்மையில் இந்த கூடுதல் பணம் எங்கு செல்கின்றன? இவற்றிற்கான விடைகளை இந்த செய்தியில் பார்ப்போம்.

விளம்பரங்களில் காட்டப்படும் விலையில் ஏன் ஷோரூமில் வாகனங்கள் விற்கப்படுவதில்லை? உண்மை என்ன தெரியுமா?

பல முறை கார்களை மாற்றி கொள்பவர்களுக்கு இதற்கான காரணங்கள் ஒரளவுக்கு தெரிந்திருக்கக்கூடும். ஆனால் முதன்முறையாக கார் வாங்க டீலர்ஷிப்களுக்கு செல்வோருக்கு தான் மண்டையை பிய்த்து கொள்ளும் அளவிற்கு வாகனத்தின் விலையினை விளக்கி வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள்.

விளம்பரங்களில் காட்டப்படும் விலையில் ஏன் ஷோரூமில் வாகனங்கள் விற்கப்படுவதில்லை? உண்மை என்ன தெரியுமா?

ஏனெனில் நாம் விளம்பரங்களில் பார்க்கும் கார் ஒன்றின் விலை கடைசியில் x,xx,999 என முடியும் வகையில் காட்டியிருப்பார்கள் அதை நம்பி நாம் டீலர்ஷிப்பிற்கு போனால் நிச்சயம் அந்த விலையில் கார் விற்பனை செய்யப்படாது. இந்த விலை கூடுதலுக்கு பல காரணங்களுக்கு உண்டு.

விளம்பரங்களில் காட்டப்படும் விலையில் ஏன் ஷோரூமில் வாகனங்கள் விற்கப்படுவதில்லை? உண்மை என்ன தெரியுமா?

அதாவது விளம்பரங்களில் காட்டப்படும் காரின் விலை அதன் எக்ஸ்ஷோரூம் விலையாகும். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் மற்ற எந்த சேவை கட்டண தொகைக்கும் உட்படுத்தப்படாத விலை. பெரும்பாலான அனைத்து தயாரிப்பு நிறுவனங்களும் எக்ஸ்ஷோரூம் விலையில் தான் தங்களது கார்களை அறிமுகப்படுத்தும்.

விளம்பரங்களில் காட்டப்படும் விலையில் ஏன் ஷோரூமில் வாகனங்கள் விற்கப்படுவதில்லை? உண்மை என்ன தெரியுமா?

நாடு முழுவதும் ஒரே மாதிரியான விளம்பரம் தான் ஒளிப்பரப்படுவதால் இந்த விலை தான் அதில் காட்டப்படும். ஆனால் கார் அதன்பிறகு அருகில் உள்ள டீலர்ஷிப்பிற்கு வந்த பிறகு எக்ஸ்-தொழிற்சாலை தொகை, ஜிஎஸ்டி மற்றும் டீலர் மார்ஜின் உள்பட சாலை வரி என மற்ற கட்டணங்களுக்கும் உட்படுத்தப்பட்டுவிடும்.

விளம்பரங்களில் காட்டப்படும் விலையில் ஏன் ஷோரூமில் வாகனங்கள் விற்கப்படுவதில்லை? உண்மை என்ன தெரியுமா?

பிறகு டீலர்ஷிப்கள் மூலமாக அந்த கார்கள் அந்த பகுதியில் உள்ள ஆர்டிஒ அலுவலங்களில் பதிவு செய்யப்படும். இதற்கும் சேர்த்து தான் டீலர்கள் அந்த காருக்கான விலையினை கூறுவர். வாகன பதிவு செய்வதற்கான தொகை மாநிலத்திற்கு மாநிலம் மாறும். அதுமட்டுமின்றி பதிவு செய்த பின்னர் அந்த வாகனத்திற்கு வழங்கப்படும் எண்ணிற்காக பொருத்தப்படும் நம்பர் ப்ளேட் மற்றும் ஸ்மார்ட் கார்டுகள் உள்ளிட்டவற்றிற்கும் சேர்த்து தான் அவர்கள் பணம் வசூலிப்பர்.

விளம்பரங்களில் காட்டப்படும் விலையில் ஏன் ஷோரூமில் வாகனங்கள் விற்கப்படுவதில்லை? உண்மை என்ன தெரியுமா?

ஆர்டிஒ அலுவலங்களில் பதிவு செய்யப்படும் வாகனங்களை ஆயுட்காலம் முழுவதும் சாலையில் ஓட்ட இயலாது. ஏனெனில் பதிவு செய்யும்போதே அதற்கான கால அளவு 10 வருடங்களோ அல்லது 15 வருடங்களோ என குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த காலம் முடிவடைந்தவுடன் மீண்டும் ஆர்டிஒ அலுவலத்திற்கு சென்று வாகனத்தை பதிவு செய்ய வேண்டும்.

விளம்பரங்களில் காட்டப்படும் விலையில் ஏன் ஷோரூமில் வாகனங்கள் விற்கப்படுவதில்லை? உண்மை என்ன தெரியுமா?

இதற்காக வசூலிக்கப்படும் தொகை எக்ஸ்-ஷோரூம் விலையில் 3 சதவீதத்தில் இருந்து 20 சதவீதத்திற்குள்ளாக இருக்கும். டீலர்ஷிப் பராமரிப்பு கட்டணமாக மொத்த எக்ஸ்ஷோரூம் தொகையில் 1 சதவீதம் கட்டணமாக வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது. 1 சதவீதம் மட்டும் தான் வசூலிக்க வேண்டும் என்று கடந்த 2016ல் இந்திய அரசாங்கம் அறிவித்திருந்தது.

