செல்போனை விட ரேட் கம்மி... உலகின் விலை குறைவான கார் இதுதான்... எவ்ளோனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

செல்போனை விட குறைவான விலையில் புதிய கார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா? இதன் விலை உங்களை இன்னும் ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும்.

செல்போனை விட ரேட் கம்மி... உலகின் விலை குறைவான கார் இதுதான்... எவ்ளோனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

இன்றைய சூழலில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொந்தமாக ஒரு கார் தேவைப்படுகிறது. அதிலும் குறிப்பாக கொரோனா வைரஸ் (கோவிட்-19) வேகமாக பரவி வரும் தற்போதைய காலகட்டத்தில், சொந்தமாக ஒரு கார் இருந்தால் நல்லது. ஏனெனில் பஸ், ரயில், ஆட்டோ, டாக்ஸி போன்ற பொது போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்தினால், கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

செல்போனை விட ரேட் கம்மி... உலகின் விலை குறைவான கார் இதுதான்... எவ்ளோனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

ஆனால் சொந்த கார் கனவை அனைவராலும் நிறைவேற்ற முடிவதில்லை. புதிய கார்கள் என்றால், பல லட்ச ரூபாயை கண்டிப்பாக செலவழிக்க வேண்டும். சரி, செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் ஒரு கார் வாங்கலாம் என நினைத்தாலும் கூட, அதன் விலையும் அதிகமாகதான் இருக்கிறது. 1 லட்ச ரூபாய்க்குள் வாங்கப்படும் யூஸ்டு கார்கள் நிறைய செலவு வைக்கின்றன.

MOST READ: 'அந்த' மாதிரி போலீஸால் இனி கல்லா கட்ட முடியாது... அப்படி ஒரு சூப்பரான மூவ்... என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

செல்போனை விட ரேட் கம்மி... உலகின் விலை குறைவான கார் இதுதான்... எவ்ளோனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

அதுவே 1 லட்ச ரூபாய்க்கும் மேலான பட்ஜெட் என்றால், ஓரளவிற்கு நல்ல காராக வாங்க முடிகிறது. அதுவும் அலைந்து திரிந்துதான் வாங்க வேண்டியதாகவுள்ளது. அப்படி இருக்கையில் செல்போனை விட குறைவான விலையில் ஒரு கார் கிடைத்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்? அப்படிப்பட்ட ஒரு காரை பற்றிதான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.

செல்போனை விட ரேட் கம்மி... உலகின் விலை குறைவான கார் இதுதான்... எவ்ளோனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

யூ-டியூப்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு வீடியோ மூலமாக இந்த கார் பற்றிய தகவல்கள் தெரிய வந்துள்ளன. சாங்லி (Changli) என்னும் பெயரில் இந்த கார் அழைக்கப்படுகிறது. அட்டை பெட்டியில் வைத்து இந்த காரை அதன் உரிமையாளருக்கு டெலிவரி செய்துள்ளனர். என்னது, அட்டை பெட்டியில் வைத்தா? என அவசரப்பட்டு சாதாரணமாக நினைத்து விடாதீர்கள்.

MOST READ: இது 5 ஸ்டார் ஹோட்டல் அல்ல... பிரதமர் மோடிக்காக வாங்கப்படும் புதிய விமானம்... விலையை பாத்து மயக்கம் போட்றாதீங்க

செல்போனை விட ரேட் கம்மி... உலகின் விலை குறைவான கார் இதுதான்... எவ்ளோனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

செல்போனை விட குறைந்த மதிப்பு கொண்ட இந்த காரின் விலையும், அதில் இடம்பெற்றிருக்கும் வசதிகளும் உங்களை நிச்சயமாக ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும். மிகவும் பிரபலமாக திகழும் இ-காமர்ஸ் வெப்சைட்டான அலிபாபாவில் ஆர்டர் செய்து, இந்த காரை அதன் உரிமையாளர் பெற்றுள்ளார். விலை குறைவான கார் என்பதால், இது பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என நினைத்து விட வேண்டாம்.

