மத்தவங்க சொல்றத விடுங்க... நம்மில் ஒருவர் டாடா நெக்ஸான் காரை பற்றி என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

பழைய மற்றும் புதிய வெர்ஷன் டாடா நெக்ஸான் எஸ்யூவி கார்களைப் பயன்படுத்திய இளைஞர் ஒருவர், அந்த கார்களைப் பற்றிய முக்கிய தகவலை கூறியிருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

மத்தவங்க சொல்றத எல்லாம் விடுங்க... நம்மில் ஒருவர் டாடா நெக்ஸான் காரை பற்றி என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

பொதுவாக, வாகனங்களைப் பற்றிய செய்தி வெளியிடும் நிறுவனங்களே இதுபோன்ற ரிவியூ தகவல்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. அதேசமயம், வாகனங்கள் மீது அதிகம் ஆர்வம் கொண்டிருப்பவர்களும் அவர்கள் விரும்பும் அல்லது பயன்படுத்தும் வாகனங்களைப் பற்றிய தகவல்களை சிறப்பு தொகுப்பாக சமூக வலைதளங்களில் வெளியிடுவதை பிடித்தமான செயலாக செய்து வருகின்றனர்.

மத்தவங்க சொல்றத எல்லாம் விடுங்க... நம்மில் ஒருவர் டாடா நெக்ஸான் காரை பற்றி என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

அந்தவகையில்தான், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஹரி ஷங்கர் என்ற இளைஞர், டாடா நெக்ஸான் பற்றிய குறிப்பிட்ட தகவல்களை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, டாடா நெக்ஸான் பிஎஸ்6 மாடலைப் பற்றி ஒரு சில தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார். இதுபோன்ற, நம்மில் ஒருவராக இருக்கும் ஓர் நபர் வெளியிடும் தகவலுக்கு சற்று கூடுதல் மதிப்பு உண்டு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

MOST READ: 20 வருஷம் ஆகியும் சூப்பர் கண்டிஷன்! இந்த குவாலிஸ் எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிஞ்சா அசந்திருவீங்க

மத்தவங்க சொல்றத எல்லாம் விடுங்க... நம்மில் ஒருவர் டாடா நெக்ஸான் காரை பற்றி என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

ஏனெனில், இணையத்தில் வெளியிடப்படும் குறிப்பிட்ட பொருள் பற்றிய ரிவியூ தகவல்கள் வாடிக்கையாளர்கள் வழங்கும் ரேட்டிங்ஸைப் பொறுத்தே வெளியிடப்படுகின்றன. எனவேதான், புதிய பொருள் ஒன்றை வாங்கச் செல்வதற்கு முன்பாக அதுகுறித்த ரேட்டிங்ஸை ஆன்-லைன் வாயிலாக ஆராய்வது நல்லது என கூறப்படுகின்றது.

மத்தவங்க சொல்றத எல்லாம் விடுங்க... நம்மில் ஒருவர் டாடா நெக்ஸான் காரை பற்றி என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

இதற்கு உதவும் வகையிலேயே ஹரி ஷங்கர் பிஎஸ்-6 நெக்ஸான் பற்றிய தகவலை பதிவிட்டுள்ளார். இதுகுறித்த தகவலை பார்ப்பதற்கு முன்பாக நெக்ஸான் பற்றிய முக்கிய தகவல்களை அறிந்துக்கொள்வது கட்டாயமான ஒன்றாக உள்ளது. ஆகையால், அதுகுறித்த சுவாரஷ்ய தகவலை முன்னதாக பார்த்துவிடலாம்.

டாடா நிறுவனத்தின் புகழ்வாய்ந்த தயாரிப்புகளில் நெக்ஸான் காரும் ஒன்று. இது ஓர் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக காராகும்.

MOST READ: பைக் விபத்தில் சிக்கினால் தானியங்கி உதவிகோரும் தொழில்நுட்பம்: பாஷ் அறிமுகம்!

மத்தவங்க சொல்றத எல்லாம் விடுங்க... நம்மில் ஒருவர் டாடா நெக்ஸான் காரை பற்றி என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

இந்த கார் இந்தியாவில் மாருதி சுசுகி விட்டார ப்ரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஃபோர்டு ஈகோஸ்போர்ட் ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கின்றது. இது இந்தியாவின் முதல் பாதுகாப்பான கார் என்பது கூடுதல் சிறப்பு வாய்ந்த தகவல் ஆகும்.