விளம்பரங்களில் காட்டப்படும் விலையில் ஏன் ஷோரூமில் வாகனங்கள் விற்கப்படுவதில்லை? உண்மை என்ன தெரியுமா?

இவற்றுடன் வாங்கப்படும் கார் 2000சிசி-க்கும் அதிகமான டீசல் என்ஜினை கொண்டிருந்தால் எக்ஸ்ஷோரூம் விலையில் 1 சதவீதம் கூடுதலாக வசூலிக்கப்படும். இவற்றுடன் மூன்றாம் தரப்பு, பரந்த மற்றும் பூஜ்ஜிய-தேய்மானம் என வெவ்வேறு விதமான காப்பீட்டிற்கான கட்டணமும் சேர்க்கப்பட்டிருக்கும்.

விளம்பரங்களில் காட்டப்படும் விலையில் ஏன் ஷோரூமில் வாகனங்கள் விற்கப்படுவதில்லை? உண்மை என்ன தெரியுமா?

இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான கட்டணங்களையும், ஒவ்வொரு விதமான சிறப்பம்சங்களையும் கொண்டவை. இதனால் கார் வாங்கும் போது எந்த காப்பீட்டை தேர்வு செய்துள்ளோம், அதற்கு எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பதையும் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.

விளம்பரங்களில் காட்டப்படும் விலையில் ஏன் ஷோரூமில் வாகனங்கள் விற்கப்படுவதில்லை? உண்மை என்ன தெரியுமா?

தயாரிப்பு நிறுவனங்கள் இப்போதெல்லாம் தங்களது அனைத்து வாகனங்களுக்கும் உத்தரவாதத்தை கால கணக்கிலும், வாகனத்தின் பயண தூர கணக்கிலும் வழங்கி வருகின்றன. ஆனால் இவற்றுடன் வாடிக்கையாளர்கள் கூடுதல் உத்தரவாதத்தையும் கூடுதல் பணத்தை செலுத்தி பெறலாம்.

விளம்பரங்களில் காட்டப்படும் விலையில் ஏன் ஷோரூமில் வாகனங்கள் விற்கப்படுவதில்லை? உண்மை என்ன தெரியுமா?

இந்த கூடுதல் உத்தரவாதம் பணத்தை பெற்று தருவது மட்டுமில்லாமல் உத்தரவாத காலத்தை நீட்டிப்பதால் காரை சில வருடங்கள் கழித்து விற்க நினைத்தாலும் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கு நினைப்போர்களை எளிதாக கவரவும் செய்யும்.

விளம்பரங்களில் காட்டப்படும் விலையில் ஏன் ஷோரூமில் வாகனங்கள் விற்கப்படுவதில்லை? உண்மை என்ன தெரியுமா?

இவற்றுடன் காரில் தாங்கள் வழங்கிய மட் ஃப்ளாப்ஸ், ஃப்ளோர் மேட்கள், இருக்கை கவர்கள் மற்றும் கார் தலையணை உள்ளிட்டவற்றுக்கும் சேர்த்து டீலர்கள் கணக்கு போடுவார்கள். இவற்றின் விலை குறைவாக இருந்தால் பராவயில்லையே, வாங்கலாம். ஆனால் அதிகமாக தானே உள்ளது.

விளம்பரங்களில் காட்டப்படும் விலையில் ஏன் ஷோரூமில் வாகனங்கள் விற்கப்படுவதில்லை? உண்மை என்ன தெரியுமா?

இவை அனைத்தும் கூடுதல் தேர்வு தான் என்பதால் காரை வாங்குவோர் அவசர தேவை இல்லை என்றால் வெளியே வாங்கி கொள்வது சிறந்தது. இவை மட்டுமின்றி காருக்கு வருடாந்திர பராமரிப்பு தொகுப்பும் தேர்வாக வழங்கப்படுகிறது. இது தனது காருக்கு தேவை தானா என்பதை ஒரு முறைக்கு பல முறை யோசித்து பார்த்துவிட்டு பணத்தை செலுத்துங்கள்.

விளம்பரங்களில் காட்டப்படும் விலையில் ஏன் ஷோரூமில் வாகனங்கள் விற்கப்படுவதில்லை? உண்மை என்ன தெரியுமா?

இவை தவிர்த்து லாஜிட்டிக்ஸ்/ஹேண்ட்லிங் சார்ஜிங் என்ற சேவைகளை கூறியும் அவர்கள் பணம் கேட்கிறார்களே என்று பாருங்கள். ஏனெனில் இவற்றிற்கான பணத்தை ஏற்கனவே டீலர் மார்ஜிங் என்ற பெயரில் மொத்த விலையில் சேர்த்திருப்பார்கள். இதனால் இது சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றமே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விளம்பரங்களில் காட்டப்படும் விலையில் ஏன் ஷோரூமில் வாகனங்கள் விற்கப்படுவதில்லை? உண்மை என்ன தெரியுமா?

மேற்கூறப்பட்ட அனைத்து சேவை கட்டணங்களும் சேர்த்து கணக்கிட்டு இறுதியாக காட்டப்படுவது தான் அந்த வாகனத்தின் ஆன்-ரோடு தொகையாகும். இது நீங்கள் தேர்ந்தெடுந்த சேவை தேர்வுகளை பொறுத்து வேறுப்படும். அதேபோல் அந்த வாகனத்திற்கு தள்ளுப்படிகள் மற்றும் பழைய வாகனத்தை கொடுத்து எக்ஸ்சேன்ஞ் போனஸை பெறும் வசதியும் இருந்தால் அது அத்தனையும் ஆன்-ரோடு விலையை குறைக்கும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Understanding the On-Road Price of a Vehicle, Why it Cost More Than Price in Advertisement
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X