பழைய கார்களுக்கு மனித உருவம்! டிரான்ஸ்ஃபார்மர் பட வெறியரா இருப்பார் போல... எத்தன கார மாத்தியிருக்காரு!!

சீன இளைஞர் ஒருவர் பழைய கார்களை டிரான்ஸ்ஃபார்மர் திரைப்படத்தில் வரும் உருமாறும் கார்களைப் போல் மாற்றியமைத்திருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.

பழைய கார்களுக்கு மனித உருவம் கொடுத்த சீனர்... டிரான்ஸ்ஃபார்மர் பட வெறியரா இருப்பார் போல... எத்தன கார மாத்தியிருக்காரு!!

கார்களாலும் மனித உருவத்தைப் பெற முடியும் என்பதை ஹாலிவுட் திரையுலகில் வெளிவந்த ஒரு சில திரைப்படங்கள் நமக்கு உணர்த்தியிருக்கின்றன. குறிப்பாக, டிரான்ஸ்ஃபார்மர் திரைப்படத்தின் மூலம் பலர் இதை அறிந்திருப்பீர்கள்.

பழைய கார்களுக்கு மனித உருவம் கொடுத்த சீனர்... டிரான்ஸ்ஃபார்மர் பட வெறியரா இருப்பார் போல... எத்தன கார மாத்தியிருக்காரு!!

இது கிராஃபிக்ஸ் போன்ற நவீன தொழில்நுட்பங்களினாலயே சாத்தியமானது. ஆனால், இம்மாதிரியான தொழில்நுட்பம் ஏதுமின்றி இங்கு ஓர் இளைஞர் தனது கூர்மையான திறனால் பழைய கார்களை மனித உருவத்திற்கு மாற்றியமைத்திருக்கின்றார்.

பழைய கார்களுக்கு மனித உருவம் கொடுத்த சீனர்... டிரான்ஸ்ஃபார்மர் பட வெறியரா இருப்பார் போல... எத்தன கார மாத்தியிருக்காரு!!

வட சீனாவின் ஹெபே மாகாணத்தில் உள்ள பாடிங் (Baoding) எனும் பகுதியில் வசித்து வருபவர் க்வான் லிகுன். இவரே தனது நீண்ட நாள் கனவான டிரான்ஸ்ஃபார்மர் கார்களை உருவாக்கியவர். மிக தெளிவாக கூற வேண்டுமானால், பழைய பயனற்ற கார்களைக் கொண்டு டிரான்ஸ்ஃபார்மர் ஆங்கில படத்தில் வரும் உரு மாறும் கார்களைப் போல் மாற்றியமைத்திருக்கின்றார்.

பழைய கார்களுக்கு மனித உருவம் கொடுத்த சீனர்... டிரான்ஸ்ஃபார்மர் பட வெறியரா இருப்பார் போல... எத்தன கார மாத்தியிருக்காரு!!

இந்த கார்கள் உருமாற்றம் அடைவதற்கு முன்னாள், ஓர் வழக்கமான கார்களைப் போலவே காட்சியளிக்கும். இவை சாலையில் நின்றுக் கொண்டிருந்தால், ஏதோ கார் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதைப் அவைத் தோன்றும். ஆனால், இவையனைத்தும் ஒற்றை கட்டளை வரும்வரை மட்டுமே நீடிக்கும். இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ரிமோட்டில் இருந்து சமிக்ஞை வருமானால் அக்கார்கள் உடனடியாக மனித உருவத்திற்கு மாறிவிடும்.

பழைய கார்களுக்கு மனித உருவம் கொடுத்த சீனர்... டிரான்ஸ்ஃபார்மர் பட வெறியரா இருப்பார் போல... எத்தன கார மாத்தியிருக்காரு!!

இந்த கார்கள் சாதாரண நிலையில் இருக்கும்போது அவற்றை இயக்கவும் முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய திறன்பாட்டிலேயே க்வான் லிகுன் இந்த டிரான்ஸ்ஃபார்மர் கார்களை உருவாக்கியிருக்கின்றார். இதுகுறித்த வீடியோவை சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் சிஜிடிஎன் தளம் அதன் யுட்யூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

பழைய கார்களுக்கு மனித உருவம் கொடுத்த சீனர்... டிரான்ஸ்ஃபார்மர் பட வெறியரா இருப்பார் போல... எத்தன கார மாத்தியிருக்காரு!!

கருப்பு, சிவப்பு, மஞ்சள் நிறத்தில் இரண்டு என ஒட்டுமொத்தமாக நான்கு டிரான்ஸ்ஃபார்மர் கார்களை சீன இளைஞர் உருவாக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவையனைத்தையுமே பழைய கார்கள் மற்றும் பழைய கார்களின் உதிரி பாகங்கள் ஆகியவற்றைக் கொண்டே அவர் உருவாக்கியிருக்கின்றார்.

இந்த டிரான்ஸ்ஃபார்மர் கார்கள் திரும்புதல், முன்னேறுதல், கண்களை சிமிட்டுதல் உள்ளிட்ட சில செயல்களைச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆகையால், ஹாலிவுட் திரைப்படத்தில் வந்த உருமாறும் கார்களைப் போலவே இவை தோற்றமளிக்கின்றன. இவற்றை தான் மட்டுமின்றி தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்தே உருவாக்கியிருப்பதாக க்வான் லிகுன் கூறியுள்ளார்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Young Chinese Man Creates Old Car Into 'Transformers'. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X