மத்தவங்க சொல்றத எல்லாம் விடுங்க... நம்மில் ஒருவர் டாடா நெக்ஸான் காரை பற்றி என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

இதுபோன்ற பல காரணங்களினாலயே இந்தியர்கள் பலர் இந்த காருக்கு நல்ல வரவேற்பை வழங்கி வருகின்றனர். குறிப்பிட்டு கூற வேண்டுமானால், இக்கார் குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய விபத்து பரிசோதனையில் ஐந்திற்கு 5 நட்சத்திரங்களைப் பெற்று சாதனைப் படைத்தது. இது விபத்தின்போது அதன் பயணிகளை எந்தளவிற்கு பாதுகாக்கும் என்பதை குறிக்கும் ஓர் ரேட்டிங் தர சான்றாகும்.

MOST READ: இந்த 5 விஷயம் இருந்தாலே போதும்... தாத்தா காலத்து கார்கூட நவீனயுக காராக மாறிவிடும்... வெளிவரா தகவல்!

மத்தவங்க சொல்றத எல்லாம் விடுங்க... நம்மில் ஒருவர் டாடா நெக்ஸான் காரை பற்றி என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

இந்த காரைதான் டாடா நிறுவனம் தற்போது புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனாக இந்திய சந்தையில் விற்பனைக்கு களமிறக்கியுள்ளது. அதாவது, அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட பிஎஸ்-6 தரத்தின்கீழ் டாடா நெக்ஸானை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.

மத்தவங்க சொல்றத எல்லாம் விடுங்க... நம்மில் ஒருவர் டாடா நெக்ஸான் காரை பற்றி என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

இந்த நிலையில்தான் இரண்டு ஆண்டுகளாக டாடா நெக்ஸான் பெட்ரோல் காரைப் பயன்படுத்தி வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஹரி ஷங்கர், பிஎஸ்-6 தரத்திலான நெக்ஸானின் டீசல் வேரியண்டை புதிதாக பயன்பாட்டு வாங்கியுள்ளார்.

MOST READ: நம்பவே முடியலையே 16 வருட பழைய காரா இது? அடேங்கப்பா என்ன ஒரு மாற்றம்... வாயை பிளக்க வைக்கும் ஸ்டைல்!

மத்தவங்க சொல்றத எல்லாம் விடுங்க... நம்மில் ஒருவர் டாடா நெக்ஸான் காரை பற்றி என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

இதைத்தொடர்ந்தே பழைய மற்றும் புதிய பிஎஸ்-6 டீசல் வேரியண்ட் நெக்ஸான் கார்களைப் பற்றிய சுவாரஷ்ய தகவல்களை பதிவிட்டுள்ளார். இதனை, வண்டிபிராந்தன்மர் (வாகன பைத்தியங்கள்) என்ற முகப்புத்தக பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

மத்தவங்க சொல்றத எல்லாம் விடுங்க... நம்மில் ஒருவர் டாடா நெக்ஸான் காரை பற்றி என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

அவர் அதில் கூறியிருப்பதாவது, பழைய பதிப்போடு ஒப்பிடுகையில் புதிய பதிப்பு நெக்ஸான் மிகவும் ஸ்டைலாக இருப்பதாகவும், அதை அவர் அதிகம் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இது, ஹரி ஷங்கர் வெளியிட்டுள்ள தகவலில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயமாக உள்ளது. ஏனெனில், டாடா நிறுவனம் அதன் கார்களை அதிக உறுதி வாய்ந்த மற்றும் பாதுகாப்பானதாக தயாரித்து வரும் அதே நேரத்தில், அவற்றி மிகுந்த ஸ்டைலான வாகங்களாகவும் மாற்றி வருகின்றது.

மத்தவங்க சொல்றத எல்லாம் விடுங்க... நம்மில் ஒருவர் டாடா நெக்ஸான் காரை பற்றி என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

அதற்கேற்ப, ஹெட்லைட், க்ரில், பனி விளக்கு, தோற்றம் உள்ளிட்டவற்றிற்கு வேற லெவல் டிசைன் தாத்பரியம் வழங்கப்பட்டு வருகின்றது. இதில்தான் அந்த இளைஞர் தற்போது மயங்கியிருக்கின்றார். குறிப்பாக, ஸ்லீக் ரகத்திலான ஹெட்லேம்ப், புரஜெக்டர் டப்பிலான எல்இடி டிஆர்எல்கள் உள்ளிட்டவை எதிர்கால வாகன தோற்றத்தை நெக்ஸானிற்கு வழங்கியிருப்பதாக அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

மத்தவங்க சொல்றத எல்லாம் விடுங்க... நம்மில் ஒருவர் டாடா நெக்ஸான் காரை பற்றி என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

எனவே, பழைய வெர்ஷனோடு ஒப்பிடுகையில் புதுப்பிக்கட்ட நெக்ஸானை தனிப்பட்ட முறையில் அவர் நேசிப்தாக தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, நெக்ஸானி எஸ்யூவி காரின் முகப்பு பகுதி பம்பர் ரிவைஸ் செய்யப்பட்டிருப்பதை அவர் உறுதிச் செய்துள்ளார். இத்துடன் அதில் காரின் நிறத் தோற்றத்திற்கு ஏற்ற ஏர் டிராம் பகுதி ஹைலைட் செய்யப்பட்டிருப்பதைும் அவர் ஆச்சரியத்துடன் தெரிவித்துள்ளார்.

