சுட சுட லத்தி சார்ஜ்! நடு ரோட்டில் இளைஞரை வெளுத்து வாங்கிய போலீஸ்... ஏன் தெரியுமா? வீடியோ பாருங்க!

இரு போலீஸார்கள் சேர்ந்து ஒரு இளைஞரை கடுமையாக தாக்கும் வீடியோ வைரலாகி வருகின்றது. இதுகுறித்த தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

சுட சுட லத்தி சார்ஜ்.. நடு ரோட்டில் வைத்து இளைஞரை வெளுத்து வாங்கிய போலீஸ்... ஏன் தெரியுமா? வீடியோ பாருங்க!

நாடு முழுவதும் கோவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக தற்போதும் பொது முடக்கம் நீடித்த வண்ணமே இருக்கின்றது. ஒரு சில மாநிலங்கள் மட்டும் தூக்கத்தில் இருந்து தற்போதே விழித்தெழுந்ததைப் போல், பொது முடக்கத்தினால் பலனில்லை என்பதை உணர்ந்து விரைவில் பழைய இயக்க நிலைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக அறிவித்துக் கொண்டிருக்கின்றன.

சுட சுட லத்தி சார்ஜ்.. நடு ரோட்டில் வைத்து இளைஞரை வெளுத்து வாங்கிய போலீஸ்... ஏன் தெரியுமா? வீடியோ பாருங்க!

அதேசமயம், குறிப்பிட்ட சில மாநிலங்களில் தற்போதும் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் நீடித்தவாறு இருக்கின்றது. இதனால், மாலை ஆறு மணிக்கு மேல் மக்கள் வெளியில் வரவே தயக்கம் காட்டுகின்றனர்.

இந்த நிலையில், இரவு பொழுதின் வெறிச் சோடிய சாலை ஒன்றில், இளைஞர் ஒருவரை இரு போலீஸார்கள் கண் மூடித் தனமாக தாக்குவதைப் போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.

சுட சுட லத்தி சார்ஜ்.. நடு ரோட்டில் வைத்து இளைஞரை வெளுத்து வாங்கிய போலீஸ்... ஏன் தெரியுமா? வீடியோ பாருங்க!

இதுகுறித்து ஆராய்ந்தபோதில், இந்த சம்பவம் மஹாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் அரங்கேறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏன் இந்த கண் மூடித் தனமான தாக்குதல் என்ற கேள்வி உங்களுக்குள் எழும்பலாம். அந்த இளைஞர் நடு ரோட்டில் காரை நிறுத்தியபடி, அதில் இருந்த அதிக ஒலி ஸ்பீக்கரில் பாட்டு போட்டு நண்பர்களுடன் நடனம் ஆடியுள்ளார்.

சுட சுட லத்தி சார்ஜ்.. நடு ரோட்டில் வைத்து இளைஞரை வெளுத்து வாங்கிய போலீஸ்... ஏன் தெரியுமா? வீடியோ பாருங்க!

இதனாலயே, அப்போது ரோந்து வாகனத்தில் வந்த போலீஸார், அந்த இளைஞரைக் கண்டிக்கும் விதமாக தடியடி நடத்தியிருக்கின்றனர். அந்த இளைஞருடன் மேலும் இரு நண்பர்களும் இருந்துள்ளனர். ஆனால், காரின் ஓட்டுநர் மட்டுமே சிக்கிக் கொள்ள இரு நண்பர்களும் அங்கிருந்து நொடிப்பொழுதில் மாயமாகிவிட்டனர்.

சுட சுட லத்தி சார்ஜ்.. நடு ரோட்டில் வைத்து இளைஞரை வெளுத்து வாங்கிய போலீஸ்... ஏன் தெரியுமா? வீடியோ பாருங்க!

அந்த இளைஞர்கள், வெகு நேரமாக அங்கு கூடி ஆட்டம் போட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது. இந்த சம்பவம் அனைத்தையும் அந்த பகுதி வாசி ஒருவர், தன் வீட்டின் மொட்டை மாடியில் நின்றவாறு செல்போனில் படமெடுத்துள்ளார். அந்த வீடியோ காட்சிகள்தான் தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

சுட சுட லத்தி சார்ஜ்.. நடு ரோட்டில் வைத்து இளைஞரை வெளுத்து வாங்கிய போலீஸ்... ஏன் தெரியுமா? வீடியோ பாருங்க!

வீடியோவில் மூன்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தது தெரிகின்றது. அப்போதே எதிர்பாராத விதமாக போலீஸாரின் ரோந்து வாகனம் வருகின்றது. இதைக் கண்ட அவர்கள் உடனடியாக காரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்ப முயற்சிக்கின்றனர். ஆனால், அந்த போலீஸார்களோ இளைஞர்களை முன்னேறிச் செல்ல முடியாத வகையில் தங்களது வாகனத்தை முன்னிறுத்தினர்.

