"விலையுயர்ந்த காரில் வந்தா விட்டு விடுவோமா" -பிரபல கிரிக்கெட் வீரரை காரோடு தூக்கிய போலீஸ்..
லாக்டவுணை சீர்குலைக்கும் விதமாக சொகுசு காரில் வந்த பிரபல கிரிக்கெட் வீரரை போலீஸார் காரோடு தூக்கியிருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

உலக வல்லரசு நாடுகள்கூட கொரோனா வைரசைக் கண்டு நடு நடுங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்தியாவில் நிலைமை அப்படியே தலைகீழாக இருக்கின்றது. இதற்கு தற்போதைய இந்திய சாலைகளும், நமது மக்களுமே சான்றாக இருக்கின்றனர்.

உலக நாடுகளின் சோக நிலையைக் கண்டு இந்தியாவில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், போர் கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஆனால், மக்கள் சிலர் துளியளவும் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்காமல், கொரோனா வைரசின் தீவிரத்தைப் பற்றி அச்சமே இல்லாமல் சுற்றி திரிந்த வண்ணம் இருக்கின்றனர்.

இவ்வாறு, அரசின் அறிவிப்பை அலட்சியப் போக்குடன் கையாண்டதன் காரணத்தினாலயே உலக நாடுகள் பலவற்றில் நிலைமை மிக மோசமானதாக இருக்கின்றது. இதற்கு அமெரிக்கா, இத்தாலி, ஈரான், எக்குவடோர் உள்ளிட்ட நாடுகளே உதாரணம்.

தற்போது, ஏசு கிறிஸ்துவின் துக்க நாளை அனுசரிக்க வேண்டிய கிறிஸ்துவ நாடுகளெல்லாம் கொரோனா வைரசால் ஏற்பட்டிருக்கும் துக்கத்தை அனுசரிக்கும் விதமாக சோகத்தில் ஆழந்திருக்கின்றனர்.
இந்த நிலை இந்தியாவில் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக 144 தடை உத்தரவு தேசிய அளவில் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. இருப்பினும், மக்கள் இதனை சீர்குலைக்கும் விதமாக வீணாக சுற்றித் திரிந்த வண்ணம் இருக்கின்றனர்.

அவ்வாறு, அத்தியாவசிய தேவைக்காக அல்லாமல் வீணாக சுற்றிபவர்களுக்கு போலீஸார் மிகக் கடுமையான தண்டனைகளை வழங்கி வருகின்றனர். அந்தவகையில், லத்தி சார்ஜ் செய்வது, வழக்கு பதிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அவர்கள் எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ரிஷி தவான், அரசின் ஊரடங்கு உத்தரவை மீறி உலா வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது ரிஷி தவான் ஹிமாச்சல் பிரதேசத்தில் வசித்து வருகின்றார். இங்கு அத்தியாவசிய தேவைக்காக காலை 10 மணி முதல் 1மணி வரை மட்டுமே வெளியே வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த நேரத்தை தவிர்த்தே ரிஷி தவான் அவரது சொகுசு காரான லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் எவோக் காரில் வெளியே வந்துள்ளார்.
அப்போது அவரை மடக்கிய போலீஸார், வெளியே வந்ததற்கான காரணத்தை கேட்டுள்ளனர். அதற்கு அவர் வங்கிக்கு செல்வதற்காக வெளியே வந்ததாக தெரிவித்துள்ளார்.

ஆனால், இதற்காக அவரிடம் எந்த அனுமதி பாஸ்-ம் இல்லை. ஆகையால், அனுமதியின்றி வெளியே வந்த குற்றத்திற்காக போலீஸார் அவருக்கு அபராத செல்லாணை வழங்கினர்.
அரசு அனுமதித்த நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் வெளியே வருபவர்களுக்கு சிறப்பு பாஸ் வழங்கப்படுகின்றது.

குறிப்பிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பாஸ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இது, ஊரடங்கு உத்தரவு காலத்தில் மக்களுக்கு உதவும் வகையில் காவல்துறை வழங்கி வருகின்றது. அதேசமயம், ஊரடங்கு உத்தரவை மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்ற நோக்கில் இத்தகைய யுக்திகளைக் கையாண்டு வருகின்றது.

ஆனால், இதனை ஒரு சிலர் தவறான பயன்பாட்டிற்காக அணுகுவதாகக் கூறப்படுகின்றது. மேலும், பலர் இந்த அனுமதியைப் பெறாமலே சுற்றி திரிந்த வண்ணமும் இருக்கின்றனர். அந்தவகையில், எந்தவொரு அனுமதியின்றி சாலையில் சொகுசு காரில் வலம் வந்த காரணத்திற்காகவே இளம் கிரிக்கெட் வீரர் தவானுக்கு அபராதம் வழங்கப்பட்டிருக்கின்றது.
ஆனால், அவருக்கு எவ்வளவு அபராதத் தொகை வழங்கப்பட்டிருக்கின்றது என்பதுகுறித்த தகவல் வெளியாகவில்லை. ஆனால், அவருக்கு போலீஸார் அபராதம் செல்லாணை வழங்கும் புகைப்படங்கள் மட்டும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதேசமயம், கிரிக்கெட் வீரர் மட்டுமின்றி சில அரசியல்வாதிகளும் லாக்டவுணை சீர் குலைக்கும் விதமாக சுற்றி திரிகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