செல்போனை விட ரேட் கம்மி... உலகின் விலை குறைவான கார் இதுதான்... எவ்ளோனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

இந்த கார் முழுமையாக மெட்டலில்தான் தயாரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நல்ல இட வசதியும் இருக்கிறது. குறைந்தபட்சம் 3 பெரியவர்கள் சௌகரியமாக அமர்ந்து செல்ல முடியும். அத்துடன் அலாய் வீல்கள், பாடி கிராபிக்ஸ் உள்ளிட்டவற்றையும் இந்த கார் பெற்றுள்ளது. இதுதவிர எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ், எல்இடி டெய்ல்லைட்ஸ், எல்இடி இன்டிகேட்டர்கள் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளன.

MOST READ: கொஞ்சம் கூட எதிர்பாக்கல... புதிய கார், பைக் விலை குறையுது... மக்களுக்கு திடீரென அடித்த பெரும் அதிர்ஷ்டம்...

செல்போனை விட ரேட் கம்மி... உலகின் விலை குறைவான கார் இதுதான்... எவ்ளோனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

மேலும் லக்கேஜ்களை வைத்து கொள்வதற்காக, சிறிதளவு பூட் ஸ்பேசும் இந்த காரில் உள்ளது. விலை குறைவு என்றாலும், இந்த காருடன் ஸ்பேர் வீலையும் வழங்கியுள்ளனர். அதுவும் அலாய் வீல்தான். அத்துடன் நல்ல விஸிபிலிட்டிக்காக, பெரிய விண்டோக்கள், டர்ன் இன்டிகேட்டர்கள், முறையான ஸ்டியரிங் வீல் ஆகியவற்றையும் இந்த கார் பெற்றுள்ளது.

செல்போனை விட ரேட் கம்மி... உலகின் விலை குறைவான கார் இதுதான்... எவ்ளோனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

இதுதவிர ட்யூயல் ஸ்பீக்கர்களுடன் மியூசிக் சிஸ்டம், பார்க்கிங் சென்சார்கள் உடன் ரியர் பார்க்கிங் கேமரா, முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் என பல்வேறு வசதிகளை இந்த கார் பெற்றுள்ளது. வீடியோவின் அடிப்படையில் பார்த்தல், இந்த காரின் விலை சுமார் 900 அமெரிக்க டாலர்கள் மட்டும்தான். இந்திய மதிப்பில் கணக்கிட்டால் 70,000 ரூபாய்க்கும் குறைவு.

MOST READ: இதுக்காகதான் காத்து கிடந்தோம்... உலகின் பிரச்னைக்கு முடிவு கட்டியது சீன நிறுவனம்... அதுவும் குறைவான விலையில்...

செல்போனை விட ரேட் கம்மி... உலகின் விலை குறைவான கார் இதுதான்... எவ்ளோனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

அதாவது ஆப்பிள் ஐபோன் 11 ப்ரோ (iPhone 11 Pro) செல்போனை காட்டிலும், இந்த காரின் விலை மிகவும் குறைவு. எனினும் டெலிவரி கட்டணம் உள்ளிட்டவற்றை சேர்த்தால், இந்த காரின் விலை இன்னும் கொஞ்சம் அதிகமாக வரலாம். எப்படியாயினும் இந்த விலைக்கு இது அட்டகாசமான ஒரு கார்தான். இதில், மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இது ஒரு எலெக்ட்ரிக் கார் ஆகும்!

செல்போனை விட ரேட் கம்மி... உலகின் விலை குறைவான கார் இதுதான்... எவ்ளோனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

ஆனால் மேட்-இன்-சீனா தயாரிப்பான இதன் திறன்கள் அப்படி ஒன்றும் சொல்லி கொள்ளும்படியாக இல்லை. எனினும் அக்கம் பக்கம் சென்று வருவது போன்ற தேவைகளுக்கு இந்த கார் பயனுள்ளதாக இருக்கும். 3 பேர் பயணிக்கலாம் என்பதால், நண்பர்கள், குடும்பத்தினரை ஏற்றி கொள்ளலாம். இதுகுறித்து Jalopnik வெளியிட்டுள்ள வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

உலகின் விலை குறைவான கார் மற்றும் உலகின் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் போன்ற பல்வேறு பெருமைகள் அனேகமாக சாங்லி காரைதான் சேரும். எனினும் பாதுகாப்பு அம்சங்கள் எந்த அளவிற்கு இருக்கும்? என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் இந்த விலைக்கு, நாம் நினைப்பதை விட இந்த எலெக்ட்ரிக் கார் சிறப்பாகவே இருக்கிறது.

Most Read Articles

English summary
'World’s Cheapest Car’ Changli Made-in-China. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X