சுட சுட லத்தி சார்ஜ்.. நடு ரோட்டில் வைத்து இளைஞரை வெளுத்து வாங்கிய போலீஸ்... ஏன் தெரியுமா? வீடியோ பாருங்க!

இருப்பினும், இந்த இடைவெளியில் இருசக்கர வாகனத்தில் வந்திருந்த மற்றுமொரு இளைஞர் கண்ணிமைக்கும் நேரத்தில் பைக்கில் ஏறி சிட்டாக பறந்துவிட்டார். இதேபோன்று, போலிசிடம் இருந்து தப்பித்துவிடலாம் என நினைத்து காரில் ஏறி அமர்ந்த இன்னொரு இளைஞரும், தன் நண்பர் அடி வாங்குவதைப் பார்த்ததும் காரை விட்டு இறங்கி தலை தெறிக்க ஓடிவிட்டார்.

சுட சுட லத்தி சார்ஜ்.. நடு ரோட்டில் வைத்து இளைஞரை வெளுத்து வாங்கிய போலீஸ்... ஏன் தெரியுமா? வீடியோ பாருங்க!

இதற்கிடையில், அந்த இளைஞரை போலீஸார் கீழே இறங்கச் சொல்லி கட்டாயப்படுத்தினார். ஆனால், இளைஞரோ நண்பன் அடி வாங்குவதைப் போலவே தனக்கு அடி கிடைக்கலாம் என நினைத்து கீழே இறங்க முற்றிலுமாக மறுத்திவிட்டார். இதில், ஆக்ரோஷமாக போலீஸார் காரின் கதவில் லத்தியை வைத்து தாக்கினார். இருப்பினும், அந்த இளைஞர் வெளியே வர மறுத்து உள்ளேயே அமர்ந்திருந்தார்.

சுட சுட லத்தி சார்ஜ்.. நடு ரோட்டில் வைத்து இளைஞரை வெளுத்து வாங்கிய போலீஸ்... ஏன் தெரியுமா? வீடியோ பாருங்க!

இந்த சூழ்நிலையிலேயே போலீஸார் சற்று அசர்ந்த நேரம் பார்த்து அவர் அங்கிருந்து வெளியேறி மாயமானார். இதில், காரை ஓட்டி வந்தவர் மட்டும் போலீஸாரிடம் சிக்கி, கடுமையான தாக்குதலுக்கு ஆளாகினார்.

இதுகுறித்த ஒட்டுமொத்த காட்சிகளும் வெளியாகி தற்போது வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இளைஞர்கள் செய்தது குற்றமாக இருந்தாலும், இதுபோன்று கண் மூடித்தனமாக தாக்கியிருக்கக்கூடாது என அவ்விரு போலீஸார்களுக்கும் நெட்டிசன்கள் தங்களது கண்டனத்தை முன் வைத்து வருகின்றனர்.

சுட சுட லத்தி சார்ஜ்.. நடு ரோட்டில் வைத்து இளைஞரை வெளுத்து வாங்கிய போலீஸ்... ஏன் தெரியுமா? வீடியோ பாருங்க!

இளைஞர்கள் செவ்ரோலட் காரில் பயன்படுத்தியிருந்த அதிக ஒலி எழுப்பும் ஸ்பீக்கர்கள் மோட்டார் வாகன சட்டத்தின்படி விதிமீறல் செயலாகும். இந்த ஸ்பீக்கரில்தான் பாட்டு போட்டு அந்த இளைஞர்கள் நடு ரோட்டில் ஆட்டம் ஆடியிருக்கின்றனர். மேலும், இந்த சிறிது நேர சந்தோஷத்திற்கு ஆசைப்பட்டு தற்போது சிக்கலிலும் சிக்கியிருக்கின்றனர். தடியடியுடன் சேர்த்து வேறென்ன நடவடிக்கைக் காவல்துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய தகவல் வெளியாகவில்லை.

அதேசமயம், பொது முடக்க உத்தரவை மீறியது, காரில் அதிக ஒலி ஸ்பீக்கரைப் பயன்படுத்தியது, பிறருக்கு இடையூறு செய்தது ஆகியவற்றின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படலாம் என யூகிக்கப்படுகின்றது.

பொதுமுடக்க காலத்தில் விதியை மீறியதாகக் கூறி பல்வேறு கடுமையான நடவடிக்கைகளைப் போலீஸார் எடுத்துள்ளனர். மேலும், எடுத்தும் வருகின்றனர். இந்த நிலையிலேயே மஹாராஷ்டிராவில் இந்த சம்பவம் அரங்கேறியிருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Youth Busted For Playing Loud Music & Dance On Road In During Lockdown. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X