மத்தவங்க சொல்றத எல்லாம் விடுங்க... நம்மில் ஒருவர் டாடா நெக்ஸான் காரை பற்றி என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

இதையடுத்து, காரில் வழங்கப்பட்டிருக்கும் மிகச் சிறிய சிறிய விஷயங்களையும் அவர் வர்ணித்துள்ளார். அந்தவகையில், எஸ் 6 பதிப்பு நெக்ஸான் காரில் வழங்கப்பட்டிருக்கும் அலாய் வீல் டாப்-எண்ட் வேரியண்டுகளில் காணப்படுவதைப் போன்று இருப்பதாக அவர் தெரிவித்தார். மேலும், காருக்குள் காணப்படும் டேஷ்போர்டு, இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், இஎஸ்பி, ஏபிஎஸ் மற்றும் ஏர்பேக்குகள் உள்ளிட்டவையும் சிகப்பு சிறப்பு தரம் வாய்ந்திருப்பதாக அவர் கூறியிருக்கின்றார்.

மத்தவங்க சொல்றத எல்லாம் விடுங்க... நம்மில் ஒருவர் டாடா நெக்ஸான் காரை பற்றி என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

இத்துடன், பின்னிருக்கையில் அமர்ந்திருப்பவர்களுக்கான ஏசி வெண்டுகள் முந்தைய மாடலைக் காட்டிலும் பெரியளவில் இருப்பதாக அவர் கூறுகிறார். ஆனால், இந்த காரை தற்போது நிலவும் பூட்டுதல் காரணமாக 250 கிமீ வரை மட்டுமே அவர் பயன்படுத்தியிருக்கின்றார். எனவே, அவரால் மேலும் பல தகவல்களை முழுமையாக கூற முடியவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார். இதுமட்டுமின்றி, தனது புதிய காரை இயக்குவதையும் இந்த லாக்டவுண் தடுத்திருப்பதாக கொரோனா வைரஸ் மீது மிகுந்த கோவத்தில் அவர் இருக்கின்றார்.

மத்தவங்க சொல்றத எல்லாம் விடுங்க... நம்மில் ஒருவர் டாடா நெக்ஸான் காரை பற்றி என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

இருப்பினும், இது பிஎஸ்-4 பெட்ரோல் நெக்ஸான் மாடலைக் காட்டிலும் அதிக மைலேஜ் வழங்கும் வெர்ஷனாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதாவது, இதற்கு முன்பு பயன்படுத்தி வந்த பெட்ரோல் வெர்ஷன் நெக்ஸான் லிட்டர் ஒன்றிற்கு 11 முதல் 15 கிமீ வரையிலான மைலேஜை வழங்கியதாகவும், புதிய பிஎஸ்-6 டீசல் எஞ்ஜின் நெக்ஸான் 17 முதல் 21 கிமீ வரை மைலேஜ் வழங்குவதாகவும் அவர் கூறுகின்றார்.

மத்தவங்க சொல்றத எல்லாம் விடுங்க... நம்மில் ஒருவர் டாடா நெக்ஸான் காரை பற்றி என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

எனவே, புதிய டாடா நெக்ஸான் பிஎஸ்-6 டீசல் கார் பெஸ்ட் எகனாமி காராகும் இருப்பது ஹரி ஷங்கர் வெளியிட்டுள்ள தகவலின்படி தெரியவந்துள்ளது.

இந்த புதுப்பிக்கப்பட்ட டாடா நெக்ஸான் டீசல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமின்றி பெட்ரோல் தேர்விலும் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது. இது 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் கிடைக்கிறது. இது அதிகபட்சமாக 120 பிஎஸ் மற்றும் 170 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும்.

மத்தவங்க சொல்றத எல்லாம் விடுங்க... நம்மில் ஒருவர் டாடா நெக்ஸான் காரை பற்றி என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

அதேபோன்று, டர்போ டீசல் எஞ்ஜின் நெக்ஸான் 110 பிஎச்பி மற்றும் 260 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். இவையிரண்டும் மேனுவல் மற்றும் ஆட்டமோட்டிக் கியர்பாக்ஸ் தேர்விலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இக்கார் இந்தியாவில் ரூ. 6.95 லட்சம் முதல் ரூ. 8.45 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

Most Read Articles

English summary
Young Man Shares Feedback About His Brand New Nexon Diesel. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X